• Home  /  
  • Learn  /  
  • சுவையான சாக்லேட் அல்வாவை செய்து நம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாமே
சுவையான சாக்லேட் அல்வாவை செய்து நம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாமே

சுவையான சாக்லேட் அல்வாவை செய்து நம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாமே

22 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம்முடைய பிள்ளைகள் எப்போதுமே விதவிதமான உணவை விரும்புவார்கள். அவர்கள் விதவிதமாக உண்ண ஆசைப்பட்டாலும், அவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுவது அம்மாக்களின் இயல்பு. எப்போதுமே ஆரோக்கியமான உணவு சுவை குறைவாகவே இருக்கும். ஆம், உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால், இது போன்ற உணவை கூடுதல் சுவையோடு நாம் கொடுக்கும்போது, அவர்கள் மீண்டும் வேண்டுமென ஆசையுடன் கேட்கவே செய்வார்கள். அப்படி ஒரு உணவை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். கோதுமை ரவையில் ஒரு உணவு செய்ய போகிறேன் என்றால், உங்கள் பிள்ளைகள் குடுகுடுவென ஓடிவிடுவார்கள். அதுவே சாக்லட் அல்வா செய்ய போகிறேன் என சொல்லி பாருங்களேன்.

 

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – அரை கப்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – ½ கப்

வெண்ணிலா எசென்ஸ் அல்லது சாக்லேட் எசென்ஸ் – 2 அல்லது 3 சொட்டு

பால் – 1 ⅓ கப்

ஏலாக்காய் பொடி – ½ டீஸ்பூன் (தேவைப்பட்டால்)

டார்க் சாக்லேட் – ½ கப்

பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை – 4 டேபிள்ஸ்பூன்

சாக்கோ சிப்ஸ் (அலங்கரிக்க தேவை)

செர்ரி (அலங்கரிக்க தேவை)

செய்முறை

1. கடாயில் வீட்டில் செய்த நெய்யை எடுத்துக்கொள்ளவும்.

2. அதோடு, கோதுமை ரவை சேர்க்கவும்.

3. மிதமான சூட்டில் கோதுமை ரவையின் நிறம் பிரவுன் ஆகும்வரை வறுக்கவும்.

4. இப்போது டார்க் சாக்லேட் சேர்க்கவும், ஆனால் கலந்துவிட வேண்டாம்.

5. உடனடியாக பால் சேர்த்து, சாக்லேட் உருகும் வரை நன்றாக கிண்டவும். அல்வா பதத்திற்கு வரும் வரை பாலை சேர்த்துக்கொள்ளவும்.

6. ஒரு சில சொட்டுக்கள் வெண்ணிலா எசென்ஸ், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

7. தேவைக்கு தகுந்தாற் போல சர்க்கரை சேர்க்கவும். மூடியை போட்டு மூடி, 2-3 நிமிடங்கள் வைத்து விடவும்.

8. நறுக்கிய பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சையை 2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.

9. அல்வாவை அழகுப்படுத்த, செர்ரி, சாக்கோ சிப்ஸ், மீதமிருக்கும் நறுக்கிய பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சையையும் மேலே தூவவும்.

10. அவ்வளவு தான், சூடான சாக்லேட் அல்வா ரெடி.

11. சொல்லும்போதே வாய் ஊறுகிறது அல்லவா! அப்படி என்றால் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்!

நிச்சயமாக இந்த சாக்லேட் அல்வாவை உங்களுடைய பிள்ளைகள் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இதனை அவர்கள் விளையாடிவிட்டு வந்த பிறகு நாம் கொடுக்கலாம். இதனை அவர்கள் ஸ்கூலுக்கு செல்லும்போதும் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண கொடுத்து அனுப்பலாம்.

 

கோதுமை ரவையின் பயன்கள் என்னென்ன?

1. இதனில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதால், நம்முடைய பிள்ளைகள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இது உதவுகிறது. அதோடு நம் பிள்ளைகளின் இதயத்தை வலிமையாக வைத்துக்கொள்ளவும் செய்கிறது.

2. கோதுமை ரவையில் புரதச்சத்தோடு, கார்போஹைட்ரேட், வைட்டமின் B, வைட்டமின் E இருப்பதால், எல்லாவிதத்திலும் நம் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

3. இது செரிமானமாக எளிதாக உள்ளதால், பிள்ளைகளுக்கு வரும் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் இது நல்லது.

 

வேறு என்னவெல்லாம் கோதுமை ரவையில் நாம் செய்யலாம்?

கோதுமை ரவை பாயாசம்

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை

உலர்ந்த பழ பொடி

ஏலக்காய் பொடி

நெய்

தண்ணீர்

 

எப்படி செய்வது?

1. கடாய் எடுத்து, கோதுமை ரவையை சேர்க்கவும். அதனை சூட்டில் வறுக்கவும்.

2. இன்னொரு கடாய் எடுத்து, தண்ணீரை கொதிக்கவிடவும்.

3. கொதித்த உடன், கொஞ்சம் கொஞ்சமாக வறுத்த கோதுமை ரவையை சேர்த்து கிண்டவும்.

4. நன்றாக வெந்தவுடன், நெய் சேர்க்கவும்.

5. மீண்டும் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

6. அதோடு, ஏலக்காய் பொடி மற்றும் உலர்ந்த பழ பொடி சேர்க்கவும்.

7. அவ்வளவு தான், சூடான சுவையான கோதுமை ரவா பாயாசம் ரெடி.

 

இந்த சுவையான கோதுமை அல்வாவையும், பாயாசத்தையும் செய்து அசத்தி உங்கள் பிள்ளைகளின் மனதை கொள்ளை கொள்ளலாமே. மீண்டும் ஒரு பயனுள்ள சுவாரஸ்யமான பதிவுடன் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#instantrecipes

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.