• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பிணிகள் இப்படி எல்லாம் தூங்க கூடாது
கர்ப்பிணிகள் இப்படி எல்லாம் தூங்க கூடாது

கர்ப்பிணிகள் இப்படி எல்லாம் தூங்க கூடாது

17 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

இதுவரை நாம் எப்படி வேண்டுமானாலும் உறங்கி இருக்கலாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது உறங்குவது மிகவும் கடினமான காரியமாகவே அமைகிறது. இவற்றுள் வேடிக்கையான விஷயம் என்ன தெரியுமா, கர்ப்பமாக இருக்கும்போது இடதுபக்கம் தான் நாம் தூங்க வேண்டுமாம். ஆனால், உண்மை என்னவென்றால், நான் கர்ப்பமாக இருந்தபோது வலதுபக்கம் திரும்பி தூங்கவே ஆசைப்பட்டேன். என் கணவர் தான் இடதுபக்கம் தூங்குவது எனக்கும், பிள்ளைக்கும் மிகவும் நல்லது என்றார். இதுபோல தூக்கத்தை பற்றிய பல பயனுள்ள தகவலை நாம் காண்போம் வாருங்கள்.

 

தூங்குவதற்கு சிறந்த பொஷிஷன் எது?

1. ஐந்து மாதங்கள் கழித்து, குப்புறப்படுத்து தூங்குவது நிச்சயம் சிறந்த நிலையாக இருக்கவே முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஏனென்றால், நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் இரத்த ஓட்டம் பாதிக்க வாய்ப்புள்ளது.

2. குப்புறப்படுத்து தூங்கும்போது மூச்சு விடுவது கூட மிகவும் சிரமமான விஷயமே. நம்முடைய வயிற்று பகுதி, நம் விரியும் கருப்பைக்கு அழுத்தத்தை கொடுக்கும்.

3. இடது பக்கம் தூங்குவதால் பல நன்மைகள் உள்ளன. இது வளரும் நம்முடைய வயிறுக்கும் கூடுதல் சவுகரியத்தை நிச்சயம் தரும். மருத்துவர்களும் இடதுபக்கம் தூங்கவே பரிந்துரைக்கின்றனர். இதனால் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தும் தங்கு தடையின்றி சென்று சேரும்.

 

வேறு எதெல்லாம் சிறந்த பொஷிஷனாக இருக்கும்?

 

1. வயிற்று மற்றும் முதுகுக்கு சப்போர்ட் தருதல்

வயிற்றுக்கு கீழே தலையணை வைத்துக்கொள்ளலாம். முழங்கால்களுக்கு இடையேவும் தலையணை வைத்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பயன்படுத்தக்கூடிய தலையணை நமக்கு கூடுதல் சவுகரியத்தை தருகிறது.

 

2. மூச்சு விட எளிதாக இருத்தல்

உங்கள் பக்கவாட்டின் கீழ் தலையணையை வைப்பதால் மார்பகம் சற்று உயர்ந்து காணப்படும்

 

3. நெஞ்செரிச்சலை குறைத்தல்

படுக்கையை (தலை வைக்கும் பகுதியை) புத்தகம் கொண்டு சற்று உயர்த்தலாம். இதனால் நமக்கு வரும் நெஞ்சரிச்சல் குறைய வாய்ப்புள்ளது.

முதல் மூன்று மாதங்களில் தூங்குவது எப்படி?

முதல் மூன்று மாதங்களில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக அசதி இருப்பது, மனநிலையில் மாற்றம், குமட்டல், பதட்டம், அசவுகரியம் போன்றவை காணப்படலாம். அதோடு அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் எண்ணம் தோன்றலாம்.

நம்முடைய வயிறு இப்பொழுது இயல்பாகவே இருக்கும் என்பதால், சாதாரணமாக அன்னாந்து பார்த்தபடி தூங்கலாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்ப நிலையிலேயே ஒருக்கணைத்து படுத்து தூங்க பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

வலதுப்புறமோ, இடதுப்புறமோ நாம் ஒருக்கணைத்து தூங்கலாம் என்றாலும், இடதுப்புறம் படுத்து தூங்குவது மிகவும் நல்லது.

இரண்டாவது மூன்று மாதங்களில் தூங்குவது எப்படி?

இப்போது நமக்கு குமட்டலோ அல்லது சிறுநீர் பிரச்சனையோ அதிகமிருக்காது. ஆனால், அதிகம் கனவுகள் வரக்கூடும். அதேபோல நெஞ்செரிச்சல் மற்றும் தலைவலி இருக்க வாய்ப்புள்ளது. முதுகை வைத்து நீங்கள் தூங்கினால் முதுகுவலி வரக்கூடும். அதனால் இடப்புறம் படுத்து இப்போதும் தூங்குவது மிகவும் நல்லது.
மூன்றாவது மூன்று மாதங்களில் தூங்குவது எப்படி?

இப்போது தூங்குவது மிகவும் கடினமான காரியமே. அண்ணாந்து பார்த்து தூங்கினால் தசை மற்றும் முதுகு வலி வரக்கூடும். அதோடு ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக நம்மால் தூங்க சிரமமாகவும் இருக்கலாம். ஒரு சிலருக்கு கால்கள் வீங்கியும் காணப்படும். இதனால் தூங்க முடியாமல் தவிப்போம்.

நம்முடைய இடதுப்பக்கமாக தூங்குவது நமக்கும், நம்முடைய பிள்ளைக்குமான இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

 

கர்ப்பிணிகள் சிறந்த முறையில் தூங்க டிப்ஸ் என்னென்ன?

1. இரவில் குறைவான அளவு தண்ணீர்

காலை வேளையில் அதிகமான நீரை குடிக்கவும். மாலை மற்றும் இரவு நேரங்களில் இதனால் குறைவாக குடிக்கலாம். இப்படி செய்வதால், இரவில் சிறுநீர் கழிக்க அதிகம் எழ வேண்டிய அவசியமிருக்காது.

 

2. பகலில் குட்டித்தூக்கம்

காலையில் குட்டி தூக்கம் போடலாம். இதனால், இரவு தூக்கம் எந்தவிதத்திலும் உங்களை பாதிப்பதில்லை.

 

3. காரமான உணவை தவிர்க்கவும்

வறுத்த, அசிடிக் நிறைந்த, காரமான உணவை தவிர்க்கவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

 

4. ஓய்வுக்கான பயிற்சிகள்

மூச்சு பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உங்களின் மன அழுத்தத்தை குறைத்து, நன்றாக தூங்க உதவுகிறது. நிபுணர்களின் ஆலோசனை பெற்று மட்டுமே இதனை செய்யவேண்டும்.

 

5. பாடல்கள் கேட்கலாம்

கனவுகள் வருவதாலும், மன அழுத்தத்தாலும், மற்ற காரணங்களாலும் தூங்குவதில் சிரமம் உண்டாகலாம். தூங்க செல்வதற்கு முன்பு இசையை கேட்பதனால் மன அழுத்தம் குறையும். உங்கள் கணவரிடமும் நீங்கள் மனம் விட்டு பேசலாம்.

 

6. லாவண்டர் வாசனை அல்லது ஆயில்

இதனை படுக்கையின் பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். இது ஓய்வுக்கு உதவும், நிம்மதியான தூக்கத்தையும் தரும்.

பிள்ளை பிறந்த பிறகு நம்மால் தூங்குவது இயலாத காரியம் என்றே சொல்ல வேண்டும். அதனால் இப்போதே நாம் நேரத்தை ஒதுக்கி கிடைக்கும் நேரத்தில் நன்றாக தூங்க வேண்டும். இடது பக்கத்தில் படுத்து தூங்குவதனால், நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் மிகவும் நல்லது. தூக்கம் தான் நமக்கு இப்போது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை எப்போதும் மறக்காமல் இருங்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததென நீங்கள் நினைத்தால், உங்களுடைய மற்ற தோழிகளுக்கும் இதனை பகிரலாமே.

A

gallery
send-btn