கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்வது சரியா?

cover-image
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்வது சரியா?

கர்ப்பமாக இருக்கும்போது பல விஷயங்களை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும். அவற்றுள் ஒன்று தான் உடலுறவு கொள்வதை குறித்த சந்தேகம். இதனை பற்றிய கூடுதல் தகவலை நாம் இப்போது காண்போம் வாருங்கள்.

 

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா?

உடலுறவு என்பது கர்ப்பமாக இருக்கும்போது இயல்பான ஒரு விஷயம் தான். இது எந்தவிதத்திலும் கருவிலுள்ள உங்களின் பிள்ளையை பாதிப்பதில்லை. அவர்கள் பனிக்குட நீரில் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

ஆனாலும் பிரசவத்துக்கு முந்தைய வாரங்களில் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஏனென்றால், இதனால் பிரசவம் தூண்டப்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 

எப்போது கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது?

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? என்ற உங்கள் சந்தேகத்தை பெண் மருத்துவரிடம் கேட்டு பரிந்துரைகள் பெறவும். ஒருவேளை கீழ்காணும் பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். அவை,

 • ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்
 • குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பிருந்தால்
 • காரணமில்லாமல், யோனி இரத்தக்கசிவு, பிடிப்பு போன்றவை இருந்தால்
 • பனிக்குட பையிலிருந்து திரவம் வெளியேறினால் அல்லது உடைந்திருந்தால்
 • கர்ப்பப்பை வாய் முன் கூட்டியே திறந்திருந்தால்
 • நஞ்சுக்கொடி கீழிறங்கி பிறப்புறுப்பை மறைத்து காணப்பட்டால்
 • ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் வயிற்றில் இருந்தால்

ஒருவேளை நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொண்டு, ஏதேனும் அசாதாரண சூழலை சந்தித்தால், டாக்டரை உடனடியாக ஆலோசிக்கவும்.

 

எப்போது டாக்டரை நாம் பார்ப்பது?

 • வலி இருக்கும்போது
 • இரத்தக்கசிவு இருக்கும்போது
 • திரவ வெளியேற்றம் இருக்கும்போது
 • அசவுகரியமாக உணரும்போது
 • சுருக்கங்கள் காணப்படும்போது

 

கர்ப்ப கால உடலுறவு:

கர்ப்பமாக இருக்கும்போது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அவை பெண்ணுக்கு பெண் வேறுபடவும் செய்கிறது.

சில பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைவாகவும் இருக்கும். சிலருக்கோ இந்த சமயங்களில் அதிகமாகவும் இருக்கும். இதற்கு காரணம், ஹார்மோன்கள் தான்.

 

கர்ப்பகாலத்தில் உடலுறவு எண்ணங்களில் ஏற்படும் மாற்றம் எவை?

1. முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தி, குமட்டல், உடல் சோர்வு காரணமாக உடலுறவில் குறைவான நாட்டமே இப்போது இருக்கும். ஆனாலும் இது இரண்டாவது மூன்று மாதங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

2. இரண்டாவது மூன்று மாதங்களில் இது அதிகமாக காணப்படலாம். இதற்கு காரணம், நம் உடல் இரத்த ஓட்டம் அதிகரிப்பதே ஆகும்.

3. மூன்றாவது மூன்று மாதங்களில், பிள்ளை பிறக்க போகும் எதிர்பார்ப்பால் இது குறைந்து காணப்படலாம். அதோடு, இந்த சமயத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

 

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கணவர் என்ன நினைக்கிறார் என்பதை கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது. கர்ப்பமாக இருக்கும்போது எந்த பொஷிஷன் உங்கள் இருவருக்கும் சவுகரியமாக உள்ளது என்பது குறித்து இருவரும் கலந்துரையாடி தேவையற்ற அசவுகரியங்களை தவிர்க்கலாம்.

நான்காவது மாத கர்ப்பத்தின்போது “மிஷனரி பொஷிஷனில்” படுத்து உடலுறவு கொள்வதையும் தவிர்க்கவும்.

பக்கவாட்டில் படுத்துக்கொள்வது நல்லது. இது கருவிலுள்ள உங்கள் பிள்ளைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு நிலையாகும்.

அப்படி இல்லையெனில், கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது, உடலை தடவுதல், சேர்ந்து நீராடுதல் போன்றவற்றை மட்டும் செய்யலாம். இந்த சமயத்தில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இது குறித்தும் உங்கள் பெண் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

 

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டா?

அது, கருவில் வளரும் பிள்ளையை பொறுத்தே அமையும். அவர்கள் வளர்ச்சியை பொறுத்து நீங்கள் உடலுறவு கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை மருத்துவர்கள் இப்போது பரிந்துரைக்கின்றனர்.

 

ஆணுறை பயன்படுத்துவது நல்லதா?

இப்போது பாலுறவு சார்ந்த தொற்று ஏற்படுவது உங்களுக்கும், உங்களின் கருவில் வளரும் பிள்ளைக்கும் ஆபத்தாகவே அமையும். அதனால், யோனி தொடர்புடைய உடலுறவு, ஓரல் செக்ஸ், அனல் செக்ஸ் போன்றவற்றை நாம் தவிர்ப்பது நல்லது.

 

இப்போது உடலுறவில் நாட்டம் இல்லையென்றால் என்ன செய்வது?

இது குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த சமயத்தில் உங்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லை என்பதை உங்கள் கணவரிடம் புரிய வைப்பது நல்லது. நிச்சயமாக அவர் உங்களை புரிந்துக்கொள்வார். ஏனென்றால், இது உங்கள் ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல. பிறக்கவிருக்கும் பிள்ளை சம்பந்தப்பட்ட விஷயமும் கூட என்பதால், அவரிடம் எடுத்துரைத்து புரிய வைப்பதே நல்லது.

நண்பிகளே, கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ளலாமா? கூடாதா? என்ற உங்கள் சந்தேகத்திற்கான பதில் இப்போது கிடைத்திருக்குமென நாங்கள் நம்புகிறோம். இது போன்ற பதிவுகளை படிப்பதோ பகிர்வதோ தவறேயில்லை. எப்போதும் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக்கொள்ளாமல், அறிந்து தெளிவடைவது நல்லது. அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

#sexduringpregnancy
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!