• Home  /  
  • Learn  /  
  • என்ன மாதிரியான விளையாட்டை எல்லாம், நம் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடலாம்
என்ன மாதிரியான விளையாட்டை எல்லாம், நம் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடலாம்

என்ன மாதிரியான விளையாட்டை எல்லாம், நம் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடலாம்

23 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம்முடைய பிள்ளைகள் போர் அடிக்கிறது என சொன்ன உடனே, நாம் பல வித பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கி தரவே ஆசைப்படுவோம். ஆனால், இதுவே அவர்கள் அடம்பிடிக்க ஒரு காரணமாகவும் அமைந்துவிடுகிறது. அவர்கள் கேட்கும்போதெல்லாம் நாம் வாங்கி கொடுக்கும்போது, இதையே வழக்கமாக செய்ய தொடங்கிவிடுவார்கள். அதாவது அடம்பிடித்தால் தான் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். அதனால், முடிந்தளவு முதலில் வீட்டில் உள்ளவற்றை கொண்டு அவர்களை நாம் விளையாட வைக்கவும். எப்போதாவது மட்டுமே விளையாட்டு பொருட்களை வாங்கி தரலாம்.

 

1. அட்டைப்பெட்டியில் செய்த இரயில்

அட்டைப்பெட்டிகளை சதுர வடிவத்தில் நறுக்கிக்கொள்ளுங்கள். அவற்றை ஒட்டி இரயில் பெட்டிகளாக்கி கொள்ளவும். அவற்றின் கீழே பிள்ளைகளின் உடைந்த விளையாட்டு சாமானில் உள்ள சக்கரங்களை பொருத்திக்கொள்ளவும். அட்டைப்பெட்டியின் முன் முனையில் இழுத்து செல்வதற்கு ஏற்றவாறு ஒரு கயிறை இணைத்துக்கொள்ளவும். அவ்வளவு தான் இரயில் ஓட தயாராக இருக்கும்.

 

2. ஒட்டும் ஸ்பைடர் வலை

பிள்ளைகளை ஓரிடத்தில் இருக்க விடாமல் விளையாட வைக்கும் ஒரு விளையாட்டு இதுவாகும். இதனை நம்முடைய பிள்ளைகளால் கதவிலோ, ஹாலிலோ அல்லது எந்தவொரு நேரான இடவழிகளும் விளையாட முடியும். பெயிண்டர் டேப் கொண்டு ஸ்பைடர் வலைகளை உருவாக்கவும். இப்போது நியூஸ்பேப்பர் துண்டுகளை அந்த வலைகள் மீது வீசும்போது அவை சென்று பட்டென ஒட்டிக்கொள்ளும். இது அவர்களின் கை தசை இயக்கத்தை மேம்படுத்த உதவும் ஒரு விளையாட்டும் கூட.

 

3. பவுலிங் கேம்

காலி பாட்டில்களை கொஞ்சம் இடைவெளி விட்டு வைத்துக்கொள்ளவும். அவை சமமான இடைவெளியில் வைத்திருப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு பந்தை அவர்கள் கையில் கொடுக்கவும். அந்த பந்தை உருட்டிவிடும்போது எத்தனை பாட்டில் கீழே விழுகிறதோ, அதனை பொறுத்து அவர்களை நாம் உற்சாகப்படுத்தலாம். இந்த விளையாட்டின் மூலமாக அவர்கள் இலக்கை நோக்கி சரியாக வீச பழக தொடங்குகிறார்கள்.

 

4. ஸ்ட்ரா நெக்லெஸ்

ஸ்ட்ராக்களை அவர்களிடம் கொடுக்கவும். அவற்றை சிறுச்சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள சொல்லவும். அந்த நறுக்கிய ஸ்ட்ரா ஒவ்வொன்றையும் வளைவாக சேர்த்துக்கொள்ளவும். அது முழு வடிவம் பெற்றதும் அதனை அவர்கள் கழுத்தில் மாட்டிவிட்டு நாம் உற்சாகப்படுத்தி கைத்தட்டலாம். இந்த விளையாட்டால், அவர்களின் கவனிக்கும் திறன் அதிகரிக்க செய்கிறது.

 

5. பால் த்ரோவிங்

நியூஸ் பேப்பரை பந்துகளாக உருட்டிக்கொள்ளவும். அதிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் அவர்களை நிற்க வைக்கவும். அந்த உருட்டிய பந்துகளை ஒவ்வொன்றாக ஒரு வாளியில் போட சொல்லவும். எத்தனை பந்துகள் அந்த வாளியில் விழுந்துள்ளது என எண்ணி அவர்களை நாம் உற்சாகப்படுத்தலாம்.

 

6. வாக்கிங் கேம்

கலர் டேப்புகளை கொண்டு தரையில் வளைவாக ஒட்டிக்கொள்ளவும். அவற்றில் சிகப்பு நிறத்தை கட்டாயம் சேர்க்கவும். கிட்டத்தட்ட, ஆறுகள் ஓடுவது போன்று அவை இருக்கவும். அவற்றில் சிகப்பு நிறத்தில் ஒட்டப்பட்டுள்ளதில் மட்டும் நடக்க வேண்டாம் என அவர்களுக்கு சொல்லவும். அவர்கள் சரியாக அந்த ஒட்டப்பட்ட கலர் டேப் மீது நடந்து மற்றொரு முனையை அடையும்போது அவர்களை நாம் கைத்தட்டி ஊக்கப்படுத்தலாம். அதேபோல இன்னொரு முனையில் பிஸ்கட் போன்றவை வைத்து, அந்த ஒட்டிய கலர் டேப் மேலே நடந்து வந்து அதனை எடுத்துக்கொள்ள கூட நாம் அவர்களிடம் சொல்லலாம்.

 

7. பாம் பாம் பால் சேவ்

இந்த விளையாட்டுக்கு குட்டி குட்டி பந்துகளாக நிறைய எடுத்துக்கொள்ளவும். அவை வெவ்வேறு நிறங்களில் இருப்பதை உறுதிசெய்யவும். ஒரு ஐஸ் டிரேயை அவர்களிடம் கொடுக்கவும். ஒவ்வொரு டிரேயிலும், அதே நிறத்திலுள்ள பந்தை போட சொல்லவும், அவர்கள் சரியாக செய்யும்போது அவர்களை கைத்தட்டி நாம் ஊக்குவிக்கலாம். பந்தை அவர்கள் வாயில் வைத்துவிடாத வாறு நாம் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற விளையாட்டுக்களை கொண்டு நாம், நம்முடைய பிள்ளைகளின் அடம்பிடிக்கும் குணத்தை குறைக்கலாம். அதோடு, இது போன்ற விளையாட்டுக்கள் அவர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கையை பல மடங்கு பெருக்க உதவுகிறது. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திப்போம், நன்றி, வணக்கம்.

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.