28 Jan 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
உங்கள் குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகிவிட்டதா, குழந்தையை வெளியில் அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா? தங்கள் மனதில் கொள்ள வேண்டியவை இவைகள்தான். சில மணி நேர பயணமோ (அ) சில நாட்கள் பயணமோ உங்கள் குழந்தைக்கு தேவையானவற்றை உங்கள் பையில் எடுத்துவைக்க வேண்டியது உங்கள் முதல் வேலையாக இருக்கட்டும்.
சீதோஷ்ண நிலை:
நீங்கள் பயணிக்க போகும் இடத்தின் சீதோஷண நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றாற்போலான துணிமணிகளை எடுத்துவைக்க வேண்டும். குளிர் மிகுந்த பகுதி எனில் அடர்த்தியான துணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு தேவையான ஸ்வெட்டர் (sweater), சாக்ஸ் (socks), தலைக்கு குல்லாய், கையுறை (gloves) ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இது அவர்களை திடீர் வெப்பநிலை மாற்றத்தை தாக்கு பிடிக்க உதவும்.
ஆதாரம்: everydayfamily
கையிருப்பு மருந்துகள்:
சில மணிநேர பயணத்துக்கு இது தேவைப்படுவதில்லை. வெளியூர் பயணிக்கும் சமயத்தில் இது அவசியமாகிறது. குழந்தைக்கு என வீட்டில் வாங்கி வைத்திருக்கும் காய்ச்சல், சளிக்கான மருந்துகள், கோலிக் வலிக்கான மருந்துகளை உடன் எடுத்துச் செல்லுங்கள். குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சமயங்களில் அவசரத்திற்கு மருத்துவரை அணுக தாமதமாகும் நேரத்தில் மிக உதவியாக இருக்கும். எந்த மருந்துகளை குழந்தைக்கு அளிக்கும் முன்பும் அதன் காலாவதி தேதியை பரிசோதிப்பது அவசியம்.
தங்குமிட வசதி:
குழந்தைக்கு அதிகமான துணிகளை எடுத்துவைத்து கொள்ளுங்கள். குழந்தையின் துணிகளை துவைத்து காயவைக்கும் அளவுக்கு வசதிகள் இல்லாத பட்சத்தில் அணிவித்த அழுக்கு துணிகளை அணிவிக்காமல் புது துணிகளை பயன்படுத்தலாம். சில குழந்தைகள் துணிகளை ஈரமாக்க (அ) அழுக்காக்க வாய்ப்புகள் அதிகம், அச்சமயங்களில் இது உதவும். அவர்களுக்கென தனி துண்டுகள், கை, முகம் துடைக்க மெல்லிய கைக்குட்டையையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஊட்டும் உணவு மேலே சிந்தாமல் இருக்க பிப்ஸ் (bibs) போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
ஆதாரம்: imgres
அத்தியாவசிய பொருட்களின் பட்டியல்:
குழந்தைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பட்டியலிட்டு அவற்றை எடுத்து வைத்திருக்கிறீர்களா என்பதை இறுதியில் சரிபார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு தேவைப்படும் எண்ணெய், குளியலுக்கான ஷாம்பூ, சோப்பு, பவுடர், பொட்டு ஆகியவற்றையும் பட்டியலில் சேர்த்திடுங்கள். உங்கள் பிள்ளைக்கு நீங்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் பிராண்டு பொருட்கள் வெளியில் கிடைக்காத பட்சத்தில் புது வகை பிராண்டுகளை முயற்சிப்பதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை.
இவைகளை தவிர ஒரு தரமான ஹாண்ட் வாஷ் மற்றும் ஹாண்ட் சானிடைசரை கைவசம் வைத்திருங்கள். குழந்தையுடன் பயணிக்கும் நேரத்தில், அவர்களுக்கு உணவளிக்கும் முன்னரும், பின்னரும், அவர்களின் கழிப்பறை பயன்பாட்டிற்கு பின்னர், பொது இடங்களில் கைகளை வைக்கும் பட்சத்தில், கண்ணுக்கு தெரியாத கிருமிகள், கைகளின் மூலம், வாய் வழியாக அவர்களின் வயிற்றுக்குள் போக நேரிடும். இது குழந்தைக்கு தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் தேவைப்படும் சமயங்களில் கைகளை கழுவவும், தண்ணீர் இல்லாத பட்சத்தில் சானிடைசரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விளையாட்டு சாமான்கள்:
சில சிறிய விளையாட்டு சாமான்களையும் உடன் எடுத்துச் செல்லவும். திடீர் சூழ்நிலையில் அழுகும் குழந்தையை சமாளிக்க இது உதவும். புது சூழ்நிலையில் சாப்பிட மறுக்கும் குழந்தையையும் விளையாட்டு காட்டி சாப்பிட வைக்க விளையாட்டு பொருட்கள் உதவும்.
ஆதாரம்: imgres
உணவு பொருட்கள் சுகாதாரம்:
குழந்தைக்கு அளிக்கும் பழங்கள், காய்கறிகளை கழுவ அதற்கென கிடைக்கும் காய்கறி & பழங்கள் வாஷ் (Fruits & veggy wash) பயன்படுத்தி எளிதில் சுத்தப்படுத்தலாம். பிறகு தோலை நீக்கிவிட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.
மேற்கூறிய குறிப்புகளை நினைவில் கொண்டு குழந்தைக்கு தேவையானவற்றை மறக்காமல் உடன் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் பயணம் இனிதாக அமையும்.
பேனர் படம்: shopify
A