20 Mar 2020 | 1 min Read
Komal
Author | 138 Articles
`Covid -19 கொரோனா வைரஸ் தொற்று ஓர் உலகளாவிய பெருந்தொற்று’ என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்திருப்பதையடுத்து உலக நாடுகள் எல்லாம் நோய் பரவாமல் தடுக்க அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுத்தி ருக்கிறது. இந்த நெருக்கடி நிலையை ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவிதமாகக் கையாளுகின்றன.
நமது மத்திய/மாநில அரசுகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் யாரும் கூட்டம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால் (shopping mall), விழாக்கள், கொண்டாட்டங்கள், திரை அரங்குகள் போன்றவற்றில் கூடுவதை தவிர்க்கவும், முடிந்த அளவு வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்துகிறது.
சமூக இடைவெளியின் அவசியம்
ஆதாரம் : bisnis
சமூக இடைவெளி என்பது ஒருவருடன் நெருங்கிய தொடர்பு, தொடுதல், அணைத்தல், ஒருவர் பின் மற்றொருவர் ஒட்டி நிற்றல், பொது வாகனத்தில் பயணம், கூட்ட நெரிசல் போன்றவை. ஒருவருக்கும் மற்றொருவருக்குமான இடைவெளி குறைந்தது 6 மீட்டர் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
இதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை.
வெளிநாடுகள் செல்ல/வர தடை
ஆதாரம் : cnbcfm
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரவும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் அரசின் மருத்துவ கண்காணிப்பில் 14 நாட்கள் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வீட்டிலிருந்தபடியே அலுவலக பணி
பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. பயணநேரம், அலுவலக சூழ்நிலை மூலம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவே இந்த நடைமுறையை கடைபிடிக்க அரசு கட்டளையிட்டுள்ளது.
கைகளில் கொரோனா முத்திரை
ஆதாரம் : static.langimg
ஒரு சிலரை வீடுகளில் தனிமைப்படுத்தி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், மற்றவர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும்படியும் கையில் மையினால் முத்திரை குத்தும் முறையை மகாராஷ்டிரா மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரத பிரதமர் உரை
கொரோனா வைரஸ் குறித்து நம்மிடையே நிலவும் அச்சத்தை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாரத பிரதமர் மக்களிடையே உரையாற்றினர். அதன் விவரம் வருமாறு:
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாரத பிரதமர் உரையாற்றியது மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், பயத்தையும் குறைத்துள்ளது எனலாம்.
அடிப்படை முன்னெச்சரிக்கைகள்
தனிமனித சுகாதாரம் என்பது இச்சமயத்தில் கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுதல், ஆல்கஹால் அடிப்படையிலான ஹாண்ட் சானிடைசர்களை பயன்படுத்துதல், வீடுகளை கிருமி நாசினி சோப்புகளை கொண்டு சுத்தப்படுத்துதல், தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை அல்லது முழங்கையை மறைத்து மற்றவர்களின் மீது நீர்த்துளிகள் தெறிக்காத வகையில் சுகாதாரத்தை கடைபிடித்தல். வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லுதல் போன்றவை.
பேனர் படம் : vikatan
A