18 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பமாக இருக்கும்போது பயன்படுத்தும் தலையணையிலும் கூட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் நல்லது. பொதுவாக இந்த சமயம், இடதுபக்கமாக திரும்பி தூங்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால், இதனால் இரத்த ஓட்டம் எந்த தடையுமின்றி இருக்கக்கூடும். இது போன்ற பல விஷயங்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் கர்ப்ப கால தலையணைகள். இவற்றை பற்றிய கூடுதல் தகவலை நாம் இப்போது காணலாம் வாருங்கள்.
இந்த தலையணைகள் எதற்கெல்லாம் நல்லது?
1. வலிக்கு நல்லது
கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய எடை அதிகரிக்கும். இதனால், முதுகு, இடுப்பு, கால்களில் கூடுதல் அழுத்தமும், பாரமும் காணப்படும். இந்த உடல் உறுப்புக்களை ஓய்வில் வைத்துக்கொள்ள இந்த தலையணை உதவுகிறது.
2. இரத்த ஓட்டத்துக்கு நல்லது
கர்ப்பமாக இருக்கும் பெண்கள், இடதுப்பக்கமாக தூங்க அறிவுறுத்தப்படுகிறது. பிள்ளைகள் நம் வயிற்றில் வளரும்போது பக்கவாட்டில் படுத்து தூங்க சிரமமாக இருக்கலாம். ஆனால், இந்த தலையணைகள் நம் மற்றும் நம் பிள்ளையின் இரத்த ஓட்டத்துக்கு உதவி ஒருக்கணைத்து தூங்க ஆதரவை வழங்குகிறது.
3. நன்றாக தூங்குதல்
இனிமையான கர்ப்ப காலத்துக்கு, நன்றாக தூங்க வேண்டியது அவசியம். கர்ப்ப கால தலையணைகள், நம்முடைய ஓய்வை உறுதிப்படுத்தவும், நீண்ட நேரம் தூங்கவும் உதவுகிறது.
கர்ப்ப கால தலையணைகளின் வகை என்னென்ன?
1. C-வடிவ தலையணை
இது பக்கவாட்டில் படுத்துக்கொள்ள சவுகரியமான ஒரு தலையணையாகும். கழுத்து முதல் கால் பகுதி வரை உரிய பாதுகாப்பை இந்த தலையணை வழங்குகிறது. இந்த தலையணையில் படுப்பதால், தலை, கழுத்து, தோள்பட்டை போன்ற பகுதிகள் தளர்வாக இருக்கும். இந்த தலையணை கர்ப்பமாக இருக்கும் போது மட்டும் உதவாமல், தாய்ப்பால் தரும்போதும் உதவுகிறது.
2. U-வடிவ தலையணை
இந்த தலையணை இரண்டு பக்கங்களிலும் சவுகரியமாக தூங்க உதவக்கூடிய ஒன்றாகும். இந்த தலையணையில், இரண்டு பக்கமும் தலையை வைக்கும் விதத்தில் வளைந்து காணப்படுகிறது. தோள்பட்டை வைக்கும் இடத்தில் வளைந்து உடல் வடிவத்துக்கு ஏற்றவாறு காணப்படுகிறது. தலையணையின் சவுகரியமான முன்முனை, வயிற்றுக்கு பகுதிக்கு இதமாக அமைகிறது. தாய்ப்பால் தரவும் இந்த தலையணை கூடுதல் சவுகரியத்தை தருகிறது.
3. ஆப்பு வடிவ தலையணை
இது குறிப்பாக வயிற்றின் சவுகரியத்தை கொண்டு மட்டுமே வடிவமைக்கப்பட்டதாகும். இந்த தலையணைகள், நம்முடைய இடுப்பு மற்றும் முதுகுக்கு சவுகரியத்தை தந்து அமைதியான தூக்கத்தையும் தரக்கூடியதாகும். குறிப்பாக இந்த வகை தலையணை, பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
4. சைடு ஸ்லீப்பர் தலையணை
பக்கவாட்டில் படுத்து தூங்க நினைக்கும் பெண்களுக்கு இந்த வகை தலையணை மிகவும் நல்லது. ஆனால், C-வடிவ தலையணையை காட்டிலும் இது அளவில் சிறியதாகும். இது சிறியதாக இருப்பதால், எடுத்து செல்ல எளிதானது.
தலையணைகளை எப்படி பார்த்து வாங்குவது?
இது போல பல வகை தலையணைகள் கர்ப்பிணிகளுக்காக உண்டு. ஆனால், தலையணைகளை வாங்கும்போது ஒரு சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்பதை இப்போது நாம் பார்ப்போம்.
1. வடிவம்
நம்முடைய உடலில் எங்கெல்லாம் அசவுகரியம் காணப்படுகிறதோ, அதற்கு ஏற்றார் போல நாம் வாங்கும் தலையணைகள் வேண்டும். ஆனால், வாங்கும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன்படி வாங்குவது நல்லது.
U மற்றும் C வடிவ கர்ப்பகால தலையணைகள், நம் உடல் முழுவதையும் கவரக்கூடியதாகும். ஆனால், ஆப்பு வடிவ தலையணை நம்முடைய முதுகு மற்றும் வயிற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஒருவேளை உங்களுடைய பெட், கிங் சைஸாக இருந்தால், பெரிய கர்ப்பகால தலையணையை நாம் தேர்ந்தெடுக்கலாம்.
2. பொருள்
மென்மையான காட்டன் கவர் போடப்பட்டதாக இருக்க வேண்டும். பெண்கள் அவரவர் தேவைக்கு தகுந்தாற்போல கர்ப்பமாக இருக்கும்போது இதனை பார்த்து வாங்கலாம்.
3. மடக்கி இருத்தல்
மடக்கி இருக்கும் வகை தலையணைகளையும் நாம் வாங்கலாம். மடக்கும் வகை தலையணைகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதில்லை.
4. பராமரிப்பு
பெரும்பாலும் எல்லா தலையணைகளும், மெஷினில் துவைக்கும் வகையில் இருப்பது தான். ஆனால், சரியான முறையில் துவைக்கிறோமா இல்லையா என்பது மிகவும் அவசியம்.
5. எடுத்து செல்ல எளிது
ட்ராவல் சமயத்தில் பயன்படுத்தும் தலையணைகள் எடுத்து செல்ல எளிதானவை.
சிறந்த தலையணைகளை நாம் தேர்ந்தெடுப்பது, நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கு நல்லது. இவை தாய்ப்பால் கொடுக்கும் நிலையையும் சிறந்ததாக்கும். இந்த பதிவின் மூலமாக எந்த மாதிரியான தலையணை நம்முடைய கர்ப்பத்தின்போது சிறந்தது என்பதை அறிந்திருப்போம். இந்த பதிவு பயனுள்ளது என நீங்கள் நினைத்தால், உங்கள் தோழிகளுக்கும் பகிரலாமே.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.