• Home  /  
  • Learn  /  
  • பிரெக்னென்சி கிட் பற்றி அறிய வேண்டிய அரிதான உண்மைகள்
பிரெக்னென்சி கிட் பற்றி அறிய வேண்டிய அரிதான உண்மைகள்

பிரெக்னென்சி கிட் பற்றி அறிய வேண்டிய அரிதான உண்மைகள்

16 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லையா என்பதை அறிய முன்பெல்லாம் சற்று சிரமமாகவே இருக்கும். நம்முடைய முன்னோர்கள், ஒரு சில செய்முறைகளை செய்வதன் மூலமாக கர்ப்பத்தை அறிந்துக்கொண்டனர். அதன்பிறகு வந்த காலக்கட்டத்தில், நாம் நேரடியாக மருத்துவமனை சென்று இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் தான், கர்ப்பமா இல்லையா என்பதை அறிய முடியும். ஆனால், இப்போது வீட்டிலிருந்தபடியே எளிய முறையில் நம்முடைய கர்ப்பத்தை அறிய முடிகிறது. இதை பற்றிய ஒரு விரிவான அலசல் தான் இப்பதிவு.

 

இது துல்லியமாக காட்டுமா?

பெரும்பாலும் 99 சதவிகிதம் இது துல்லியமாக காட்டுவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், உறுதியாக தெரிந்துக்கொள்ள மீண்டும் ஒரு முறை டாக்டரிடம் சென்று பார்ப்பது நல்லது என்கின்றனர்.

 

இந்த கிட் எப்படி செயல்படும்?

HCG எனப்படும் ஹார்மோன் அளவை கொண்டு நம்முடைய கர்ப்பத்தை உறுதி செய்ய முடியும். இந்த ஹார்மோன், நம்முடைய சிறுநீர் மற்றும் இரத்தத்தில் உள்ளது. தோராயமாக கருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்கு பின் சோதனை செய்வதன் மூலமாக நம்முடைய கர்ப்பத்தை குறித்து அறிய முடியும். டாக்டர்கள் இரத்தத்தில் உள்ள HCH ஹார்மோன் அளவை கொண்டு நாம் கர்ப்பமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெரியப்படுத்துவார்கள். ஆனால், நாம் வீட்டில் எடுக்கும் டெஸ்ட் மூலமாக முடிவை அறிய நம்முடைய சிறுநீர் போதுமானது.

நமக்கு வழக்கமாக வரக்கூடிய மாதவிடாய் தவறினாலோ, அல்லது கர்ப்பமாக இருப்பதற்கான மற்ற அறிகுறிகள் காணப்பட்டாலோ, நாம் சோதனை செய்து பார்க்கலாம்.

 

பிரெக்னென்சி டெஸ்ட் குறித்து நாம் அறிய வேண்டியவை எவை?

1. HCG ஹார்மோன்களை கொண்டே நம்முடைய கர்ப்பம் உறுதிப்படுத்தப்படுகிறது.

2. சில நிலைகள் மற்றும் சில மருந்துகளை நாம் உட்கொள்ளும்போது தவறான முடிவோ அல்லது துல்லியமற்ற முடிவோ கிடைக்கவும் கூடும்.

3. கிட்டை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்து அதன்பின் கவனமாக பின்பற்றவும்.

4. ஒவ்வொரு பிராண்டும் செயல்பாட்டில் மாறுபட்டு காணப்படுவதால், கிட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் கண்டிப்பாக தேவை.

5. முறையாக நாம் இந்த பரிசோதனையை செய்தால் மட்டுமே, 99% முடிவு துல்லியமாக இருக்கும்.

 

இந்த கிட் எப்படி வேலை செய்யும்?

HCG லெவல், கர்ப்பமாக இருக்கும்போது அதிகரித்து காணப்படுகிறது. இதனை கொண்டே டெஸ்ட் கிட்டின் முடிவு நமக்கு கிடைக்கிறது.

இதனை பிரெக்னென்சி ஹார்மோன் என்றும் அழைப்பர். ஏனென்றால், இதற்கும் வளரும் நம்முடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கும் இடையே நிறைய தொடர்புள்ளது.

அதாவது கருவுற்ற முட்டை கருப்பை சுவற்றில் பதியும்போது இது வெளிப்படும்.

 

எப்படி ரிசல்ட்டை தெரிந்துக்கொள்வது?

  • 5 mIU/ml-இற்கும் குறைவாக HCG லெவல் இருந்தால் அது நெகட்டிவாகும்
  • 25 mIU/ml-இற்கும் அதிகமாக அல்லது சமமாக இருந்தால் அது பாசிட்டிவாகும்

 

எப்படி நான் எடுக்க வேண்டும்?

1. நம்முடைய சிறுநீரை கொடுக்கப்பட்டுள்ள கெமிக்கல் ஸ்ட்ரிப்பில் வைக்கவும்.

2. அவ்வளவு தான் முடிவை அறிய 1 முதல் 2 நிமிடங்கள் ஆகலாம்.

3. ஆனால், கிட் பிராண்டை பொறுத்து முடிவு தெரியும் நேரம் மாறுபடலாம்

4. முடிவு தெரியும் நேரம், கிட் வைக்கப்பட்டுள்ள பாக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

முடிவை பொறுத்து நமக்கு தெரிவது என்ன?

இது கிட் வகையை பொறுத்து மாறுபட்டு காணப்படுகிறது. அவை,

  • கலர் மாறலாம்
  • ஒரு கோடுகள் அல்லது இரண்டு கோடுகள் தோன்றலாம்
  • ‘பிரெக்னென்ட்’ அல்லது ‘பிரெக்னென்ட் இல்லை’ என எழுத்து வடிவில் கூட வரலாம்
  • கிட்டில் ஒரு கோடு வந்தால் நெகட்டிவ் என அர்த்தமாகும், இரண்டு கோடுகள் வந்தால் பாசிட்டிவ் என அர்த்தமாகும்

 

எப்போது நான் எடுக்க வேண்டும்?

வீட்டிலேயே சிறுநீர் கொண்டு எடுக்கப்படும் சோதனையை, கருவுற்று 14 நாளில் செய்யலாம். ஆனால், மாதவிடாய் தவறிய பிறகு எடுப்பது மிக துல்லியமான முடிவை உங்களுக்கு அளிக்கலாம்.

அதேபோல, அதிகாலையில் எழுந்து போகும் முதல் முறை சிறுநீரை கொண்டு துல்லியமான முடிவை பெறலாம். ஏனென்றால், இதனில் HCG ஹார்மோன்கள் எவ்வளவு உள்ளது என்பதை துல்லியமாக அறிய முடியும்.

அதன்பிறகு நாம் உட்கொள்ளும் நீர் ஆகாரங்கள் மாறுபட்ட முடிவை தரக்கூடும். ஆம், நீங்கள் கர்ப்பமாக இருந்தும் கூட நெகட்டிவ் என காட்டவும் வாய்ப்புள்ளது என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்கவும்.

 

அடுத்து என்ன நடக்கும்?

சிறுநீர் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் கிட்டத்தட்ட 99% சரியாகவே இருக்கும். சில சமயம், நாம் தவறாக சோதனை செய்தாலும் முடிவு தவறாக வாய்ப்புள்ளது.

ஒருவேளை உங்களுக்கு ரிசல்ட் பாசிட்டிவ் என வந்தால், அடுத்த ஸ்டெப்பாக உங்களின் மருத்துவரை சென்று பார்த்து உறுதி செய்துக்கொள்ளலாம்.

ரிசல்ட் நெகட்டிவ் என வந்து, கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால், 1 வாரம் கழித்து மீண்டும் சோதனை செய்து பார்க்கவும் அல்லது டாக்டரிடம் சென்று இரத்த பரிசோதனை மூலம் உறுதி செய்துக்கொள்ளலாம்.

தோழிகளே, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? இல்லையா? என்ற குழப்பத்துடன் இருந்தீர்களா? அப்படி என்றால், இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் மற்ற தோழிகளுக்கும் இதனை பகிரலாமே.

#momhealth

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.