1 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பக்காலம் என்பது கடவுள் அளித்த வரம். அதனில் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடனே வீட்டிலுள்ள பெரியவர்கள் முதலில் கூறும் அறிவுரை, மாடி ஏறுவது குறித்து தான். மாடி ஏறுவது என்ன அவ்வளவு ஆபத்தா? மாடி ஏறுவதனால் அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.
மாடி ஏறுவது ஆபத்தா?
மாடியில் பாதுகாப்பான முறையில் ஏறுவது கண்டிப்பாக ஆபத்தான ஒன்றல்ல. ஆனாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற காரணங்கள், கர்ப்பிணிகளுக்கு பதட்டத்தை உண்டாக்கும். அப்போது மாடிப்படியில் ஏறுவது சரியான அறிவுரையாக நிச்சயம் இருக்காது.
மாடிப்படி ஏறுவதாலும் நன்மைகள் உண்டு தெரியுமா?
ஆம், மாடிப்படி ஏறுவது ஆபத்தான ஒன்று என்றாலும், கர்ப்பத்தின் தொடக்கத்தில் பாதுகாப்பான முறையில் ஏறுவதில் சில நன்மைகளும் இருக்கிறது. அதிக படிகள் ஏறுவதையும் தவிர்க்கவும். அவை என்னவென்பதை விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
1. இரத்த அழுத்தம் (ப்ரீ-எக்ளாம்ப்சியா) குறைதல்:
கர்ப்பிணிகளுக்கு இரத்த அழுத்தம் மிகுதியாவது சாதாரண ஒன்றே. பொதுவாக, கர்ப்பக்காலத்தில் அவர்களுடைய மனநிலையானது ஊஞ்சலை போல அங்கும் இங்கும் ஊசலாடிக்கொண்டே இருக்கும். ஆனால், மாடி ஏறுவதனால் கர்ப்பிணிகளின் இரத்த அழுத்தம் மிகுதியாவது குறைய செய்கிறது.
2. கர்ப்பக்கால சர்க்கரை நோய் குறைய வாய்ப்பு:
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் மாடிப்படி ஏறுவதால் கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சர்க்கரை நோய் குறைய வாய்ப்பிருக்கிறது.
3. முதுகுவலி மற்றும் மலச்சிக்கல் குறைதல்:
நடைப்பயிற்சி, மாடிப்படி ஏறுதல் போன்றவை கர்ப்ப காலத்தில் வரக்கூடிய முதுகுவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. அதோடு, பிரசவத்திற்கும் கர்ப்பிணிகளை தயார்படுத்துகிறது.
எப்போது கர்ப்பகாலத்தில் படி ஏறுவதை தவிர்க்க வேண்டும்?
மாடிப்படி ஏறும்போது எதனை கவனத்தில் கொள்ள வேண்டும்?
கர்ப்பத்தின் பிந்தைய நிலையில் மாடி ஏறுவது ஏன் பாதுகாப்பற்றது?
தடுமாற்றம்: இப்போது கருவில் உள்ள குழந்தைகள் நல்ல வளர்ச்சியை அடைந்திருப்பர். அதனால், உங்கள் வயிறு வழக்கத்தை விட மிகவும் பெரிதாக தெரியும். இதனால் நடக்கும்போது தடுமாற்றம் ஏற்படலாம். அது, கருவில் உள்ள உங்கள் குழந்தையையும் பாதிக்கலாம். அதனால் தவிர்க்க வேண்டும்.
முதுகில் ஏற்படும் அழுத்தம்: வயிறு பெரியதாக இருக்கும்போது, ஏதோ வயிற்றில் கூடுதலாக இருப்பது போன்று நாம் உணர செய்வோம். மாடிப்படி ஏற முயன்றால், மயக்கம் வரும்போது மிகப்பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தக்கூடும். அதனால் தவிர்க்க வேண்டும்.
கால் வீக்கம்: கர்ப்பிணிகளுக்கு கால் வீங்குவது ஒரு பொதுவான பிரச்சனையே. ஆனால், மாடிப்படி ஏறும்போது கூடுதலாக வீக்கம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூச்சு விடுவதில் சிரமம்: மாடிப்படி ஏறுவதால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகலாம். இதனால், நம் குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய ஆக்சிஜனிலும் பற்றாக்குறை ஏற்படலாம்.
பேலன்ஸ் செய்யமுடியாமல் போகுதல்: வயிறு பெரியதாக இருக்கும்போது நம்மால் மாடிப்படி ஏறுவது மிகவும் கடினம். நம் உடல் சமநிலை அற்று இருப்பதால், பேலன்ஸ் செய்ய முடியாமல் போக வாய்ப்புண்டு.
கர்ப்பிணிகளே, மாடிப்படி ஏறுவதை குறித்த உங்களுடைய சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம். உங்களது கர்ப்பகாலம் ஆரோக்கியம் மிகுந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் அமைய வாழ்த்துகிறோம்.
A