பிரசவத்துக்கு பின் முடி கொட்டுகிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்

cover-image
பிரசவத்துக்கு பின் முடி கொட்டுகிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்

கர்ப்பமாக இருக்கும்போது முடி சிறந்த நிலையில் இருப்பதாக கர்ப்பிணி பெண்கள் பலரும் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கின்றனர். ஆனால், இது நமக்கு நிரந்தரமானதும் அல்ல.

பல கர்ப்பிணிகள் டாக்டரிடம் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? நான் கர்ப்பமாக இருந்தபோது முடி அடர்த்தியாக சிறந்த நிலையில் இருந்தது. ஆனால், பிள்ளை பிறந்தபிறகு எனக்கு முடி கொட்டுகிறதே ஏன் என்கின்றனர். இதற்கு டாக்டர் அளிக்கும் பதில், இது முற்றிலும் நார்மல் என்பது தான். இதற்கு காரணம், கர்ப்பத்திற்கு பிறகு ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர்.

ஒரு சில பெண்கள், பிள்ளை பிறந்தவுடன் பாப் கட் செய்துவிடுவார்கள். இதற்கு காரணமும், அதிகமாக முடி கொட்டுவதால் தான். இது பற்றிய கூடுதல் பல பயனுள்ள தகவலை நாம் இப்போது காண்போம்.

 

மகப்பேறுக்கு பின்னான முடி உதிர்வு என்றால் என்ன?

நாம் கர்ப்பமாக இருக்கும்போது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவ ஒரு சில புதிய ஹார்மோன்கள் சுரக்கிறது. குறிப்பாக எஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால், முடி வளர்ச்சி அதிகம் காணப்படுகிறது. அதிலும் நம்முடைய கர்ப்பத்தின்போது, பல நிலைகளில் நம்முடைய முடியின் வளர்ச்சி இருக்கிறது. முதல் நிலையை மயிர் அமைவு நிலை (அனஜன் நிலை) என்பர். இரண்டாவது நிலையை பரிணாம நிலை (கேட்டஜன் நிலை) என்பர். மூன்றாவது நிலையை ஓய்வுற்ற நிலை (டெலஜன் நிலை) என்பர். இந்த நிலைகளை கடந்த பின் நம்முடைய முடியானது, பிரசவத்துக்கு பின் கொட்டுகிறது. இதை தான் மகப்பேறுக்கு பின்னான முடி உதிர்வு (போஸ்ட்பார்ட்டம் ஹேர் லாஸ்) என்று அழைக்கிறோம்.

 

எவ்வளவு முடி கொட்டக்கூடும்?

ஒரு சராசரி பெண்ணுக்கு, ஒரு நாளைக்கு சுமார் 100 முடிகள் கொட்ட வாய்ப்புள்ளதாம். அதனால் தான் முடி கொட்டுவதை பார்த்தவுடன் நமக்கு அதிக கவலையும் இருக்கக்கூடும். ஆனாலும், இது நிரந்தமான ஒன்றல்ல என்பதை உணர்ந்து நம்முடைய பிள்ளைகளுக்காக இந்த தியாகத்தை ஏற்றுக்கொள்வது நம்முடைய உடல் மற்றும் மனநிலைக்கு மிகவும் நல்லது.

 

எப்போது முளைக்க வாய்ப்புள்ளது?

இது நிரந்தரமான ஒன்றல்ல, நம்முடைய பிள்ளைக்கு ஒரு வயதாகும்போது நாம் முடி வளர்ச்சியை பெற்றிருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், முன்பை விட சற்று நீளம் குறைவாகவே புதிதாக முளைக்கும் முடி இருக்கக்கூடும். ஒருவேளை தொடர்ந்து முடி நீளம் குறைவாக கொட்டும் வகையில் இருந்தால், நிச்சயம் நாம் டாக்டரின் ஆலோசனையை பெறுவது நல்லது. அதாவது நமக்கு இரத்தசோகை அல்லது தைராய்டு இருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது.

 

இதற்கு என்ன செய்வது?

இதற்கு எந்த சிகிச்சையும் காணப்படவில்லை. இந்த நேரத்தில் முடி கொட்டுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு சில விஷயங்களை செய்து நம்முடைய முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயலலாம்.

 

1. ஸ்டைலிங் செய்வதை தவிர்த்தல்

ட்ரையர் பயன்படுத்தி முடியை காய வைத்தல் அல்லது கர்லிங் ஹேர் போன்றவை செய்வதை நிச்சயம் தவிர்க்கவும். அதேபோல தலையை மிகவும் அழுத்தி சீவுவதையும் நாம் குறைக்க வேண்டும்.

 

2. ஆரோக்கியமாக சாப்பிடுதல்

பழங்கள், காய்கறிகள், புரதம் போன்றவற்றை நாம் உணவோடு சேர்த்துக்கொண்டு, நமது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம். அதேபோல, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் C நிறைந்த கீரைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கேரட், முட்டைகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளும்போது நம்முடைய முடி ஆரோக்கியம் மேம்படுகிறது.

 

3. வைட்டமின்கள் எடுத்துக்கொள்ளுதல்

இவை நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வைட்டமின்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் முடி உதிர்வை உண்டாக்கும். அதனால், நம்முடைய பிள்ளைகள் பிறந்த பின்பும் பிரெனெட்டல் வைட்டமினை நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக தாய்ப்பால் தரும் அம்மாக்கள் பிரெனெட்டல் வைட்டமினை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

 

4. ஷாம்பு பயன்படுத்துதல்

கண்டிஷனிங் ஷாம்புகள் சில சமயங்களில் முடி கொட்ட காரணமாக அமைகிறது. இதனால் நம்முடைய முடி மெலிந்தும் காணப்படலாம். அதனால், ஷாம்பு பயன்பாட்டில் மிகுந்த கவனத்துடன் நாம் இருக்க வேண்டும்.

தோழிகளே, பிரசவத்திற்கு பிறகு முடி கொட்டுவதை குறித்த பல தகவல்கள் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிடித்திருந்தால், உங்களின் மற்ற தோழிகளுக்கும் இதனை பகிரலாமே.

நன்றி! வணக்கம்!

#haircare
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!