11 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
கர்ப்பமாக இருக்கும்போது நாம், நம்முடைய பிள்ளைக்கும் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதனால், ஒவ்வாமை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற உணவை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான உணவை உண்ணுவதன் மூலம், அவை நம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவும். இப்போது எவற்றை எல்லாம் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் நாம் படித்து பயன் பெறுவோம்.
1. மெர்குரி அதிகமுள்ள மீன்:
அதிக நச்சுத்தன்மை கொண்ட ஒரு பொருள் மெர்குரியாகும். இதனை எடுத்துக்கொள்வதனால், நரம்பு மண்டலம், எதிர்ப்பு சக்தி மண்டலம், சிறுநீரகம் போன்றவை நச்சுத்தன்மைக்கு உள்ளாகலாம். நம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சியையும் இது முடக்கலாம்.
மாசடைந்த தண்ணீரில் இந்த மெர்குரி அதிகம் காணப்படுகிறது. அதிலும் கடலிலுள்ள பெரிய மீன்களில் இந்த மெர்குரி அதிகமுள்ளது. அதனால், தாய்ப்பால் தரும் அம்மாக்களும், கர்ப்பிணிகளும் இதனை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
எவற்றிலெல்லாம் அதிக மெர்குரி உள்ளது?
எவற்றிலெல்லாம் குறைவான மெர்குரி உள்ளது?
2. அரை நிலையில் வேகவைத்த மீன்:
பாதி வேகவைத்த மீனை சாப்பிட்டால் பலவித தொற்று அபாயங்கள் உண்டு. இதனில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்றவை காணப்படுகின்றன.
இதனால் நீர்ப்போக்கு, பலவீனமடைதல் போன்ற பிரச்சனை வரலாம். ஒரு சில தொற்றுகள் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
அதனால் மீனை சுடவைத்து சாப்பிடுவது நல்லதல்ல. கருவாடும் சாப்பிடுவதை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும்.
லிஸ்டேரியா எனப்படும் பாக்டீரியா நஞ்சுக்கொடி வழியாக பிள்ளையை சென்றடைந்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
3. பதப்படுத்தப்பட்ட, பாதி வேகவைத்த கறி:
இதுவும் நமக்கு தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பிள்ளைகளுக்கு இந்த நேரத்தில் தொற்று வந்தால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
இறைச்சி துண்டுகளில் இது போன்ற பாக்டீரியா தங்க அதிக வாய்ப்புண்டு. அதனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வெகு நேரம் வெளியில் வைத்திருந்த இறைச்சி போன்றவற்றை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
4. பச்சை முட்டைகள்:
பச்சை முட்டைகளில் சால்மனெல்லா எனப்படும் பாக்டீரியா உள்ளது. இதனால், காய்ச்சல், குமட்டல், வாந்தி எடுத்தல், வயிற்று பிடிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.
பின்வருவனவற்றை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், அவை:
5. காஃபைன்:
நீங்கள் டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா? இருந்தாலும் கர்ப்பிணிகள் இதனை தவிர்ப்பது நல்லது. முடிந்தளவு நாம் குடிக்கும் டீ, காபி அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். இவை எளிதில் உறிஞ்சப்பட்டு நஞ்சுக்கொடிக்கு எளிதில் செல்கிறது. நாம் காஃபைனை கர்ப்பமாக இருக்கும்போது எடுத்துக்கொண்டால், இதனால் கருவிலுள்ள பிள்ளைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதோடு, அவர்களின் எடையையும் இது பாதிக்கிறது.
6. சுத்தம் செய்யாதவை:
சுத்தமாக கழுவாத அல்லது தோலுரிக்காத காய்கறிகள் மற்றும் பழங்களில் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் அதிகமுள்ளது.
இதனால் தொற்றுகள் ஏற்பட காய்ச்சலும் வரக்கூடும்.
அதனால் தோலுரிக்காத, சுத்தமாக கழுவாத காய்கறிகள் மற்றும் பழங்களை கர்ப்பமாக இருக்கும்போது நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
7. ஜங்க் ஃபுட்:
இப்போது ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நமக்கும், நம்முடைய கருவில் வளரும் பிள்ளைக்கும் நல்லது. புரதச்சத்து, ஃபோலேட், கோளின், இரும்புச்சத்து போன்றவை இப்போது நமக்கு முக்கியமான ஊட்டச்சத்தாகும். ஜங்க் ஃபுட்டை கண்டிப்பாக நாம் தவிர்க்க வேண்டும்.
பீட்சா, வறுத்த உணவு, பர்கர் போன்ற சத்தில்லாத உணவுகளை இப்போது நாம் தவிர்ப்பது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவும். கருவில் வளரும் பிள்ளைக்கும் மிகவும் நல்லது.
நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தும் எந்தவொரு ஆரோக்கியமற்ற உணவின் மீது வரும் ஆசையை கட்டுப்படுத்துவதே சிறந்தது.
வறுத்த உணவு, சுட்ட மீன், கருவாடு, அரை வேக்காட்டில் உள்ள முட்டை போன்றவை சுவையாக இருந்தாலும், உடலுக்கு ஏற்றதாக இப்போது இருக்காது. அதேபோல, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்றவற்றையும் நாம் இப்போது தவிர்க்க வேண்டும். உங்களுக்கு பிடித்த உணவு எது? எதனை உங்களுக்காகவும், உங்கள் கருவில் வளரும் பிள்ளைக்காகவும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? நீங்களும் மற்ற அம்மாக்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.