3 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
எடை கூடுதலாக இருந்தாலும் உங்களுடைய கர்ப்ப காலமானது ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை முதலில் நினைவில் கொள்ளவும். ஆனாலும், உடல் எடை பருமனாக இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் நிறை குறியீட்டு எண் எனப்படும் பி.எம்.ஐ, கர்ப்ப காலத்தின்போது கரெக்ட்டாக இருக்க வேண்டும். இல்லையேல், உங்கள் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் உடல்நிலையை அது பாதிக்க வாய்ப்புண்டு.
பி.எம்.ஐ எப்படி கணக்கிடப்படுகிறது?
உங்களின் உடல் எடை மற்றும் உயரத்தை கொண்டு பி.எம்.ஐ கணக்கிடப்படுகிறது.
உடல் எடை எப்படி கணக்கிடப்படுகிறது?
1. பி.எம்.ஐ அளவு 18.5-இற்கும் குறைவாக இருந்தால், எடைக்குறைவு எனப்படும்.
2. பி.எம்.ஐ அளவு 18.5-24.9 ஆக இருந்தால், நார்மல் எடை தான் அது.
3. பி.எம்.ஐ அளவு 25.0-29.9 ஆக இருந்தால், அதிக எடை எனப்படும்.
4. பி.எம்.ஐ அளவு 30.0 ஆகவும், அதற்கு மேலும் இருந்தால் உடல் பருமன் எனப்படும்.
பி.எம்.ஐ எண் அதிகமாக இருந்தால் பாதிப்பு ஏற்படுமா?
குழந்தையை இது எவ்வாறு பாதிக்கிறது?
கர்ப்பமாக இருக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?
கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பி.எம்.ஐ எண் குறித்து கூடுதல் கவனம் கொண்டிருக்க வேண்டும். அடிக்கடி உங்களது எடையை செக் செய்வதோடு, பிள்ளையின் ஆரோக்கியம் குறித்து டாக்டரிடம் கேட்டறிவதன் மூலமாக உங்களுடைய கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாக மாற்ற முடியும்.
கர்ப்பமாகிவிட்டேன், உடல் பருமனாக இருக்கிறேன் என்ற கவலை ஒருபோதும் வேண்டாம். கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதலே உங்களுடைய உடல் எடை குறித்து டாக்டரிடம் கேட்டறிந்து வருவதால் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து மகிழ்வான தருணத்தை அடைய முடியும்.
உடல் பருமனாக இருப்பவர், கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாக ஆக்குவது எப்படி?
உங்களின் பி.எம்.ஐ அளவு 30 அல்லது அதற்கு மேலிருந்து, கர்ப்பமாக நினைத்தால், ஆரோக்கியம் குறித்து டாக்டர் ஆலோசனை பெறுவது நல்லது. அவர்கள் உங்களுக்கு முன்பேறுகால வைட்டமின் மாத்திரைகளை வழங்குவர்.
முன்பேறு கால மருத்துவ ஆலோசனைகளின் மூலமாக தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் சரியாக கண்காணிக்கப்படும். இவற்றுள், தாயின் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
உங்களின் மருத்துவர் ஆலோசனை பெற்று ஆரோக்கியமான உணவு முறையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதோடு, உங்கள் எடை கூடுகிறதா? குறைகிறதா? என்பதையும் கண்டிப்பாக கவனித்து ஆலோசனை பெறுவது நல்லது.
தண்ணீர் அதிகமாகவும் குடிப்பது நல்லது
உங்களுடைய கர்ப்ப காலத்தின் போது வாக்கிங் செல்வது, நீச்சல், இதயம் நுரையீரலுக்கு நன்மை அளிக்கும் ஏரோபிக் எனப்படும் காற்றுப்பயிற்சி போன்றவற்றை செய்து உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருவேளை நீச்சல் உங்களுக்கு தெரியுமென்றால், பிரசவத்துக்கு அது மிகவும் உதவக்கூடிய ஒன்று என்பதை மறவாதீர். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்கவே நீச்சல் பயிற்சியும் வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?
1. பாஸ்ட் ஃபுட்
2. வறுத்த உணவு
3. மைக்ரோவேவில் வைத்த உணவு
4. சோடா அடங்கிய பானங்கள்
5. இனிப்பு
முன்பு உடல் பருமன், பிரசவத்தின் போது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி வந்தது என்றாலும், இன்றைய நாளில் முறையான உடற்பயிற்சி, டாக்டர் ஆலோசனை, உணவு பழக்கவழக்க முறையால் இதனை வெல்ல முடிகிறது என்பதே உண்மை.
உடற்பயிற்சி குறித்து நாம் அறிய வேண்டியது எது?
மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்கவே எந்தவொரு பயிற்சியையும் செய்ய வேண்டும். அதேபோல, மெல்ல தொடங்கி ஒரு நாளைக்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. ஒரு வாரம் கழித்து கூடுதலாக ஒரு 5 நிமிடம் செய்யலாம்.
எனவே கர்ப்பிணிகளே, பருமன் என்பது ஒரு பிரச்சனையே அல்ல. முறையான மருத்துவர் ஆலோசனையுடன் அவர் சொல்வதை கேட்டு நாம் நடந்தால் பருமனை வென்று பிரசவத்தில் அழகிய குழந்தையை ஈன்று ஆரவாரம் பொங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.