கருச்சிதைவுக்கு பின் கொள்ள வேண்டிய பாசிட்டிவ் மனநிலை - நிச்சயம் மீண்டும் கர்ப்பம் ஆகலாம்

cover-image
கருச்சிதைவுக்கு பின் கொள்ள வேண்டிய பாசிட்டிவ் மனநிலை - நிச்சயம் மீண்டும் கர்ப்பம் ஆகலாம்

கர்ப்பம் தரித்தவுடன் பெண் என்பவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். பிள்ளையை பார்க்க போகும் நாளை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருப்பாள். ஆனால், ஒரு சில காரணங்களினால், சில சமயம் கரு தங்காமல் போகிறது. உடனே, அது ஒரு பெரிய குறையாக பார்க்கப்படும். வருபவர், போவோர் எல்லாம் வருத்தம் என்ற பெயரில் நம் மனதை சங்கடத்துக்கு ஆளாக்குவார்கள்.

ஒரே ஒரு விஷயம் தான், எப்போதும் முதல் முறை ஒரு பெண் கர்ப்பம் தரித்து இது போல ஆகும் போதே, பேசுபொருளாகும் என்பதை என்றாவது நீங்கள் கவனித்ததுண்டா. அதேபோல, முதல் முறை ஒரு பெண் கர்ப்பமாகும்போது தான் விழா போல கொண்டாடவும்படும். உறவினர்களுக்கு எல்லாம் போன் செய்து சொல்வார்கள். இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும்போது, அது பேசுபொருளாக ஆவது கிடையாது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம் ஒரு வீட்டில் 10 பிள்ளைகள் கூட இருப்பார்கள். ஆனால், இன்று பல வித பிரச்சனைகளால் இரண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்வதே போதும் என்று நினைக்க தொடங்கிவிட்டோம். இதற்கு குடும்ப சூழ்நிலை, வருமானம் என பல காரணங்களும் உள்ளது.

நீங்கள் ஒன்றே ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களால் முதல் முறை கர்ப்பமாக முடிந்தாலே, நிச்சயம் உடலளவில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று தான் அர்த்தம். ஒருவேளை முதல் முறை கர்ப்பம் தரித்து கருச்சிதைவு ஏற்பட்டாலும், நிச்சயம் நம்மால் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்க முடியுமென்பதை மனதளவில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர் சொல்வதை காதுகளில் வாங்கி கொண்டால், அதனால் தான் கர்ப்பம் தரிக்க சிரமமாக இருக்குமென்பதை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இது சாத்தியமா?

தேர்வில் ஒரு கேள்விக்கு பதில் எழுத நேரமில்லாமல் போனாலே நாம் அதனை நினைத்து மிகவும் வருந்துவோம். அப்படி இருக்க நம்முடைய உலகமென நினைத்து கொண்டிருந்த கருவில் இருந்த பிள்ளை திடீரென இனிமேல் இல்லை என நினைக்கும்போது நிச்சயம் துயரம் இருக்கும் தான். ஆனாலும், அதனை கடந்து வரும்போது கண்டிப்பாக ஒரு சந்தோஷமான செய்தி நமக்காகவும், நம்முடைய கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்காகவும் உண்டு என நாம் முதலில் மனதளவில் நம்ப வேண்டும்.

 

என்ன செய்வது?

1. இதனை மறக்க நாம் நம்முடைய நேரத்தை மனம் கவர்ந்த நபர்களுடன் செலவிடலாம். நம்முடைய கணவரிடம் மனம் விட்டு இது குறித்து பேசலாம்.

2. மற்றவர்கள் அறிவுரை கூறி அவர்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினாலும், இது ஒன்றும் நமக்கு நிரந்தரமல்ல என்பதை நாம் மனதில் நினைத்தபடி இருக்க வேண்டும்.

3. கர்ப்பமாக இருந்தபோது ஏதாவது தவறு செய்தோமா என யோசித்து, அதனை மறுபடி செய்யவே கூடாது என்ற முடிவில் இருக்கவும் வேண்டும். செய்த தவறை எண்ணி வருந்திக்கொண்டே இருந்தால், அது கருமுட்டை வெளிப்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர வேண்டும்.

4. பிரச்சனை இல்லாமல் எந்தவொரு குடும்பமுமே இவ்வுலகில் இல்லை. ஆனால், இது போன்ற சமயங்களில் அவர்களுடைய பிரச்சனையை மறக்கவே நம்முடைய பிரச்சனைகளை அவர்கள் பெரிதாக பார்க்கின்றனர். நாம் அதற்கு எந்த சூழலிலும் இடமளிக்கவே கூடாது. நாம் தைரியமாக இருந்தால், அறிவுரைகள் நிச்சயம் அந்த சமயத்தில் குறையுமென்பதை உணர வேண்டும்.

5. நம்முடைய கவலைகளை மறக்க, இயற்கை தாயின் மடியில் உறங்கி, நமக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம். கணவருடன் அமர்ந்து திரைப்படங்களை பார்த்தும் நம் கவலைகளை மறக்கலாம்.

6. எதனால் கரு தங்காமல் போனது என்பது குறித்து மருத்துவர்களிடம் கலந்துரையாடி, மீண்டும் கர்ப்பம் தரிக்க முயலலாம்.

கர்ப்பம் என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். ஆனாலும், இறைவன் இந்த வாய்ப்பை நமக்கு ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கி நிறுத்தி விடுவதும் இல்லை. இன்றைய நாளில் எத்தனை தடவையோ கருச்சிதைவு ஏற்பட்ட போதும், மனம் தளராமல் பிள்ளை பெற்றுக்கொண்ட பல பெண்கள் நம் நாட்டில் உண்டு. நாமும் அவர்களை போல நிச்சயம் ஒரு நாள் கர்ப்பமாவோம் என்பதை மனதில் வைத்து அதற்கான செயல்முறைகளில் சரியாக ஈடுபடலாம். மீண்டும் ஒரு பயனுள்ள தகவலை உங்களுக்கு தருகிறோம். நன்றி, வணக்கம்.

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!