• Home  /  
  • Learn  /  
  • பெற்றோர் எனும் வாழ்க்கை நிலைக்கு தயார் ஆக செய்ய வேண்டிய 5 மிக முக்கியமானவை
பெற்றோர் எனும் வாழ்க்கை நிலைக்கு தயார் ஆக செய்ய வேண்டிய 5 மிக முக்கியமானவை

பெற்றோர் எனும் வாழ்க்கை நிலைக்கு தயார் ஆக செய்ய வேண்டிய 5 மிக முக்கியமானவை

23 Dec 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நாம் கர்ப்ப காலத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு இருப்போம். உண்மை என்னவெனில், அதை அனுபவிக்கும் வரை, நாம் அதற்கு தயாராக இருப்பதில்லை. கர்ப்ப காலம் ஒரு பெண்ணிற்கு, உடலளவில் மட்டும் மாற்றம் கொண்டு வருவதில்லை, வாழ்க்கை முறை மற்றும் மனநிலையிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பொறுப்புகள் பல நிறைந்தது. வருங்கால பெற்றோர் ஆகப் போகிறவர்கள், இந்த அழகான மாற்றத்திற்காக, தங்களது வாழ்க்கைமுறை, உணவுமுறை, ஒட்டுமொத்த உடல்நலன் ஆகியவற்றில், ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்த வேண்டும்.

பெற்றோர் ஆகப் போகிறவர்கள், தாங்கள் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது  என்று மிகவும் கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்படக் கூடிய காலம் கர்ப்பகாலம். புதிய பெற்றோராக ஆகப் போகிறவர்கள், கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டிய மிக முக்கியமான ஐந்து அம்சங்கள் என்னவென பார்க்கலாம்.

மகிழ்ச்சியான பெற்றோர் – மகிழ்ச்சியான குழந்தை 

கர்ப்பம் என்ற மகிழ்ச்சியான செய்தி, பல வகையான உணர்வுக் கலவைகளுடன் சேர்ந்தது. தவிப்பும் பதற்றமும் முக்கியப் பங்கு வகித்தாலும், மகிழ்ச்சியும் அதே அளவு

 

 

வாழ்க்கைமுறை மாற்றங்கள்

அன்னை – தந்தை ஆகப் போகிற இருவரது உடல்நலனும், ஆரோக்கியமான கர்ப்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற போதிலும், ஆரோக்கியமான குழந்தைக்கு அன்னை ஆகப் போகிறவரின் உடல் நலன் மிகமிக முக்கியமாகிறது. அன்னை தந்தை இருவருமே, நல்ல உணவுப் பழக்கத்துடன், தேவையான அளவு ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் அதிகப்படியான உடனிருக்கும் நேரம் ஆகியவற்றை கொண்ட வாழ்க்கை முறையை கடைபிடித்தல் அவசியம். ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மது அருந்துதல் , புகை பிடித்தல் போன்ற கேடு விளைவிக்கும் அடிமைப் பழக்கங்களில் இருந்து விடுபட்டு, நல்ல உடல் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகட்கு மாறுதல் வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது, தனி ஆளாக மேற்கொள்ளக் கூடிய செயல் இல்லை என்ற போதும், கணவன் – மனைவி இருவர் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில், குழந்தையை நன்முறையில் வளர்க்க, நல்ல உடல் ஆரோக்கியம் மிக அவசியம்.

 

ஊட்டச்சத்தினை பேணுதல்

பல தம்பதியர்க்கு, குறிப்பாக, தாயாகப் போகும் பெண்களுக்கு, அவர்களின் ஊட்டச்சத்தில் தேவையான மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும் காலமாக கர்ப்ப காலம் விளங்குகிறது. கர்ப்பம் குறித்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்த உடன், தம்பதியர், கருவில் வளரும் குழந்தை மீது உணர்வுப்பூர்வமாக அக்கறை கொள்ள ஆரம்பிக்கின்றனர். எனவே, தாயாகப் போகிறவர், நல்ல சத்தான  உணவுப் பழக்கங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளுதல் முக்கியம். அன்னையாகப் போகிறவர், ஆரோக்கியமான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க, பிரசவத்திற்கு தேவையான வைட்டமின்களுடன், 25 அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த மதர்ஸ் ஹார்லிக்ஸ் போன்ற துணை உணவுடன், நல்ல சரிவிகித உணவினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

 

உறுதுணையாக இருங்கள்

கர்ப்பிணிப் பெண்ணானவர், பலவகையான சுரப்பு நீர் மாற்றங்களை எதிர் கொள்வார். இதனால், மிகுந்த மனச்சோர்வு, விபரீத எண்ணங்கள், தீவிரமான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படுகிறார். இந்த சமயத்தில், பெண்ணின் கவனம் முழுதும் கணவனை விட, குழந்தையின் மீது அதிகமாக இருக்கும். தம்பதியரின் வாழ்வில், பெண்ணின் கவனிப்பு முழுதும், கணவனை விட,  குழந்தை மீது இருக்க, தந்தையானவருக்கு தான் புறக்கணிக்கப் பட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்படலாம். இங்கு முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, குழுவாக செயல்பட வேண்டும் என்பது தான். இந்த நேரத்தில், கணவன் – மனைவி இருவரும் ஒன்றாக நேரத்தினை செலவழிப்பது, அன்னையாகப் போகிறவரின் தேவைகளை புரிந்து கொள்ளுதல், மதிப்பு, அக்கறையுடன் கூடிய உடல் மற்றும் மனம் சார்ந்த ஆதரவு, இவையனைத்தும் மிக முக்கியம். இது, குழந்த பிறந்தவுடன்,கணவன் – மனைவி இருவரும் கூட்டாக செயல்பட நிச்சயம் உறுதுணையாக இருக்கும். 

 

சேமிக்கத் தொடங்குங்கள்

 

குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து முடிவெடுத்தவுடன், அல்லது, கருத்தரித்திருப்பதை அறிந்தவுடன், தனிப்பட்ட நிதிக்கு முன்னுரிமை அளிப்பது, நல்ல பழக்கம் மற்றும் சேமித்த பணத்தினை நன்முறையில் பயன்படுத்த வழிவகுக்கும். ஏற்புடைய துறைகளில் பணத்தினை முதலீடு செய்து, பற்று மற்றும் வரவுகளை நீக்கி, குழந்தையின் பாதுகாப்பான எதிர் காலத்திற்கு, அவசர கால நிதியில் சேமிக்கத் துவங்குங்கள்.

 

குழந்தை பெற்றுக் கொள்வது (குறிப்பாக முதல் குழந்தை), ஏதோ ஆழம் தெரியாத பள்ளத்துள் காலை விடுவதைப் போன்று இருக்கலாம்.உங்கள் வாழ்வு எப்படி எல்லாம் மாறும் என்பதை அனுமானிக்க முடியாது. ஆனால், நிச்சயம் உங்கள் வாழ்வு மாறும். குழந்தையின் முதல் மற்றும் பின்வரும் காலங்களுக்கு ஏற்ப சேமித்து, தாயாராகிக் கொள்வது மன அழுத்தத்தை சற்றே குறைக்க உதவும். 

மறுப்பு: நீங்கள் எடுத்துக் கொள்ள  திட்டமிட்டுள்ள ஊட்டச்சத்தின் அளவையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.

இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள்  ஆசிரியரின் கருத்துக்கள் மட்டுமே மற்றும் கல்வி உதவியாக கருதப்படுகின்றன.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you