• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பமாக இருக்கும் போது எடுக்க வேண்டிய போட்டோஷூட்
கர்ப்பமாக இருக்கும் போது எடுக்க வேண்டிய போட்டோஷூட்

கர்ப்பமாக இருக்கும் போது எடுக்க வேண்டிய போட்டோஷூட்

5 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுடைய வாழ்விலும் வரக்கூடிய வசந்த காலமாகும். பிள்ளை பிறந்த பிறகும், அவர்கள் வளர்ந்த பிறகும் கூட கர்ப்பமாக இருந்தபோது காணப்பட்ட மகிழ்ச்சியை நினைத்து பார்க்கும்போது நிச்சயம் நம்முடைய உடம்பு சிலிர்த்து விடும். அப்படிப்பட்ட கர்ப்ப காலத்தை நம்மால் எளிதாக கடந்து சென்று விட முடியுமா என்ன. நிச்சயம் முடியாது, அதனை நாம் பல அழகிய தருணங்களாக மாற்றி எதிர் காலத்திலும் ரசிக்கலாம். அதற்காக தான் இந்த பிரெக்னென்சி போட்டோஷூட்.

 

எப்படி எல்லாம் போட்டோஷூட் செய்யலாம்?

பெரும்பாலும் பெண்கள், இந்த பத்து மாதத்தில் உடல் மற்றும் மனதளவில் எப்படிப்பட்ட மாற்றத்தை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை அங்குலம் அங்குலமாக ரசிக்கவே ஆசைக்கொள்வார்கள். அதனால், ஒவ்வொரு மாதமும் ஒரு சில பெண்கள் போட்டோஷூட் செய்வார்கள். சில பெண்கள் வாரந்தோறும் ஏற்படும் மாற்றங்களை கூட ரசிக்க ஆசைப்படுகின்றனர். இன்றைய நாளில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவற்றிற்கு அதிக போட்டோ எடுக்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது போட்டோ எடுத்து அழகு பார்க்க ரொம்பவே ஆசைக்கொள்கிறார் என்பதே உண்மை.

 

எப்படியெல்லாம் நாம் போட்டோஷூட் செய்யலாம்?

 

1. பேக்ரவுண்ட் சரி செய்தல்

நம்முடைய போட்டோஷூட்டை அழகாக்குவது பின்புலம் தான். ஆம், நாம் எந்த இடத்தில் நின்று எடுக்கிறோம் என்பதை பொறுத்தே, நாம் எடுக்கும் போட்டோ அழகாக வருகிறது. அதனால் பேக்ரவுண்ட் என்பது நம்மை போலவே நிச்சயம் அழகாக இருக்க வேண்டும்.

 

2. கணவருடன் எடுத்தல்

நம்முடனான அன்பை போட்டோ மூலம் வெளிப்படுத்த நம்முடைய கணவருக்கு அன்பு கட்டளை பிறப்பிக்கலாம். அதேபோல, அவர் கருவில் உள்ள பிள்ளைகள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் நாம் போட்டோஷூட் செய்யலாம்.

 

3. வெவ்வேறு நிலைகளில் இருத்தல்

நாம் கேமரா முன்பாக சிரித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றும் அவசியம் இல்லை. கர்ப்பமாக இருக்கும்போது நாம் விதவிதமான பாதுகாப்பான நிலைகளில் நிற்கும்போது போட்டோஷூட் நன்றாகவே நமக்கு அமைகிறது.

 

4. நேரத்தை கருத்தில் கொள்ளுதல்

நாம் போட்டோஷூட் எடுக்கும் நேரமென்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பகல் நேரங்களில் சூரியன் உதித்த பின்பு எடுக்கும்போது போட்டோக்கள் நன்றாக வருகிறது. அதேபோல, மாலை வேளையில் போட்டோஷூட் எடுப்பது போட்டோக்கள் சிறந்த முறையில் வர உதவியாக உள்ளது.

 

5. க்ளோசப் போட்டோக்கள்

நீண்ட தூரத்திலிருந்து எடுக்கும் போட்டோக்களை குறைத்து, க்ளோசப் போட்டோக்களை நாம் இப்போது எடுக்கலாம். நம்முடைய கணவர், பிள்ளைகளுடன் பேசுவது போன்ற போட்டோக்களை எடுத்தும் போட்டோஷூட்டை அழகாக்கலாம்.

 

6. கேன்டிட் போட்டோக்கள்

நாம் நம்முடைய கணவருடன் சேர்ந்து சிரித்து மகிழ்வது போன்ற கேன்டிட் போட்டோக்களையும் நாம் இப்போது எடுக்கலாம். இவையும் நம்முடைய போட்டோஷூட்டை மேலும் அழகாக்க செய்வதாகும்.

 

7. பிடித்த விஷயங்கள்

நாம் இப்போது ஹெல்தியான பிஸ்கட், பழங்கள் இவற்றை எல்லாம் சாப்பிடுவோம். இதனை நாம் நம்முடைய போட்டோஷூட்டில் சேர்க்கலாம். நாம் பிஸ்கட் சாப்பிடுவது போலவும் அருகில் நிறைய பிஸ்கட்டுகள் இருப்பது போலவும் கூட வைத்து நாம் போட்டோஷூட் செய்யலாம்.

 

8. லெட்டர் போர்டு போட்டோஷூட்

நாம் இப்போது எந்த வாரத்தில் இருக்கிறோம், நாம் இப்போது எவற்றை எல்லாம் தவிர்த்திருக்கிறோம், அல்லது காமெடியாக வாசகங்களை ஒரு ஸ்லேட்டில் எழுதி அதனை காண்பிக்கலாம். அவ்வாறு நாம் காண்பிக்கும்போது வயிறு வெளிப்படும் விதத்தில் இருக்கவும் வேண்டும். இது இனிமையான போட்டோஷூட் தருணமாக நிச்சயம் நமக்கு அமையும்.

 

9. பிள்ளைகளுடன் இருத்தல்

நமக்கு இது இரண்டாவது கர்ப்பமாக இருந்தால், முதல் பிள்ளையை கருவில் இருக்கும் பிள்ளையுடன் அன்பை வெளிப்படுத்துவது போலவும் நாம் போட்டோஷூட் செய்யலாம்.

 

10. ஏஞ்சல் போல் இருத்தல்

ஏஞ்சல் போன்ற உடை உடுத்தி, தலையில் பூ மகுடம் வைத்து நாம் போட்டோஷூட் செய்யலாம். இது மிகவும் அற்புதமான ஒரு போட்டோஷூட் யோசனையும் கூட.

தோழிகளே, இந்த பதிவின் மூலமாக எப்படி எல்லாம் போட்டோஷூட் செய்வது என்பது குறித்த யோசனைகளை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறோம். மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#pregnancyphotoshoot

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.