பிள்ளைகள் பழங்களை சாப்பிட மறுக்கிறார்களா? இதோ இந்த அருமையான டிப்ஸை முயன்று பாருங்களேன்

cover-image
பிள்ளைகள் பழங்களை சாப்பிட மறுக்கிறார்களா? இதோ இந்த அருமையான டிப்ஸை முயன்று பாருங்களேன்

பிள்ளைகள் எப்போதுமே சுவைக்காக சாப்பிடுபவர்கள். நாம் தான் ஆரோக்கியமான உணவை பழக்க ஒரு சில ஐடியாக்களை செய்து அவர்களை சாப்பிட வைக்க வேண்டும். வாழைப்பழம் சாப்பிட சொன்னால் ஓடி ஒளிந்துக்கொள்வார்கள். அதுவே, வாழைப்பழத்தில் ஒரு கேக், ஜூஸ் என இப்படி கொடுக்கும்போது உச்சுக்கொட்டி அதனை உண்பார்கள். உங்கள் பிள்ளைகளும் இதே போல தான் என்றால், இந்த சுவாரஸ்யமான பதிவு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

எப்படி எல்லாம் சுவாரஸ்யமாக பழங்களை நாம் கொடுக்கலாம்?

1. ஐஸ் வைக்கவும்

பிள்ளைகள் திராட்சை போன்ற பழங்களை வெறும் வாயில் சாப்பிடுவதற்கு பதிலாக, ஐஸில் வைத்து சாப்பிடவே ஆசைக்கொள்வார்கள்.

அதேபோல, பெர்ரி பழத்தை தயிரில் நனைத்து நாம் கொடுக்கலாம். நம்முடைய பிள்ளைகளுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

பழங்களை, பழமாக கொடுப்பதற்கு பதிலாக ஸ்மூத்தி, மில்க் ஷேக்குகள் போன்றவை செய்து கொடுக்கலாம்.

 

2. அழகுப்படுத்தவும்

பழங்களை பிஸ்கட் போன்று நாம் நறுக்கி கொடுக்கலாம். உதாரணத்திற்கு, நட்சத்திரம் போன்றோ, அல்லது சக்கரம் போன்றோ நாம் நறுக்கி கொடுக்கலாம். இதுபோல பல வடிவங்களில் கொடுப்பதன் மூலம் அவர்கள் விரும்பு சாப்பிட தொடங்குகின்றனர்.

 

3. தோட்டம் அமைத்தல்

நாம் அமைக்கும் தோட்டங்களையும், அதனில் விளையும் காய்கறி, பழங்களையும் நம் பிள்ளைகளுக்கு காட்டலாம். வீட்டில் விளையும் இது போன்ற உணவுப்பொருட்களை எப்போதுமே அவர்கள் சாப்பிட ஆசைக்கொள்வார்கள். ஏனென்றால், அவை நம் கண் பார்வையிலேயே விளைவதால், இதனை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

 

4. ஷாப்பிங்

எப்போதும் பழங்களை வாங்கும்போது ஒரே கலரில் வாங்காதீர்கள். அதற்கு பதிலாக பல வண்ணங்களில் வாங்குங்கள். இதன் மூலமாக வானவில் நிறத்தையும் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். உதாரணத்திற்கு, சிவப்பு நிறம் என்றால், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி எனவும், ஆரஞ்சு நிறம் என்றால் ஆரஞ்சு, கேரட் எனவும், மஞ்சள் என்றால் வாழைப்பழம் எனவும் ஒவ்வொரு வானவில் நிறத்தையும் பழங்களோடும், காய்கறிகளோடும் ஒப்பிட்டு நாம் அவர்களுக்கு கொடுக்கலாம். இது போன்ற வண்ணமயமான பழம், காய்கறியை சாப்பிட்டால் தான் வானவில் போன்ற அழகு கிடைக்குமென்று கூட நாம் சொல்லலாம்.

 

5. நாமே முன்னுதாரணம்

நாம் எப்படி சாப்பிடுகிறோமா, அப்படி தான் நம்முடைய பிள்ளைகளும் சாப்பிடுவார்கள். அதனால், அவர்கள் முன்பு நாம் முதலில் பழங்களை சாப்பிட வேண்டும். அப்போது தான் நம்மை பார்த்து அவர்களும் பழங்களின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்ள தொடங்குவார்கள்.

 

6. மிட்டாய் பாட்டில்கள்

அவர்கள் பசி எடுக்கும்போது நம்முடைய கிட்சனில் என்ன இருக்கிறது என பார்க்க செய்வார்கள். அப்போது மிட்டாய் பாட்டில்களில் பழங்களை நிரப்பி வைக்கலாம். அவற்றையே அவர்கள் பார்வைக்கு படும் விதத்தில் நாம் வைக்க வேண்டும்.

 

7. பழங்களின் சுவை

பிள்ளைகள் அனைவரும் வெவ்வேறு சுவையை விரும்பக்கூடியவர்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு இனிப்பு பிடிக்குமென்றால், நீங்கள் பழங்களாகவே கொடுக்கலாம். ஒருவேளை அவர்கள் உப்பு அல்லது காரமான உணவை விரும்புகிறார்கள் என்றால், நீங்கள் புரூட் சாலட்டோ அல்லது ட்ரை மேங்கோ பவுடர் போன்று கூட பழங்களை கொடுக்கலாம்.

 

8. கொஞ்சம் கொஞ்சமாக

பிள்ளைகள் எப்போதும் முழு பழங்களை பார்த்ததுமே வேண்டாம் என்பது போலவே கைகளை ஆட்டுவார்கள். ஆனால், அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழங்களை கொடுக்கும்போது, திருப்தியான மனதுடன் ஏற்றுக்கொள்ள செய்கின்றனர்.

 

9. பழம் கேக்

நீங்கள் பிரெஷ்ஷான பழங்களை கொண்டோ அல்லது அனைத்து விதமான உலர்ந்த பழங்களை கொண்டோ கேக்குகள் செய்யலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகளுக்கு உலர்ந்த பழங்களை சாப்பிட பிடிக்காவிட்டால், ஆப்பிள் சாஸ் போன்றவை சேர்த்து சுவையாகவும், ஆரோக்கியமாகவும் கொடுக்கலாம்.

இனிமேல் பழங்களை எப்படி கொடுக்க வேண்டுமென்ற குழப்பம் உங்களுக்கு இருக்காது தானே. இந்த சுவாரஸ்யமான பதிவின் மூலமாக நீங்களும் இந்த டிரிக்குகளை முயன்று பார்த்து எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முயலலாமே. மீண்டும் இன்னொரு சுவாரஸ்யமான பதிவுடன் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#childnutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!