25 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
நம் பிள்ளைகள் இப்போது வெளியில் சென்று விளையாட வேண்டும் என்றாலும், அதற்கான ஒரு சில விதிமுறைகளை நாம் நிச்சயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும். இதன் மூலமாக நாம் அவர்களின் ஆரோக்கியம் குறித்த கூடுதல் அக்கறையை கொண்டிருக்கவும் முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இதனை அவர்கள் பள்ளிக்கு செல்லும்போதே நாம் பழக்கப்படுத்தலாம். அப்போது தான் அங்குள்ள ஆசிரியர் உதவியுடன் அவர்கள் அது குறித்த தெளிவை பெற முடியும்.
எதற்காக இது போன்ற பிளேகிரௌண்ட் விதிமுறைகள் இப்போது அவசியம்?
1. இதனால் நம் பிள்ளைகளுக்கு பல நன்மைகள் உள்ளது. வெளியில் சென்று விளையாடும்போது, ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு குணத்தை கொண்டிருப்பர். உதாரணத்திற்கு, ஒரு சிலர் கோபமாக எந்நேரமும் இருப்பர். இதனை சகித்துக்கொள்ள நம்முடைய பிள்ளைகளை நாம் முதலில் தயார்ப்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் பொறுமையை கற்றுக்கொள்ள தொடங்குகின்றனர்.
2. அவர்கள் மற்றவர்களிடம் எந்த வாக்குவாதம் மற்றும் வம்புகளில் ஈடுபடாமல் இருக்க இது போன்ற விளையாட்டு விதிமுறைகள் நிச்சயம் நம் பிள்ளைகளுக்கு அவசியம்.
3. இதுபோன்ற விளையாட்டு விதிமுறைகளை அவர்கள் அறிந்துக்கொள்ளாவிட்டால், ஏதாவது சிறிய பிரச்சனை என்றாலும், மீண்டும் சமூகத்துடன் ஒன்ற சிரமப்பட வாய்ப்புள்ளது.
4. பிளேகிரௌண்ட் விதிகள் என்பது சுய ஒழுக்கத்தை அவர்கள் தவறாமல் கடைப்பிடிக்கவும் உதவுகிறது.
5. தேவையற்ற உபகரணங்களை உபயோகப்படுத்தாமல் இருக்கவும் இது போன்ற விதிமுறைகள் நம்முடைய பிள்ளைகளுக்கு உதவுகிறது.
6. விளையாடும்போது எதனை செய்ய வேண்டும்? எதை எல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி அறியவும் இந்த விதிமுறைகள் நம்முடைய பிள்ளைகளுக்கு உதவுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
1. ஒட்டி வைத்தல்
அவர்கள் வெளியில் விளையாட செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை ஒரு தாளில் எழுதி அவர்கள் ரூமில் பார்வைக்கு படும்படி ஒட்டி வைக்கலாம். இது அவர்கள் மறக்காமல் சரியாக அவற்றை கடைப்பிடிக்க உதவி செய்யும்.
2. பாசிட்டிவான வார்த்தைகள்
அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதற்கான விதிமுறைகளை சொல்லிக்கொடுக்கும்போது, அவற்றை பாசிட்டிவான கோணத்தில் மட்டுமே நாம் அவர்கள் மனதில் புகுத்த வேண்டும். இல்லையேல், அவர்கள் வெளியில் சென்று விளையாடவே பயப்பட வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
3. தொடர்பு கொள்ளுதல்
நம்முடைய பிள்ளைகளின் மனது தெளிவாக இருக்க, அவர்களிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களை கண் பார்த்து பேச பழகுங்கள். அதேபோல அவர்கள் வெளியில் சென்று விளையாடிவிட்டு வந்ததும், என்னவெல்லாம் நடந்தது என்பதை சுவாரஸ்யமாக கேட்டு தெரிந்துக்கொள்ள முயலுங்கள்.
4. கூட்டுமுயற்சி
வெளியில் சென்று விளையாடும்போது வாய்ப்பு நமக்கு மட்டுமே எப்போதும் கிடைக்காது என்பதையும், சக நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக சண்டை எதுவும் போடாமல் விளையாட வேண்டுமென்பதையும் நாம் அவர்களுக்கு சொல்லி வளர்க்கலாம்.
என்ன மாதிரியான விதிகளை கடைப்பிடிக்க செய்யலாம்?
1. வெளியில் சென்று விளையாடும்போது ஏதேனும் பிரச்சனை என்றால், அதனை அங்கிருக்கும் ஆசிரியர்களிடம் அல்லது மூத்தவர்களிடம் சொல்லி தெளிவு பெற ஊக்குவிக்கலாம்.
2. விளையாடுவதற்கு ஏற்ற ஆடைகளை மட்டுமே அணிவித்து விடுவது நல்லது.
3. சறுக்கு விளையாட்டுகள் விளையாடும்போது பொறுமை அவசியம் என்பதையும், முந்திக்கொண்டு சறுக்கினால் அடிபட வாய்ப்புள்ளது என்பதையும் அவர்களுக்கு புரியவைக்கலாம்.
4. சக தோழர்களை எக்காரணம் கொண்டு அடிக்கவோ, திட்டவோ கூடாது என்பதை கண்டிப்புடன் சொல்லி அனுப்பலாம்.
5. அவர்கள் விளையாடும்போது, எந்தவித தொந்தரவும் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே விளையாட சொல்லவும்.
6. விளையாடும் இடங்களில் உள்ள பொருட்கள் ஈரமாகவோ, சூடாகவோ இருந்தால், உடனே விளையாட தொடங்கிவிட கூடாது என்பதையும், அருகில் உள்ள மூத்த நபர்களிடமோ, ஆசிரியரிடமோ அதனை குறித்து விவாதிக்க வேண்டுமென்பதையும் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கலாம்.
7. ஒருவேளை விளையாட்டு பொருட்களை அவர்களுக்கு பயன்படுத்த தெரியாவிட்டால், அருகில் உள்ள ஆசிரியர்களிடம் அதனை குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டு அதன்பிறகு விளையாட ஊக்குவிக்கவும்.
ஸ்கூலுக்கு செல்லும் நம் பிள்ளைகள் எப்போது வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நம்மிடம் எந்நேரமும் இருக்கும். ஏனென்றால், விளையாட்டு பிள்ளைகள் என்பதால், எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிட கூடாது எனவே நினைப்போம். மீண்டும் ஒரு நல்ல பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.