• Home  /  
  • Learn  /  
  • பிள்ளைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ரோல்-பிளே கேம்கள்
பிள்ளைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ரோல்-பிளே கேம்கள்

பிள்ளைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ரோல்-பிளே கேம்கள்

23 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கற்றல் என்பதை கடினமாக நம் பிள்ளைகளுக்கு காட்டாமல், வேடிக்கையாக காட்ட முயல்வதே இப்போது நல்லது. அவர்களுக்கு அடிப்படை விஷயங்கள் இப்போது மிகவும் அவசியம். அவற்றை கற்றுக்கொள்வதில் பயமும், பதட்டமும் வந்துவிட்டால், அதன்பிறகு ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொள்வதென்பது சிரமாக அமைந்துவிடக்கூடும். நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றக்கூடிய ரோல்-பிளே கேம்கள் பற்றி தான் நாம் இந்த சுவாரஸ்யமான பதிவில் காணவிருக்கிறோம்.

 

ரோல்-பிளே கேம்கள் என்றால் என்ன?

நம்முடைய பிள்ளைகளை கவரும் விஷயங்களை அவர்கள் மீண்டும் செய்வார்கள். உதாரணத்திற்கு, நம் பிள்ளைகள் சின்சான் பார்க்கும்போது அந்த கதாப்பாத்திரத்தை உள்வாங்கி, சின்சான் போலவே பேச முயல்வார்கள். டோரா பார்த்துவிட்டு, குள்ளநரி! குள்ளநரி! என எதையாவது தேட தொடங்குவார்கள். ஸ்பைடர் மேன் படத்தை பார்த்துவிட்டு, கம் விட்டு பறக்க கூட முயற்சிப்பார்கள். இவை எல்லாம் வேடிக்கையான விஷயம் என்றாலும், அவர்கள் கற்றல் திறன்களை வளர்க்க உதவுபவையும் கூட. இதை தான் ரோல்-பிளே கேம்ஸ் என்கிறோம்.

 

என்ன மாதிரியான விளையாட்டெல்லாம் ரோல்-பிளேயில் வருகிறது?

1. பேக்கரி

பிள்ளைகள் கேக் ஷாப் ஒன்றை ஆரம்பித்து, கேக்கை மண்ணில் செய்து மற்ற பிள்ளைகளுக்கு அதனை கொண்டு கொடுப்பார்கள். இதற்காக அவர்கள் பழைய பாத்திர, பண்டங்களை எல்லாம் சேகரிப்பார்கள். இதனை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற, பேப்பர் கொண்டு கட் செய்து அவற்றிற்கு கலர் அடித்து கேக்காக மாற்றலாம். இதை தவிர, பேக்கரி டாய் செட்டும் மார்க்கெட்டில் விற்கிறது. இதையும் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு வாங்கி தரலாம்.

 

2. கதை கேரக்டராக மாறுதல்

இது நம் பிள்ளைகளின் கற்பனை திறனை வளர்க்கும் ஒரு விளையாட்டாகும். ஹாரிபாட்டர் திரைப்படம் அவர்கள் பார்த்தால், அதில் வரும் கதாப்பாத்திரங்கள் போல மாறுவேடமிட்டு நம் முன் வந்து நிற்பார்கள். இது போன்ற செயல்பாடுகளை அவர்கள் செய்யும்போது, அவற்றை நினைவாக நாம் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

 

3. பொக்கே ஷாப்

பூக்கள் பூத்துக்குலுங்கும் வசந்த காலத்தில் விளையாட வேண்டிய விளையாட்டு இதுவென கூட நாம் சொல்லலாம். இந்த விளையாட்டின் மூலமாக அவர்கள் பல வித பூக்களின் பெயர்களை அறிய தொடங்குகின்றனர். அவற்றின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களையும் உச்சரிக்க பழகுவார்கள். அவற்றை ஒரு ரிப்பன் கொண்டு சுற்றி பொக்கே ஷாப் வைத்து விளையாடவும் அவர்கள் ஆசைப்படுவார்கள். இந்த விளையாட்டின் மூலமாக பூக்கள் எத்தனை உள்ளது என எண்ணுவது போன்ற கணித திறனும் மேம்படும்.

 

4. பீட்சா ஷாப்

பிள்ளைகளுக்கு பீட்சா என்றாலே மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டில் பீட்சாக்களை தயாரித்து அவற்றை கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்வது போன்று அவர்கள் விளையாடுவார்கள். அதோடு எத்தனை பீட்சா துண்டுகள் உள்ளது என்பதனையும் அவற்றை கிப்ட் போல கவர் செய்து எப்படி கொடுப்பது போன்றவற்றையும் அவர்கள் கற்கின்றனர். இந்த விளையாட்டில் நேரத்திற்கு பீட்சாவை கஸ்டமருக்கு எப்படி கொண்டு சேர்க்க வேண்டுமென்பதை அறிவதன் மூலமாக பொறுமையை கையாளவும் கற்றுக்கொள்கின்றனர்.

 

5. காபி ஷாப்

இதனை நம் பிள்ளைகள் மிக எளிதாக விளையாட முடியும். ஆம், ஒரு பாட்டிலை எடுத்துக்கொள்ளவும். அதனில் லெமன் ஜூஸ் போன்றவற்றை ஊற்றிக்கொள்ளவும். பாட்டிலின் நடுவில் (மூடியில் அல்ல) ஸ்ட்ராவை பொருத்திக்கொள்ளவும். நம் பிள்ளைகளிடம் கஸ்டமர் (மற்ற பிள்ளைகள்) ஜூஸ் வேண்டுமென கேட்கும்போது, அவர்கள் பாட்டில் மேலுள்ள மூடியை திறந்தால் போதும், அது தானாகவே அந்த ஸ்ட்ரா வழியாக ஊற்றும். அப்போது ஒரு டம்ளரை கொண்டு ஜூஸை ஊற்றி சக பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலமாக சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் பண்பு நம் பிள்ளைகளுக்கு வரும்.

 

6. பேபி கேர்

பிள்ளைகள் பொம்மைகளை இன்னொரு குழந்தையாகவே பார்ப்பார்கள். அந்த பொம்மைகளை குளிப்பாட்டி, டிரெஸ் மாட்டி, பவுடர் அடித்து, பொட்டு வைத்து என அவர்களை போலவே அழகாக மாற்றுவார்கள். அதனோடு, பொம்மைகளுக்கு காய்ச்சல் அடிக்கிறது என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். இதுவும் ஒரு வித சிறந்த ரோல்-பிளே கேம் தான். அந்த பொம்மையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பாளராக அவர்கள் மாறுகிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் பொறுப்போடு நடந்துக்கொள்ளவும், சுயமதிப்போடு தன்னை பார்க்கவும் இந்த விளையாட்டு நம்முடைய பிள்ளைகளுக்கு உதவுகிறது.

 

7. டைனோசர் அகழ்வாராய்ச்சி

நம் பிள்ளைகள் தொல்லுயிர் ஆய்வு குறித்து அறிய இது உதவுகிறது. மண்ணில் எலும்பு பொம்மையை புதைத்து வைத்து, அவை எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்க சொல்லி நம் பிள்ளைகளை கேட்கலாம். அவர்களுக்கு கார்கோ பேண்டுகள், காட்டன் ஷர்ட்டுகள், பெரிய தொப்பி எல்லாம் போட்டுவிட்டு அகழ்வாய்வு செய்பவர்களை போல மாற்றலாம். அவர்களை இப்போது ஆங்கிலம் பேசவும் நாம் ஊக்குவிக்கலாம். இந்த விளையாட்டை கூடுதல் சுவாரஸ்யமாக மாற்ற, டைனோசர் பொம்மைகளும் நமக்கு உதவும்.

இந்த விளையாட்டுக்கள் எல்லாம் நிச்சயம் உங்களுடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால், நீங்களும் முயன்று பார்க்கலாமே. நன்றி, வணக்கம்.

A

gallery
send-btn