கணவன் மனைவி போடும் சண்டை, பிள்ளையை எவ்வளவு பாதிக்கும்?

cover-image
கணவன் மனைவி போடும் சண்டை, பிள்ளையை எவ்வளவு பாதிக்கும்?

கணவனும், மனைவியும் சண்டை போட்டுக்கொள்வது இயல்பான ஒன்று தான். அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு இரவே சமாதானம் ஆகி விடவும் வாய்ப்புள்ளது. ஆனால், நாம் போட்டுக்கொள்ளும் சண்டைகள் நம்முடைய பிள்ளைகளின் மனதில் மெல்ல பதிய தொடங்கிவிடுகிறது என்பதே உண்மை. இது குறித்து விரிவாக விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

எப்படி நம்முடைய பிள்ளையை இது பாதிக்கிறது?

1. மோசமாக சண்டையிடுதல்

கணவனும் மனைவியும் பிள்ளைகள் முன்பு சண்டை போட்டுக்கொள்ளும்போது அவர்களுக்கு நாம் தவறான உதாரணத்தை காட்டுகிறோம் என்பதை முதலில் உணர வேண்டும். அவர்களும் எதிர்காலத்தில் இப்படி தான் வளர்வார்கள் என்பதை நாம் கண்டிப்பாக உணர வேண்டும். இப்படி நடந்துக்கொண்டால் தான் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்குமென்ற தவறான உதாரணத்தையும் நாம் அவர்களுக்கு காட்டுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

2. உடலளவில் துன்புறுத்தல்

கணவன், மனைவியை அடித்து துன்புறுத்துதல் போன்ற செயல்களை செய்யும்போது பிள்ளைகளுக்கு ஒருவித வெறுப்பானது உண்டாகிறது. இது அவர்களுடைய வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு பதட்டப்படவும், பயப்படவும் காரணமாய் அமைகிறது. அதோடு, இதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கையும் நாளடைவில் குறைந்து விடுகிறது.

 

3. உறவில் விரிசல்

நாம் எப்படி நடந்துக்கொள்ள தொடங்குகிறோமோ, நம்முடைய பிள்ளைகளும் அதையே செய்யும்போது, அவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுடைய வாழ்க்கையிலும் இதுபோலவே நடந்துக்கொள்ள செய்கின்றனர்.

 

4. உடல்நல குறைவு

பெற்றோர்களின் சண்டைகளை பிள்ளைகள் தொடர்ந்து பார்க்கும்போது கவலை, மன அழுத்தம் மிகுதியாகி அதனோடு தனக்கு யாரும் உதவ இல்லை எனவும் நினைக்க தொடங்குகின்றனர். இது அவர்களுடைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் ஒரு விஷயமாகும்.

 

5. தன்னம்பிக்கை குறைவு

நம்முடைய சண்டைகளை பிள்ளைகள் பார்க்கும்போது, அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், எதிர்காலமும் மிகப்பெரிய கேள்விக்குள்ளாகி, மனக்கசப்பை ஏற்படுத்தவும் செய்கிறது.

 

6. படிப்பில் கவனக்குறைவு

நம்முடைய சண்டை எப்போது சரியாகும் என ஏங்கும் பிள்ளைகளின் படிப்பு பின்னடைவை சந்திக்கிறது. அவர்கள் முழு மனதோடு படிக்க நினைத்தாலும், பெற்றோர்கள் போடும் சண்டை அவர்கள் மனதை நிம்மதி இல்லாமல் ஆக்கி, அதனோடு ஞாபக மறதி, கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது.

 

நம் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

  • நாம் சண்டையிடும்போது அழ செய்வார்கள், அல்லது ஏதோ ஒன்றை செய்து நம்முடைய கவனத்தை ஈர்க்க முயல்வார்கள்
  • நாம் சண்டையிடும்போது எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள்
  • நாம் சண்டையிடும்போது அதனை பார்த்து பயம் கொள்வார்கள்
  • நம்முடன் பேசவோ, எதையும் பகிர்ந்துக்கொள்ளவோ பயம் கொண்டு விலகுவார்கள், நாளைடைவில் இது சமூகத்துடனானோ பழக்கத்தையும் விலக்கி அவர்களை தனியாக இருக்க செய்யும்
  • அவர்கள் நடத்தையிலும் மிகப்பெரிய மாற்றம் காணப்படலாம்
  • அவர்கள் எப்போதும் மனஅழுத்தம் மிகுந்து காணப்பட தொடங்குவார்கள்
  • படிப்பில் பிரகாசிக்க முடியாமல் தவிப்பார்கள்
  • உங்களிடம் பேசாமல் இருப்பதனை நல்லது என நினைக்க தொடங்குவார்கள்
  • அவர்களுக்கு தலைவலி, வயிற்றுவலி என பல உபாதைகள் வர தொடங்கும்

 

என்ன செய்வது?

1. உங்கள் பிள்ளைகள் முன்னால் கெட்ட வார்த்தை பேசக்கூடாது.

2. உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் ஏதாவது மனஸ்தாபம் என்றால், அதனை பிள்ளைகள் முன்னால் வெளிப்படுத்த கூடாது.

3. பிள்ளைகள் பயப்படும் எதனையும் நாம் அவர்கள் முன்னால் செய்யக்கூடாது.

4. எந்தவொரு பிரச்சனையும் பெரிதாகும் முன்பே, ஊதி அணைத்து விடுவது நல்லது.

5. பழைய பிரச்சனைகளை கிளறி நிகழ் காலத்தையும் கவலைக்குள்ளாக்க கூடாது.

6. நாம் நம்முடைய கணவரிடம் கொண்டுள்ள அன்பை பிள்ளைகள் முன்னால் நாகரிகமாக வெளிப்படுத்த வேண்டும்.

7. கணவரும், மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், பிள்ளைகள் முன்பே மன்னிப்பும் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற உணர்வு நம்முடைய பிள்ளைகளுக்கு வர தொடங்கும்.

8. பிள்ளைகள் முன்னால் யாரையும் புண்படுத்தும்படி பேச கூடாது.

 

தோழிகளே, இந்த பதிவின் மூலமாக நம்மால் நம் பிள்ளைகள் வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும், அதற்கு நாம் எப்படி தீர்வு காண்பது என்பதையும் பார்த்தோம். மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை எல்லாம் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#parentinggyaan
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!