பொதுவாக பெண்களுக்கு அழகை பராமரிப்பதில் அலாதி பிரியம் உண்டு, பெரும்பாலான பெண்கள் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு தங்கள் அழகை வீட்டிலேயே பராமரிக்கலாம். அழகு நிலையம் செல்ல நேரமின்மை, காசு விரயத்தையும் தவிர்க்கலாம்.
சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதரண சருமம், எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக கவனம் செலுத்தவேண்டும். வெயில் காலத்தில் உடலில் உள்ள தண்ணீர் வியர்வை வழியாக வெளியேறுவதால் சருமம் வறண்டு போகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறண்டு போகும். அதனால் முகத்தில் பளபளப்பு மறைந்து சருமத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளன.
- இவர்கள் ஆரஞ்சுப் பழ தோலை காயவைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பால் ஏடு சேர்த்து முகம் முழுவதும் தடவி இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவவேண்டும்.
- வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சம அளவு எடுத்து வெயிலில் கயவைத்து பொடித்து இதனை ஒரு ஸ்பூன் பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
- முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க, முட்டையின் மஞ்சள் கருவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி காயவைத்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் நாளாடைவில் சுருக்கம் மறைந்து போகும்.
- எண்ணெய் சருமத்திற்கு முல்தானி மெட்டி பவுடருடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசை குறையும்.
- முல்தானி மெட்டி பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிருதுவாகும்.
- வெயிலில் சென்று வருவதால் சருமத்தில் உள்ள புத்துணர்ச்சி குறையும். அந்த சமயத்தில் ரோஜா இதழ்களை பாலில் சிறிது நேரம் ஊறவைத்து அதனை முகத்தில் தடவி கழுவி வந்தால், புதுப்பொலிவு ஏற்படும்.
ஓட்ஸ் ஸ்கிரப்:
பொதுவாக ஓட்ஸ் மிக சிறந்த பலன்களை உள்ளடிக்கியது. உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். பின்வரும் முறைகளில் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.
ஆதாரம்: makeupandbeauty
- ஓட்ஸை பொடி செய்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி 5 முதல் 10 நிமிடம் மென்மையாக மசாஜ் போல் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
- ஓட்ஸை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, ஸ்கரப் செய்து கழுவுவதால் முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.
- ஓட்ஸ் உடன் தக்காளி சாற்றை விட்டு ஸ்கரப் செய்தால், முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். மேலும் ஓட்ஸை வைத்து ஸ்கரப் செய்வதால் சருமத்துளைகள் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல் சருமத்தின் நிறமும் கூடும்.
- ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
கண்களின் கருவளையத்திற்கான தீர்வு:
இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.
ஆதாரம்: siddham
- உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
- எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
- தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும். சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து, அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மேலே குறிப்பிட்ட எளிய டிப்ஸ்களை பயன்படுத்தி எப்போதும் பொலிவாகவும் இளமையாகவும் இருங்கள்.
பேனர் படம்: misskyra