பிள்ளைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சிறந்த வழிகள்

cover-image
பிள்ளைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சிறந்த வழிகள்

பெற்றோர்கள் தான், எப்போதுமே பிள்ளைகளுக்கு ரோல் மாடல். நம்மை பார்த்து தான் அவர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். நாம் என்ன ஆடை அணிகிறோம், நாம் எவ்வளவு நேரம் போன் வைத்திருக்கிறோம் என எல்லாவற்றிலும் நம்மை தான் அவர்கள் ரோல் மாடலாக பார்க்கின்றனர். நாம் சேமித்தால் தான், அதே பழக்கம் நம்முடைய பிள்ளைகளுக்கும் வரும். சிறு வயதிலேயே நாம் சேமிக்க கற்றுக்கொடுப்பதால், பணத்தின் அருமையை அவர்களால் இளம் பருவத்திலேயே உணர முடிகிறது. இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி என்பதை இந்த சுவாரஸ்யமான பதிவின் மூலம் நாம் காண்போம்.

 

சேமிப்பு பழக்கம் பற்றி என்ன அறிய வேண்டும்?

நம்முடைய வாழ்க்கையை வெற்றிக்கரமாக கடக்க சேமிப்பு பழக்கமும் அவசியமான ஒன்றாகும். எதற்காக நாம் எவ்வளவு செலவிட வேண்டும்? அவற்றுள் பயனுள்ள விஷயத்திற்காக நாம் செலவிட்டது எவ்வளவு போன்றவற்றை சிறுவயது முதலே பிள்ளைகள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆடைக்கு எவ்வளவு செலவு செய்வது என தொடங்கி, ஹெல்த் கேர், படிப்பு, பரிசு கொடுத்தல், விடுமுறை சுற்றுலா, பொழுதுபோக்கு என ஒவ்வொன்றுக்கு நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென்பதை பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவயதிலேயே நாம் கற்று தருவது நல்லது.

இன்றைய நாளில் பல பிள்ளைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள் சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கியுள்ளனர் என்பதே உண்மை.

நாம் சேமிப்பு பழக்கத்தை நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்காமல் விட்டாலும், காலம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அனுபவத்தை ஏதோவொரு சூழலில் உருவாக்குகிறது.

 

இளம் வயதில் எப்படி கற்றுத்தருவது?

1. நாம் கற்றுக்கொடுக்கும் வயதை பொறுத்து, அணுகும் முறைகள் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, அவர்களின் சிறு வயது என்றால், பொம்மை உண்டியல்களை அவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம்.

2. ஆரம்பத்தில் சாக்லேட்டுகள் போன்றவற்றை சேர்க்க அவர்களை நாம் ஊக்குவிக்கலாம். வீட்டிற்கு வரும் குட்டீஸ்களுக்கு, நாம் ஏற்கனவே சேர்த்து வைத்த சாக்லேட்டுகளை பகிர்ந்தளிக்க சொல்லலாம்.

3. அவர்கள் வளர்ந்த பிறகு காசு மற்றும் பணத்தை சேமிக்க நாம் பழக்கப்படுத்தலாம். இதனை சேமிப்பதால், என்னவெல்லாம் நன்மை அவர்களுக்கு கிடைக்குமென்பதை நாம் புரியவைக்கலாம்.

4. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை நாம் பயன்படுத்தினால் கூட, எதற்காக அதனை பயன்படுத்துகிறோம். அதனால் என்ன நன்மை? எந்த தேவைக்காக இப்போது அதனை அவசரமாக பயன்படுத்துகிறோம் போன்றவற்றை அவர்களுக்கு புரிய வைக்கலாம்.

5. நம்முடைய பிள்ளைகளின் இளம் வயதில், சேமிப்பை காட்டிலும் செலவு செய்வதில் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பார்கள். எனவே, எதற்கு மட்டும் நாம் செலவு செய்ய வேண்டும்? தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதால் ஏற்படக்கூடிய தீங்குகள் போன்றவற்றை நாம் அவர்களுக்கு வேடிக்கையான முறையில் புரிய வைக்கலாம்.

6. ‘அம்மாவும் சேர்த்தேன். அதனால் தான் என்னால் இந்த பலனை பெற முடிந்தது.’ என நீங்கள் சேமித்து கிடைத்த பலனை மேற்கோள் காட்டி அவர்களை ஊக்குவிக்கலாம்.

7. அதேபோல, அவர்கள் ஒவ்வொரு முறை ஏதேனும் ஒரு சிறு தொகையை சேமித்தால் கூட, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தி அவர்களை உற்சாகமடைய செய்யுங்கள்.

 

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு:

அவர்களிடம் பணம் இருந்தால், அதனை எதற்காகவெல்லாம் செலவு செய்யலாம், அதனை கொண்டு எப்படி பலன் பெறலாம் போன்றவற்றையும் நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் சொல்லி தந்து வளர்க்கலாம்.

நாம் சேர்க்கும் பணம் எப்படி மென்மேலும் பெருகும் என்பதை அவர்களுக்கு புரியவைத்து ஆர்வத்தை தூண்டலாம்.

 

வங்கி கணக்கு தொடங்குதல்:

அவர்களின் உண்டியலில் சேர்த்த காசு, வங்கியில் போடுமளவுக்கு போதுமான அளவு உள்ளதென நீங்கள் நினைத்தால், அவர்களுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கி, அதில் டெபாசிட் செய்து ஊக்குவிக்கலாம்.

இந்த செயல்முறையை செய்யும்போது அவர்களையும் கையோடு அழைத்து செல்ல வேண்டும். அதேபோல, வட்டி விகிதம் போன்றவற்றையும் நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கலாம்.

 

பெரிய ஜாடி:

அவர்கள் சேமிப்பு பழக்கத்தை சரியாக கடைப்பிடிக்கும்போது, அவர்கள் சேமிப்பதற்கான இலக்கை பெருக்கி கொண்டே போக வேண்டும். அதற்கு ஏற்றார் போல சேமிப்பு ஜாடிகளை அவர்களுக்கு கொடுத்து நாம் மென்மேலும் ஊக்குவிக்கலாம்.

 

இரசீதுகளை சேமிக்கும் பழக்கம்:

அவர்கள் செய்யும் செலவுக்கான இரசீதையும் சேமித்து வைக்க பழக்கப்படுத்தலாம். இதனால், அவர்கள் எதற்காக எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்ற புள்ளி விவரத்தை சிறு வயதிலேயே அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

அம்மாக்களே, நான் என்னுடைய பிள்ளைக்கு சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்க தொடங்கிவிட்டேன். நீங்கள்? உங்கள் பிள்ளைக்கு என்ன வயது ஆகிறது? அவர்கள் பெயர் என்ன? இது போன்ற பல சுவாரஸ்யமான தகவலை நீங்களும் மற்ற அம்மாக்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே.

#mindfulparenting
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!