6 Mar 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
ஹேண்ட் வாஷ்களோடு ஒப்பிடுகையில் ஹேண்ட் சானிடைசர்கள் அதிக திறன் மிகுந்தவை. இவை நோய் ஏற்படுத்தும் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், ஹெச்.1.என்.1 வைரஸ் என்று நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் வரிசையாகப் படையெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் அவற்றினால் நமக்குத் தொற்று ஏற்படாமல் இருக்கச் சுகாதாரத் தற்காப்பு முறைகளைப் பின்பற்றவேண்டியது அவசியம். சுகாதாரத் தற்காப்பு நடவடிக்கைகளில் “கை சுத்திகரிப்பு” என்பது முதலிடம் பெறுகிறது.
கைகள் வழியாகத்தான் நோய்த்தொற்றுகள் அதிகம் உண்டாகின்றன. அதாவது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கைகளின் மூலமாகத்தான் நோய்க் கிருமிகள் எளிதில் பரவும். எனவே, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்குமே இது பொதுவான ஒன்று. கைகளைக் கழுவி தூய்மையாக வைத்திருக்கும்போது பிறரிடமிருந்து நமக்கு நோய்க்கிருமிகள் பரவுவதைப் பெரும்பாலும் தடுக்க முடியும்.
“கைகளின் சுகாதாரம்” என்று வரும்போது கைகளைக் கழுவ பலர் சோப் அல்லது ஹேண்ட் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்கின்றனர். தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக அங்கு ஹேண்ட் சானிடைசர்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
மேலும் சோப், ஹேண்ட் வாஷ்களோடு ஒப்பிடுகையில் ஹேண்ட் சானிடைசர்கள் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மை அதிகம் பாதுகாக்கின்றன என்று சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாகப் பல இடங்களில் ஹேண்ட் சானிடைசர்களுக்குப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
கைகளைக் கழுவ நாம் பயன்படுத்தும் ஹேண்ட் வாஷ் மற்றும் ஹேண்ட் சானிடைசர்கள் பற்றியும், இவற்றில் எது சிறந்தது என்பதைப் பற்றியும் பொது மருத்துவர் அர்ஷத் அகிலிடம் பேசினோம்.
தினமும் தூய்மையான நீரில் கைகளைக் கழுவுவது மிகவும் ஆரோக்கியமானது. பொதுவாக நாம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவுவது வழக்கம். இதைத் தவிர்த்துச் செல்லப்பிராணிகளோடு விளையாடிய பிறகு, கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, ரசாயனப் பொருள்களைக் கையாண்ட பிறகு சோப், ஹேண்ட் வாஷ் அல்லது ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தவேண்டியது அவசியம்.
முன்பெல்லாம் கைகளைச் சுத்தப்படுத்த சோப்புகளை மட்டும்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று நமக்குப் பலவித வடிவங்களிலும் நறுமணங்களிலும் ஹேண்ட் வாஷ், ஹேண்ட் சானிடைசர்கள் கிடைக்கின்றன.
ஹேண்ட் வாஷ்களோடு ஒப்பிடுகையில் ஹேண்ட் சானிடைசர்கள் அதிக திறன் மிகுந்தவை. இவை நோய் ஏற்படுத்தும் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்கின்றன. திரவம் அல்லது ஜெல் வடிவில் இருக்கும் ஹேண்ட் சானிடைசர்களை சிறிதளவு எடுத்துக்கொண்டு கைகளில் முழுவதும் தேய்த்த பிறகு கைகளில் உள்ள நோய்க்கிருமிகள் முழுவதும் செயலிழந்தது போகின்றன.
ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தும்போது கைகளைக் கழுவத் தண்ணீர் தேவைப்படும். ஆனால், ஹேண்ட் சானிடைசர்களைப் பொறுத்தவரையில் தண்ணீர் தேவையில்லை. எனவே, வெளியில் செல்லும்போதும், தண்ணீர் இல்லாத நேரங்களிலும் கைகளைச் சுத்தப்படுத்த ஹேண்ட் சானிடைசர்கள் ஏற்றவையாக இருக்கின்றன. ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்திய உடனேயே அதே கைகளால் உணவுப்பொருள்களைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்கலாம்.
இந்த ஸ்பிரே/ஜெல்லை கையில் தேய்த்த சில நிமிடங்களிலேயே அது உலர்ந்துவிடுவதால் அது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், சானிடைசர் ஸ்பிரே/ஜெல் கைகளில் தேய்த்த பிறகு அது உலர்வதற்கு முன்னால் கண்களையோ, முகத்தையோ கைகளால் தொடக் கூடாது.
ஹேண்ட் சானிடைசர்களில் ஆன்டிபயாடிக்(Antibiotics), கிளிசரால்(Glycerol), ஐசோ புரோப்பைல் ஆல்கஹால்(Isopropyl alcohol) மற்றும் நறுமணத்திற்குக் காரணமான ரசாயனங்கள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிபயாடிக் மற்றும் ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் இரண்டும் நோய்க்கிருமிகளை அழிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
கைகளைச் சுத்தம் செய்யும் முறைகள்:
முதலில் இரண்டு கைகளையும் குழாய் நீரில் கழுவ வேண்டும். சூடான அல்லது வெதுவெதுப்பான நீர் என்றால் நல்லது. இது கிடைக்காத பட்சத்தில், குளிர்ந்த நீரில் கழுவலாம். அல்லது தரமான ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தலாம் . கைகளைக் கழுவ சோப்பை எடுத்துக்கொள்வதைவிட ஹேண்ட் சானிடைசரைப் பயன்படுத்துவதே சிறந்தது என்பதை நினைவில்கொள்ளவும்.
ஆதாரம்: டாக்டர் விகடன்
பேனர் படம் : dshs.texas.gov
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
#carecomesfirst #careandhygiene #babycare #childhealth #momhealth #familyhealth
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.