• Home  /  
  • Learn  /  
  • 5 வயது பிள்ளைக்கு சூப்பர் வெஜிடபிள் ரெசிபிகள்
5 வயது பிள்ளைக்கு சூப்பர் வெஜிடபிள் ரெசிபிகள்

5 வயது பிள்ளைக்கு சூப்பர் வெஜிடபிள் ரெசிபிகள்

20 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

காய்கறிகள் நம்முடைய பிள்ளைகளுக்கு பல விதமான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியதாகும். இந்த சத்துள்ள உணவை சுவையாக செய்து தருவதன் மூலமாக நாம் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம். அவற்றுள் ஒரு சில சூப்பர் ரெசிபிக்களை தான் நம்முடைய 5 வயது பிள்ளைக்கு எப்படி கொடுப்பது என்பதை இந்த சுவாரஸ்யமான பதிவில் காணவிருக்கிறோம்.

 

1. பட்டாணி கூழ்

கடாயில் பட்டாணியை போட்டு வேகவைக்கவும். 10 முதல் 12 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து, அதன் பதத்தை பார்க்கவும். ஹேண்ட் பிளெண்டர் பயன்படுத்தி 3-4 டேபிள்ஸ்பூன் கொதிக்க வைத்த நீரை பட்டாணியுடன் சேர்த்து கூழாகும் வரை கிடையவும். இதனை சல்லடையில் போட்டு அதன் தோல் இருந்தால் நீக்கிவிடவும். அவ்வளவு தான் சூடான சுவையான பட்டாணி கூழ் நம்முடைய பிள்ளைகளுக்காக ரெடி.

 

2. பட்டர் போட்டேட்டோ ரெசிபி

பிரஷ்ஷான உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும். அரை கப் தண்ணீரை பிரஷர் குக்கரில் வைத்து உருளைக்கிழங்கை அதனில் போடவும். 3 விசில் வரைக்கும் வைத்திருந்து ஆஃப் செய்துவிடவும். அதன்பிறகு சூட்டில் அந்த உருளைக்கிழங்கு வேகும். பிரஷர் வெளியானதும், உருளையின் தோலை உரித்துவிட்டு, கட்டிங் போர்டு வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டவும். கடாயை மிதமான சூட்டில் வைத்து, ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை அதில் உருக விடவும். அது உருகியவுடன், நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் சேர்த்து, உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கிண்டவும். பிறகு, ஃபோர்க் கொண்டு அந்த உருளைக்கிழங்கை மசித்துவிடவும். 2 நிமிடங்களுக்கு கிண்டிவிட்டு அடுப்பை அணைக்கவும். அதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு சுவையாக பரிமாறலாம்.

 

3. சர்க்கரைவள்ளிக்கிழங்கு பரோட்டா

சர்க்கரைவள்ளி கிழங்கை மசித்துக்கொள்ளவும். அதனோடு உப்பு, மிளகு, சீரகம் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லியை தூவவும். ஒரு சிறிய பந்து ஆட்டாவை தட்டையாக தட்டிக்கொள்ளவும். அதன் நடுவில் சர்க்கரைவள்ளி கிழங்கு மசித்ததை வைத்துக்கொள்ளவும். பிறகு, மாவை வைத்து மூடிக்கொள்ளவும். மெல்ல பந்தாக உருட்டி, சர்க்கரவள்ளிக்கிழங்கு மசாலா வெளியில் வரவில்லை என்பதை உறுதிசெய்யவும். டவாவில் போட்டு பரோட்டாவை எடுக்கவும்.

 

4. கேரட், தக்காளி சூப்

கேரட்டையும், தக்காளியையும் தண்ணீரில் சுத்தம் செய்துக்கொள்ளவும். கேரட்டின் தோலை உரித்துக்கொள்ளவும். கேரட்டை சின்ன சின்ன துண்டாக நறுக்கிக்கொள்ளவும். அதேபோல தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் நறுக்கி கொள்ளவும். ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சீரகத்துடன் பிரஷர் குக்கரில் வைக்கவும். அது வெடித்து வந்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிண்டவும். அதன்பிறகு, நறுக்கிய கேரட், தக்காளி துண்டுகளை தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும். பிறகு 3 விசில் வரை மிதமான சூட்டில் பிரஷர் குக்கரில் வைக்கவும். பிரஷர் ரிலீஸ் ஆனவுடன், குக்கரை திறந்து பார்த்தால், காய்கறிகள் நன்றாக வெந்து மென்மையாக இருக்கும். வெந்த உணவு பொருட்களை எல்லாம் பிளெண்டருக்கு மாற்றவும். பிசுபிசுவென இருப்பதற்கு தகுந்தாற் போல தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவு தான், சூடான, சுவையான, ஹெல்தியான கேரட் தக்காளி சூப் ரெடி.

 

5. கீரை கிரீமி ரெசிபி

பசலைக்கீரையை கொதிக்கவைத்து தண்ணீரை வடிகட்டி விடவும். கடாயில், வேகவைத்த கீரை, காளான் சூப், வெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதோடு கொஞ்சமாக பூண்டு சேர்த்துக்கொள்ளலாம். சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நாம் இந்த ரெசிபியை நம்முடைய பிள்ளைகளுக்கு பரிமாறலாம்.

 

6. வெஜிடபிள் மிக்ஸ் ரைஸ்

ஒரு பெரிய பாத்திரம் எடுத்துக்கொண்டு, எண்ணெய் மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். காய்கறிகள் மிருதுவாகும்வரை கிண்டவும். தக்காளி சாஸ் கொஞ்சம் சேர்த்து மீண்டும் வேகவிடவும். அதனோடு சமைத்த சாதத்தை சேர்த்து மீண்டும் வேகவைக்கவும். சாதம், நன்றாக வெந்தவுடன் சூடாக நாம் அவர்களுக்கு பரிமாறலாம்.

தோழிகளே, நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய சுவையான வெஜிடபிள் ரெசிபிக்கள் என்னவென்று நாம் இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொண்டோம். மீண்டும் இன்னொரு சூப்பர் ரெசிபியுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறோம்.

#parentinggyaan #childnutrition

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.