• Home  /  
  • Learn  /  
  • உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாரா?
உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாரா?

உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாரா?

28 Jan 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

இந்த தலைப்பு உங்களை யோசிக்க வைக்கிறதா? ஆம் எனில் காரணம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. தொட்டதற்கெல்லாம் குழந்தைக்கு நோய் வருகிறதென்றால் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவு என்று தான் அர்த்தம். முதலில் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.  

இரு வகைகளில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். சுருக்கமாக சொன்னால் “வரும் முன் காப்போம்” என்ற கொள்கையே சிறந்தது. ஒன்று தகுந்த தடுப்பூசியின் மூலம் பெரிய நோய்களிலிருந்து விடுபடலாம். மற்றொன்று “சுத்தம்-சுகாதாரம்”. தகுந்த வெளிப்புற-உட்புற சுகாதாரத்தை பேணுவதன் மூலம் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

ஆதாரம்: pinimg

பின்வரும் முறைகளில் குழந்தைகளின் சுகாதாரத்தை உறுதி செய்யலாம்:

தற்போதைய நடைமுறையில் ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையில் சென்று பார்க்கும் விருந்தினரை செவிலியர்கள் முத்தம் கொடுப்பதற்கும், கையில் தூக்குவதற்கும் அனுமதிப்பதில்லை. பரிசோதனை செய்ய வரும் மருத்துவர்/செவிலியர் உள்ளிட்ட அனைவரும் கையில் கை சானிடைசர் தேய்த்துக்கொண்ட பிறகே குழந்தையின் அருகில் வருகிறார்கள். ஏனெனில் குழந்தைகளை எடுத்து முத்தம் கொடுக்கும்போது பெரியவர்களின் வாய் வழியாக கண்ணுக்கு தெரியாத கிருமிகள் குழந்தைக்கு பரவ வாய்ப்புகள் அதிகம். வெளியில் இருந்து வருபவர்களின் கைகளில் நுண் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அது குழந்தையின் தோலில் அல்ர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். பிறந்த குழந்தையின் தோல் மிகவும் சென்சிடிவ் ஆக இருப்பதே இதற்கு காரணம். எனவே குழந்தையை தூக்குவதற்கு முன் தங்கள் கைகளை கழுவிவிட்டு தூக்குவது நல்லது. 

குழந்தையின் படுக்கையறை சுத்தம்:

குழந்தையின் படுக்கையறை சுத்தம் மிக அவசியமாகிறது. நல்ல காற்றோட்டமுள்ள, வெளிச்சமான அறையை அமைப்பது மிக முக்கியம். அவர்களின் துணி, படுக்கை அனைத்தையும் கிருமி நாசினி சோப்பு திரவத்தின் மூலம் துவைத்து வெயிலில் காயவைப்பது அவசியமாகிறது. இதன் மூலம் பூஞ்சை, பாக்டீரியா தொற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்கலாம்.    

குழந்தையின் வெளிப்புற சுகாதாரம்:

குழந்தை தவழ ஆரம்பித்தவுடன் அவர்களை கண்காணிக்க வேண்டியது மிக மிக அவசியம். தவழும் குழந்தைகள் அவர்களின் கைகளை நேரடியாக வாயில் வைப்பார்கள் மற்றும் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாயில் போட்டு விடும் அபாயம் அதிகம். அத்தகைய வெளிப்புற பொருட்களின் மூலம் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் கை/கால் நகங்களை வெட்டி சுத்தமாக வைப்பது நல்லது. நக இடுக்குகளில் கிருமிகள் தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விளையாட்டு சாமான்கள் பராமரிப்பு:

பொதுவாக குழந்தைகளின் விளையாட்டு சாமான்களை தூசி, பூஞ்சை, ஈரம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து வைப்பது நல்லது. அதற்கென்று பிரத்யேகமாக கிடைக்கும் சோப்பு திரவத்தை கொண்டு குழந்தை வாயில் வைத்து விளையாடும் விளையாட்டு சாமான்களை கழுவி சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைக்கலாம். பல் முளைக்கும் குழந்தை பயன்படுத்தும் ரப்பரினாலான டீத்தர் (teether) இந்த வகை சோப்பு திரவத்தின் மூலம் கழுவி வெந்நீரில் தினமும் போடுவது நல்லது.

ஆதாரம்: babyplaza

பால்/தண்ணீர் பாட்டில்கள் கழுவுதல்:   

குழந்தைகளின் பாட்டில்களை கழுவுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது அவர்கள் வாயில் நேரடியாக பயன்படுத்தப்படுவதால் கவனத்துடன் கையாளப்படவேண்டும். அதற்கென்று கிடைக்கும் பிரத்யேக சோப்பு திரவம் மற்றும் பிரஷ்களை பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும். வீட்டில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும்  திரவ சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏன்னெனில் அவைகளை இராசயங்கள் சேர்க்கப்படுவதால் அதிக காட்டத்துடனும், வாசனை மிகுந்தும் இருக்கும், இது குழந்தைக்கு வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.             

குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பு திரவம்:

குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பு திரவம் மார்க்கெட்டில் கிடைக்கிறது என்பதை எவ்வளவு பேர் அறிவீர்கள்? குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமான தரமான பிராண்டுகளில். இவற்றை பயன்படுத்தி குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் காய்கறிகள், பழங்களின் மேல் உள்ள பூச்சிகொல்லி ரசாயனத்தை கழுவுவதற்கும், பால்/தண்ணீர் பாட்டில்களை கழுவுவதற்கும் பயன்படுத்தலாம். இது சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது.  

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதற்கிணங்க மேற்கூறிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  குழந்தைக்கு ஏற்படும் நோய் நொடிகளை முடிந்த அளவு தவிர்க்கலாம்.

பேனர் படம்:  straitstimes

#babycare

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.