பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் சூப்பர் உணவு

cover-image
பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் சூப்பர் உணவு

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அம்மாவை விட அதிக அக்கறை காட்ட யாராலும் நிச்சயம் முடியாது. சொல்லப்போனால், தான் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கூட மறந்து பிள்ளைகள் சாப்பிடுவதை ஆசையாக பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அம்மாக்கள் தான். பிள்ளைகளின் ஞாபக சக்தி, கற்றல் திறன் போன்றவை எல்லாம் நாம் அளிக்கும் ஆரோக்கியமான உணவை பொறுத்தே அமையும் ஒன்றாகும். அப்படிப்பட்ட அற்புதமான உணவு, நம் பிள்ளையின் மூளை வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை தான் நாம் இந்த பயனுள்ள பதிவில் பார்க்க போகிறோம்.

 

பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவு எவை?

1. தயிர்:

இது நம்முடைய பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு அற்புதமான உணவாகும். தயிர், மூளை செல் மெம்பிரான்களை சவுகரியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தகவலை அனுப்பி பெற இந்த செல்கள் தான் நமக்கு உதவி செய்யும். B காம்பிளக்ஸ் வைட்டமின்கள் தயிரில் இருப்பதால், மூளை திசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

2. காய்கறிகள்:

காய்கறிகளில் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை மூளை செல்களின் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகளில் முக்கியமானவை, சர்க்கரைவள்ளி கிழங்கு, பூசணி விதைகள், கேரட்டுகள் போன்றவையாகும். பசலைக்கீரையில் ஃபோலேட் உள்ளது. இவையும் நம் பிள்ளையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் ஒரு கீரை வகையாகும்.

 

3. பிராக்கோலி:

நம்முடைய பிள்ளையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மற்றுமோர் முக்கியமான காய்கறி பிராக்கோலி ஆகும். இவற்றுள் டோகோசாஹெக்செனாயிக் அமிலம் இருப்பதால் நியூரான் இணைப்புகளுக்கு உதவுகிறது. அதோடு இதில், கேன்சரை எதிர்க்கும் குணப்பண்புகளும் உள்ளது. இது நம்முடைய பிள்ளையின் மூளை வளர்ச்சிக்கு சூப்பர் உணவாகும்.

 

4. பட்டர்புரூட்:

மூளை ஆரோக்கியத்துக்கு உதவும் முக்கியமான பழம் அவகோடா ஆகும். இதில் நிறைவுறாத கொழுப்பு அதிகமுள்ளது. இது நம்முடைய மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு, பிள்ளைகளின் இரத்த அழுத்தத்தை பாதுகாப்பதிலும் பட்டர்புரூட் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

5. மீன்கள்:

கிழங்கான், சூரை மீன், கானாங்கெளுத்தி போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை மூளை திசுவை கட்டமைக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நம்முடைய பிள்ளைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மீன்களை அடிக்கடி உண்ணும்போது, பிள்ளைகளின் மனநிலை மேம்படவும் செய்கிறது.

 

6. முட்டைகள்:

முட்டை, ஊட்டச்சத்துக்களின் கூடாரமாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், கோளின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை நம் பிள்ளைகளின் கவனிக்கும் திறனில் பங்கு வகிப்பவையாகும். கோளின் நம்முடைய பிள்ளைகளின் ஞாபக சக்தியில் முக்கிய பங்காற்றுகிறது.

 

7. தானியங்கள்:

இந்த தானியங்கள் நம்முடைய பிள்ளையின் கவனிக்கும் திறனிற்கு உதவுகிறது. இதில் உள்ள ஃபோலேட், மூளை செயல்பாட்டுக்கு உதவும் ஒன்றாகும்.

 

8. பருப்பு வகைகள்:

வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவை அற்புதமான மூளை வளர்ச்சி உணவாகும். வைட்டமின் E, இவற்றுள் அதிகம் இருப்பதால் அறிவாற்றல் சிதைவை தடுக்கிறது. இது போன்ற பருப்புகளில் துத்தநாகம் இருப்பதால் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுகிறது.

 

9. பெர்ரி பழங்கள்:

எலியை வைத்து ஆய்வு செய்தபோது, பெர்ரி பழங்கள் மூளை செயல்பாட்டுக்கு உதவியது தெரிகிறது. இதில் உள்ள வைட்டமின் C, நம்முடைய பிள்ளைகளின் ஞாபக சக்திக்கு உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

 

10. ஓட்ஸ்மீல்:

ஓட்ஸில் செய்யப்பட்ட உணவு நம்முடைய பிள்ளைகளின் நினைவாற்றலை வளர்க்கிறது. அதோடு மட்டுமல்லாமல், ஓட்ஸில் வைட்டமின் E, துத்தநாகம், B-காம்பிளக்ஸ் வைட்டமின்களும் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து, நம் பிள்ளைகளின் ஆற்றலுக்கு துணை புரிகிறது.

 

11. வல்லாரைக்கீரை:

நம் பிள்ளைகளுக்கு வல்லாரையில் துவையல் செய்தும் நாம் கொடுக்கலாம். வல்லாரைக்கீரை நம்முடைய பிள்ளைகளின் ஞாபக சக்தியை வளர்க்க உதவுகிறது.

நண்பிகளே, நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு இது போன்ற ஆரோக்கியமான உணவை தந்து அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவலாமே. அதோடு, வேறு என்னவெல்லாம், உங்களின் பிள்ளை மூளை வளர்ச்சிக்காக நீங்கள் தருகிறீர்கள் என்பதை கமெண்ட் செக்சனில் மற்ற அம்மாக்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே.

#boostingchildevelopment #childnutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!