• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பமாக இருக்கும் போது தேவைப்படும் ஊட்டச்சத்துகள்
கர்ப்பமாக இருக்கும் போது தேவைப்படும் ஊட்டச்சத்துகள்

கர்ப்பமாக இருக்கும் போது தேவைப்படும் ஊட்டச்சத்துகள்

9 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்பமாக இருக்கும்போது பல வித மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம், ஹார்மோன்கள் தான். பிரசவத்துக்கு முன்னால், முடிந்தளவு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போது தான் பிரசவத்தின் போது, எந்தவித சிரமங்களும் இல்லாமல் இருக்கும். இப்போது இந்த பயனுள்ள பதிவின் மூலம், கர்ப்பமாக இருக்கும்போது எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்களை எல்லாம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

 

எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் வேண்டும்?

நுண்ணிய ஊட்டச்சத்துக்கள்:

இவை தான் வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள். இவை நமக்கு குறைந்த அளவிலேயே தேவையும்படுகிறது.

 

பேரூட்டச்சத்துக்கள்:

கலோரிகளையும், ஆற்றலையும் வழங்குவது இந்த வகை ஊட்டச்சத்துக்கள். நமக்கு இதன் மூலமாக கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து மற்றும் கொழுப்புகளும் கிடைக்கிறது. கர்ப்பமாக இருக்கும்போது இந்த வகை ஊட்டச்சத்து நமக்கு அதிகமாக வேண்டும்.

 

எந்த ஊட்டச்சத்து, எவ்வளவு வேண்டும்?

1. கால்சியம் ஊட்டச்சத்து சுமார் 1000 மில்லிகிராம் அளவு கர்ப்பிணிகளுக்கு தினமும் தேவை.

2. அதேபோல, ஃபோலேட் ஊட்டச்சத்து, 600 மைக்ரோ கிராம் அளவு தினசரி தேவைப்படுகிறது.

3. இரும்புச்சத்து 27 மில்லிகிராம் அளவு நமக்கு தேவைப்படுகிறது.

4. புரதச்சத்து, 70 கிராம் அளவு தினமும் தேவை. ஒவ்வொரு மூன்று மாதங்களும் முடிவடைய இதனை நாம் அதிகமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

 

நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உண்ண வேண்டிய ஊட்டச்சத்துக்கள் எவை?

  • புரதச்சத்து
  • காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள்
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
  • வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள்

 

எவற்றிலெல்லாம் புரதச்சத்து உள்ளது?

  • சிக்கன்
  • கிழங்கான் மீன்
  • பருப்பு வகைகள்
  • பீனட் பட்டர்
  • பீன்ஸ்

 

புரதச்சத்து தேவையின் அளவு ஒவ்வொரு மூன்று மாதமும் மாறும்.

கால்சியம்:

கால்சியம் நம்முடைய பிள்ளையின் எலும்பை வலுவாக்க உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு 1000 மில்லிகிராம் அளவு கால்சியம் தேவைப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு இரண்டு வேளையாக 500 மில்லிகிராம் அளவு தேவைப்படுகிறது.

 

எவற்றிலெல்லாம் கால்சியம் உள்ளது?

  • பால்
  • தயிர்
  • சீஸ்
  • கிழங்கான், கெளுத்தி, இறால், போன்ற குறைவான மெர்குரி உள்ள மீன்
  • பச்சை கீரை வகைகள்

 

ஃபோலேட்:

இதனை ஃபோலிக் அமிலம் என்றும் அழைப்பர். இது நம்முடைய பிள்ளைகளின் நரம்பு குழாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது. குறிப்பாக நம் பிள்ளைகளின் மூளை மற்றும் தண்டு வடத்துக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

 

எவற்றிலெல்லாம் ஃபோலேட் உள்ளது?

  • கல்லீரல்
  • பருப்புக்கள்
  • காய்ந்த பீன்ஸ்
  • முட்டை
  • கீரை வகைகள்

 

இரும்புச்சத்து:

இரும்புச்சத்தானது சோடியம், பொட்டாசியம், நீருடன் இணைந்து செயல்படுகிறது. இவை, நமக்கும், நம் பிள்ளைக்கும் தேவையான ஆக்சிஜனை உறுதி செய்கிறது.

நமக்கு தினமும் சுமார் 27 மில்லிகிராம் இரும்புச்சத்து, வைட்டமின் C ஊட்டச்சத்தை உறிஞ்ச தேவைப்படுகிறது.

 

எவற்றிலெல்லாம் இரும்புச்சத்து உள்ளது?

  • பச்சை கீரைகள்
  • சிட்ரஸ் பழங்கள்
  • தானிய பிரெட்டுகள்
  • முட்டை

 

கருத வேண்டிய மற்ற ஊட்டச்சத்துக்கள் எவை?

1. கர்ப்பமாக இருக்கும்போது கோளின், உப்பு, வைட்டமின் B போன்றவையும் தேவைப்படுகிறது.
2. தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். பிரெனெட்டல் வைட்டமின்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. நாம் டாக்டரிடம் பரிந்துரை பெற்று தேவையான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளலாம்.

 

கர்ப்பக்கால பசி:

நமக்கு இந்த சமயத்தில் சாப்பிட கூடாத உணவு மேலெல்லாம் ஒரு ஆசை வரலாம். இதற்கு காரணம் ஹார்மோன்கள் மட்டும் தான். பதப்படுத்தப்பட்ட உணவையும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் நாம் தவிர்ப்பது நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் மிகவும் நல்லது.

 

கர்ப்பகால உணவு வெறுப்பு:

உணவின் மீது வெறுப்பும் இப்போது ஏற்படும். ஆனால், ஆரோக்கியமான உணவை தவிர்ப்பதால் நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் சிரமத்தை உண்டாக்கும்.

 

பிகா:

ஊட்டச்சத்தே இல்லாத உணவை உண்ண ஆர்வம் வருவது பிகா எனப்படும். களிமண், சாம்பல் போன்றவற்றை கூட சாப்பிட தோன்றும்.

இந்த பிரச்சனை நமக்கு வருகிறதென்றால், நம் உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் மிக குறைவாக இருப்பதாக அர்த்தமாகும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் நாம் மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.

கர்ப்பிணிகளே, இப்போது எந்த ஊட்டச்சத்து எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவின் மூலம் நீங்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். பிள்ளையை பெற்றெடுக்க காத்திருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்.

#momnutrition #pregnancymustknow

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.