பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான கீரை உணவுகள்

cover-image
பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான கீரை உணவுகள்

ஒவ்வொரு அம்மாவும் மல்லுக்கட்டியாவது தன்னுடைய பிள்ளைக்கு கீரையை கொடுக்க நினைப்பதுண்டு. காரணம், ஊட்டச்சத்துக்களின் கூடாரம் கீரை வகை உணவு என்று கூட சொல்லலாம். பொதுவாக, பிள்ளைகளின் கண் பார்வை கூர்மையாக இருக்க கீரை உணவை டாக்டர்கள் பரிந்துரைப்பர். இன்னும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கீரையில் இருப்பதால், பெற்றோர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுப்பர். ஆனாலும், உங்கள் பிள்ளைகள் கீரையை சாப்பிட அடம்பிடித்து அருகே வர பயப்படுகிறார்களா. அப்படி என்றால் இந்த சூப்பரான கீரை உணவுகள் உங்களுக்கு தான்.

என்னவெல்லாம் கீரை உணவுகளை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்?

1. ப்ரோக்கோலி பசலைக்கீரை கூழ்

நாம் எப்போதும் நம்முடைய பிள்ளைகளுக்கு கூழ் தான் கொடுக்க தொடங்குவோம். இந்த ப்ரோக்கோலி பசலைக்கீரை கூழை நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்தால் மீண்டும் வேண்டுமென கேட்டு அடம்பிடிக்க செய்வார்கள்.

 

2. ஆப்பிள் பசலைக்கீரை கூழ்

ஒருவேளை நம்முடைய பிள்ளைகளுக்கு கீரை மட்டும் கொடுக்கும்போது பிடிக்காவிட்டால், ஆப்பிளையும் சேர்த்து கொடுக்கலாம். இது மிகவும் ருசியான ஒரு உணவும் கூட.

 

3. பன்னீர் பசலைக்கீரை கூழ்

இதனை நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும்போது புரதச்சத்து உறுதிப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதனை கொஞ்சம் திக்காக செய்து உங்களின் பிள்ளைகளுக்கு தரலாம். அப்போது தான் பன்னீர் மற்றும் கீரையையும் சேர்த்து மென்று சாப்பிட அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

 

4. கீரை கிச்சடி

கிச்சடி என்பது காய்கறிகள் பலவும் போட்டு செய்யப்படும் ஒரு உணவாகும். பொதுவாக இதனில் போடப்படும் கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், வெங்காயம் போன்றவற்றை நம் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனோடு நாம் கீரையையும் சேர்த்து கொடுக்க செய்யலாம். இதனால், கார்போஹைட்ரேட்டு, புரதச்சத்து, நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் பலவும் அவர்களுக்கு கிடைக்கிறது.

 

5. கீரை ஓட்ஸ் பேன்கேக்குகள்

இது உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த காலை உணவாக அமையலாம். இது கேக்குகள் வடிவத்தில் இருப்பதால், வித்தியாசமான வடிவத்தில் நம் பிள்ளைகளின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.

 

6. கீரை, பேரிக்காய் மற்றும் ஓட்ஸ் பொரி

இதனில் பேரிக்காயை நாம் சேர்த்துக்கொடுப்பதால் சுவைக்கு பஞ்சமே இல்லை. ஓட்ஸ் மற்றும் கீரை கூடுதல் ஊட்டச்சத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குகிறது.

 

7. கீரை முட்டை பொரியல்

முட்டையையும் நாம் கீரையுடன் சேர்த்து கொடுக்கலாம். ஆம், பொரியல் செய்வதோடு முட்டையையும் சேர்த்து நாம் கொடுக்கலாம். இது அவர்கள் கேட்டு மீண்டும் உண்ணும் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

 

8. சீஸ் கீரை மிட்டாய்

எந்த பிள்ளைகளும் சீஸ் பிடிக்காது என கூறவே வாய்ப்பில்லை. அதனால் இந்த சீஸை வைத்து கீரை தூவி தேங்காய் மிட்டாய் போல ஒன்றை நாம் பிரிபேர் செய்து நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

 

9. கீரை சர்க்கரைவள்ளிக்கிழங்கு பிஸ்கட்

சர்க்கரைவள்ளி கிழங்கு இனிப்பானதும் கூட, அதோடு பல வித ஊட்டச்சத்துக்கள் இதனில் இருக்கிறது. இதோடு கூடுதலாக நாம் கீரையை சேர்த்து நம் பிள்ளைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை சாப்பிடுகிறார்கள்.

 

10. சீஸ் கீரை கோளா உருண்டை

இந்த கோளா உருண்டையை நம்முடைய பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு சாதத்தோடு சேர்த்து கொடுக்கலாம்.

 

11. பூசணிக்காய் கீரை பக்கோடா

நம்முடைய பிள்ளைகளுக்கு பக்கோடா என்றாலே மிகவும் பிடிக்கும் தான். ஆனால் எண்ணெய் பலகாரத்தில் என்ன சத்துள்ளது என கூறி, இதனை பெரும்பாலும் அவர்கள் கண்ணிற்கு நாம் காட்டுவதில்லை. இந்த பூசணிக்காய், கீரையில் செய்த பக்கோடா அவர்களுக்கு சத்துள்ள உணவாக அமைகிறது.

 

12. கீரை சப்பாத்தி

நம்முடைய வீடுகளில் வாரத்தில் இரண்டு நாளாவது நம்முடைய பிள்ளைகளுக்கு சப்பாத்தி செய்து கொடுப்போம். அதனை ஏன் நாம் இன்னும் ஆரோக்கியம் நிறைந்ததாக கொடுக்க முயலக்கூடாது? ஆம், சப்பாத்தியில் நாம் கீரையையும் சேர்த்து கூடுதல் ஆரோக்கியத்தை அவர்களுக்கு அளிக்கலாம் அல்லவா!

 

13. கீரை கொத்தமல்லி தோசை

இந்த மொறுமொறு தோசையை உங்கள் பிள்ளைகளுக்கு செய்துக்கொடுங்கள். அப்புறம் பாருங்கள், அடிக்கடி செய்து தர சொல்லி உங்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

 

14. கீரை பாசிப்பருப்பு இட்லி

இது நம்முடைய பிள்ளைகளுக்கு எண்ணற்ற ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு உணவாகும். இதனை காலை உணவாக நாம் அவர்களுக்கு கொடுக்கலாம்.

கீரையில் என்னவெல்லாம் உணவை சமைத்து, நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்பதை இப்போது பார்த்தோம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி! வணக்கம்!

#childnutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!