26 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பிள்ளை பிறந்தவுடன் அடுத்ததாக நம்முடைய மனதில் எழும் கேள்வி என்னவென்றால், நான் எவ்வளவு நேரம் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை இதோ இந்த பதிவின் மூலம் வழங்க இருக்கிறோம். அதோடு, பிள்ளை பிறந்தவுடன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் என்னவெல்லாம் மருத்துவமனையில் நடக்குமென்பதையும் இந்த பதிவில் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
பிரசவத்துக்கு பிறகு என்னவெல்லாம் நடக்கும்?
பிரசவம் கழித்து பிள்ளையை சுத்தம் செய்யும் பணியை மருத்துவர்கள் செய்கின்றனர். நம்முடைய பிள்ளைகளுக்கு வைட்டமின் K கொடுக்கப்படலாம். கண்களில் தொற்று ஏற்படாமல் இருக்க, பிள்ளைகளுக்கு ஆயின்ட்மென்ட் போடப்படலாம். பிள்ளைகளின் கால் மற்றும் கைவிரல்கள் குறித்து மருத்துவர்கள் பார்ப்பார்கள்.
சுகப்பிரசவமாக இருந்தால் என்னவெல்லாம் செய்வார்கள்?
எந்தவித சிரமமும் இல்லாமல் சுகப்பிரசவமானால், மூன்றாவது நாளே டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். கீழ்காணும் விஷயங்களை சுகப்பிரசவத்துக்கு பின்னால் செக் செய்வார்கள், அவை
சிசேரியன் டெலிவரியாக இருந்தால் என்னவெல்லாம் செய்வார்கள்?
சிசேரியனாக இருந்தால் இரண்டு முதல் ஐந்து நாட்கள் தங்க வாய்ப்புள்ளது. கீழ்காணும் விஷயங்களை சிசேரியனுக்கு பின்னால் செக் செய்வார்கள், அவை
முதலில் போடப்பட்டும் டிரிப்புக்களை குறைத்து, மருந்து/ மாத்திரைகளை உங்களால் எடுத்துக்கொள்ள முடியுமா என்பதையும் மருத்துவர்கள் கவனிக்கின்றனர்.
ஒருவேளை பிரசவத்தின்போது அதிகமான உபாதைகளை நாம் அடைந்திருந்தால், மருத்துவமனையில் தங்கும் நாட்கள் அதிகரிக்கலாம்.
நம்முடைய பிள்ளைகளுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான முதல் கட்ட தடுப்பூசிகளும் பிறந்த சில நாட்களில் போடப்படும்.
முதல் தடவை தாய்ப்பால் தரும்போது, நம்முடன் இருக்கும் செவிலியர்கள் இதற்கான உதவிகளை செய்கின்றனர். நமக்கு எந்த வித சிரமமும் இருந்தால், நம்முடன் உள்ளவர்களிடமோ அல்லது அருகில் உள்ள செவிலியர்களிடமோ சொல்லலாம்.
நம்முடன் உள்ள செவிலியர்கள் பிள்ளையை எப்படி பிடிப்பது, டயாப்பர்களை எப்படி மாற்றுவது, தொப்புள்கொடியை எப்படி பாதுகாப்பது என்பதை நமக்கு சொல்லி தருவார்கள். ஒரு சில மருத்துவமனைகளில், பிள்ளையை எப்படி மசாஜ் செய்வது, குளிப்பாட்டுவது, எப்படி துணி கொண்டு சுற்றுவது போன்றவை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
மருத்துவமனைகளில் பெரும்பாலும், நம் அருகே பஷ்ஷர் வைத்திருக்க வாய்ப்புள்ளது. இது நம்முடைய அவசர தேவைகளின்போது பயன்படுத்த உதவுகிறது. இல்லையென்றாலும், நம்முடன் நம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை துணைக்கு வைத்துக்கொள்ளலாம்.
எத்தனை பேர் மருத்துவமனையில் இருக்கலாம்?
இது ஒவ்வொரு மருத்துவமனை விதிமுறைகளை பொறுத்து மாறுபடும். முடிந்தளவுக்கு, உறவினர்களை கொஞ்சம் தாமதமாக பார்க்க வர சொல்லி கோரலாம். ஏனென்றால், இப்போது தாய்ப்பால் கொடுக்கும்போது வெளிநபர்கள் இருந்தால் அது கூடுதல் அசவுகரியத்தை நமக்கு அளிக்கும்.
1. தனி அறையில் இருக்கும்போது, ஹாஸ்பிடல் செவிலியரில் ஒருவரும், நம் கணவரும் நம்முடன் இருக்கலாம். ஒரு சில மருத்துவமனைகளில், கூடுதல் நபர்களை அனுமதிக்கின்றனர்.
2. பொது வார்டுக்கு மாற்றப்பட்டவுடன், விதிமுறைகள் முற்றிலும் மாறும். சில மருத்துவமனைகள், ஆண் நபர்களை இரவு வேளையில் வார்டுக்குள் அனுமதிப்பதில்லை.
அதனால், மருத்துவமனையில் பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து முன்பே கேட்டறிந்துக்கொள்வது நல்லது. கணவர் உங்களுடன் இருக்க வேண்டுமென நினைத்தால், இது குறித்த முன் கூட்டிய ஆலோசனை தேவையற்ற குழப்பத்தை தவிர்க்க உதவும்.
குழந்தை முன் கூட்டி பிறந்தால் என்ன செய்வது?
ஒருவேளை பிள்ளைகள் மிகவும் முன் கூட்டி பிறக்கும்போது நியோனெட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் வைக்க பரிந்துரைக்கப்படுவார்கள். இதனால் பிள்ளைகளுடன் நம்மால் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம். நம்முடைய தாய்ப்பால் பம்ப் செய்யப்பட்டு பிள்ளைகளுக்கு அளிக்கப்படும். ஆனாலும், நம்முடைய பிள்ளைகளை பார்க்க அதிக வாய்ப்புகளை மருத்துவர்கள் அமைத்து தருகின்றனர் என்பதால் கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என நினைத்து கொள்வது நல்லது.
சில மருத்துவமனைகளில், பிள்ளைகளுடன் 1 நபரை கூடுதலாக அனுமதிக்கின்றனர்.
பிள்ளைகள் முன் கூட்டி பிறக்கும்போது எதனை கவனத்தில் கொள்வது?
பிள்ளைகள் முன் கூட்டி பிறப்பதால் எவ்வித பிரச்சனையும் இல்லை. எத்தனையோ அம்மாக்கள் இதனை வெற்றிக்கரமாக கடந்து பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கின்றனர். ஆனால், மருத்துவர்கள் இப்போது அதிகமாக ஆலோசனைகளை நமக்கு வழங்குவார்கள். அதன்படி செயல்படுவதால் மட்டுமே இந்த குறைப்பிரசவத்தை நம்மால் ஆரோக்கியத்தை கொண்டு வெல்ல முடியும் என்பதை மறவாதீர்கள். எந்தவொரு சந்தேகம் என்றாலும், நாம் மருத்துவர்களின் ஆலோசனையை தயக்கமின்றி பெற வேண்டும்.
தோழிகளே, பிரசவம் கழித்த உங்கள் பயத்தை போக்க இந்த பதிவு பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A