17 Mar 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வதுதான். ஆனால் நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் உயிர்களாவது பலியாகிவிடுகிறது. இப்படி உலகில் எந்த மூலையில் எந்த நோய் பரவினாலும் உலக நாடுகள் அனைத்துமே கைகோர்த்து அந்த நோயை கட்டுப்படுத்தவும், அதற்கு தீர்வு காணவும் முழு வீச்சில் இறங்குவதுண்டு. ஒரு சில மாதங்களாக மருத்துவத்துறையை படு வேகமாக செயல்பட வைத்திருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சாதாரண வைரஸ் தொற்றுதான் இது என்று கடந்துவிட முடியாமல் ஆளை கொல்லும் இந்த வைரஸை கண்டு தான் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன.
கொரோனா தொற்று எந்தளவிற்கு ஆபத்தானது?
கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.
56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO) சோதனை செய்து அதில் கண்டறிந்தவை:
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி அடிக்கடி கைகளை கழுவுதல். சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள். சானிடைசர் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆல்கஹால் சானிடைசர் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
உங்களுக்கும் இருமும் / தும்மும் எவருக்கும் இடையில் குறைந்தது 1 மீட்டர் (3 அடி) தூரத்தை பராமரிக்கவும். பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும் போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம். இருமும் போதோ அல்லது தும்மலின் போதோ வளைந்த முழங்கை (அ) டிஷ்யூ பயன்படுத்த வேண்டும். பின்னர் பயன்படுத்தப்பட்ட திசுக்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.
கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும்
பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் நேரம், பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் மாஸ்க் அணிவது மிக அவசியம். மூக்கு மற்றும் வாய் பகுதிகளை மறைத்திருக்கும் வகையில் மாஸ்க் அணிவது பரிந்துரைக்கப்படுகிறது. வெளியில் சென்று வந்த பிறகு (அ) இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கைகளை ஹாண்ட் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.
பொது அறிகுறிகள்:
கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். அதன் அறிகுறி முதலில் காய்ச்சலாக தொடங்கும், பின் வறட்டு இருமல் ஏற்படும் அதன்பின் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.
சராசரியாக கொரோனா அறிகுறிகள் வெளியே தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென்படுவதற்கு முன்னரே அவர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சமூகத்திடம் ஒட்டுதலை தவிர்த்தல்:
மற்றவர்களுடன் உடல் ரீதியான தொடர்பைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும்.
மற்றவர்களுடன் குலுக்கிய கைகளை கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதன் மூலம் மூக்கு வாய் மூலம் வைரஸ்கள் உடலினுள் பரவ வாய்ப்பு உள்ளது.
கையுறை (gloves) அணிவது பயனுள்ளதா?
இல்லை. ரப்பர் கையுறைகளின் மேல் வைரஸ் தங்கியிருந்தால் அதே கைகளை கொண்டு முகத்தை துடைக்கும்போது வைரஸ் பாதிக்க வாய்ப்புகள் அதிகம். உங்கள் கைகளை தவறாமல் கழுவுவது ரப்பர் கையுறைகளை அணிவதை விட அதிக பாதுகாப்பை வழங்குகிறது.
சிகிச்சையும் மருந்தும்:
இதற்கான சிகிச்சை என்பது நோயுற்றவர்களின், நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் வரையில் உடலை தொடர்ந்து இயங்க செய்வதாகும். சுவாசக் கருவிகள் கொண்டு ஆதரவு வழங்க வேண்டும். கொரோனா தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
A