• Home  /  
  • Learn  /  
  • மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார குறிப்புகள்!
மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார குறிப்புகள்!

மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார குறிப்புகள்!

12 Mar 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

 

பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். 

 

கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம்.

 

ஒரு பெண்ணின் இளம் வயதில் முதன்முதலாய் இந்த நிகழ்வு ஏற்பட்டு உதிரப்போக்கு ஆவதையே பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று அழைக்கிறார்கள். இது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயதிற்கும் மேலும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்கள் அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது.

பொது குறிப்புகள்:

  • மாதவிலக்கு நாட்களில் சுத்தமான நீரில் தினசரி தலைக்கு குளிப்பது அவசியம், தீட்டு என நினைத்துக்கொண்டு குளிக்காமல், மேலாடை மற்றும் உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது சுகாதாரமல்ல. ஏனெனில் மாதவிலக்கு நாட்களில் உடலின் வெப்ப நிலை அதிக அளவில் இருப்பதால் தலைக்கு குளிப்பதன் மூலம் உடல் சூட்டை சமப்படுத்தலாம். 
  • அந்நாட்களில் தேங்கிய நீர் நிலைகளான ஆறு , ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மாதவிலக்கின் போது கருப்பையின் வாய்ப் பகுதி திறந்து இருக்கும், அப்போது சுத்தமில்லாமல் நீரில் குளிப்பது தொற்று கிறுமிகள் பிறப்புறுப்பை பாதிக்க வழிவகுக்கும்.
  • மாதவிலக்கு நாட்களில் தினமும் இரு முறையாவது பிறப்புறுப்பை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும். சுத்தமான பருத்தி உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கை உறிஞ்சுதற்கு நாப்கின்களை பயன்படுத்தலாம், துணிகளைப் பயன்படுத்துவது என்றால் அவற்றை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி உபயோகிக்க வேண்டும், அழுக்குத் துணிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. 
  • திருமணமான பெண்கள் மாதவிலக்கு நாட்களின் போது துணையுடனான உடலுறவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இத்தகைய நாட்களில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்.
  • சானிடரி நாப்கின்களை ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை நிச்சயம் மாற்ற வேண்டும். இரவு படுக்க செல்லுமுன் நன்றாக நீரினால் பிறப்புறுப்பை சுத்தம் செய்து புதிய நாப்கின் அணிவது நல்லது. ஒரு பாதுகாப்புக்காக அடர் நிற துணிகளை தேர்வு செய்து அணிவது நல்லது, எதிர்பாராதவிதமாக துணிகளில் கறை ஏற்பட நேர்ந்தால் தேவையற்ற அசௌகரியத்தை தவிர்க்கலாம். 
  • நாப்கின் மூலம் ஏற்படும் ராஷஸ்களை கிருமி நாசினி பவுடர் அல்லது ஆன்டி ராஷஸ் கிரீம் தடவுவதன் மூலம் சரி செய்யலாம்.  
  • மாதவிலக்கின் போது பள்ளி, கல்லூரி அல்லது வேறு விசேஷங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஓரிரு நாப்கின்களை கைவசம் பையில் எடுத்துச்செல்வது அவசியம்.

 

மேலும் மாதவிலக்கின் போது போதுமான ஓய்வு உடலுக்கு அவசியமாகிறது. மேலும் அதிக தண்ணீர் குடிக்கவேண்டும், மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளையும், இளநீர், ஜூஸ் வகைகளையும் அருந்துவது அவசியமாகிறது. அதிக சூட்டை ஏற்படுத்தும் பழ வகைகள் (பப்பாளி, அன்னாசி), எள், அதிக இனிப்பு வகைகளை தவிர்ப்பது அவசியம். மேலும் 8 முதல் 10 மணிநேர தூக்கம் அவசியம். மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை உண்பதை முடிந்த வரை தவிர்ப்பது  நல்லது, ஏனெனில் அவை பின்வரும் மாதவிலக்கு சுழற்சியின் போது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.

#momhealth

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.