• Home  /  
  • Learn  /  
  • பிறந்த பிள்ளைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை
பிறந்த பிள்ளைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை

பிறந்த பிள்ளைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை

7 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பிறந்த பிள்ளைக்கு மஞ்சள் காமாலை ஏன் வருகிறது? இதனை எப்படி சரி செய்வது?

 

மஞ்சள் காமாலை என்பது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதாகும். ஆனால், பிறந்த பிள்ளைக்கும் இது போன்று ஏற்படுகிறது. இதற்கு காரணம், பிலிரூபின் அதிகளவில் இருப்பதே. சிவப்பு இரத்த அணுக்கள் குறையும்போது இதுபோன்ற மஞ்சள் நிறமி ஆக்கிரமிக்க தொடங்குகிறது. இதுகுறித்த பல பயனுள்ள தகவலை தருகிறது, இந்த பதிவு.

 

பிறக்கும் போது வரும் மஞ்சள் காமாலையால் பாதிப்பு ஏற்படுமா?

பிள்ளைகளின் கல்லீரல் வளர்ச்சி அடையும்போது பிறந்த பிள்ளைகளுக்கு இந்த பிரச்சனை சரியாகிறது. பொதுவாக பிறக்கும் போது இருக்கும் இந்த பிரச்சனை இரண்டு முதல் மூன்று வாரங்களில் சரியாகிவிடுகிறது. ஒருவேளை மூன்று வாரங்களுக்கு மேலாக இப்பிரச்சனை இருப்பதை நாம் கண்டால், அப்போது கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

 

மஞ்சள் காமாலை வர என்ன காரணம்?

1. முப்பத்தி ஏழு வாரங்களுக்கு முன்பாக பிள்ளைகள் பிறக்கும்போது, இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

2. ஒருவேளை நம்முடைய பிள்ளைகள் குடிக்கும் ஃபார்முலா பால் அல்லது தாய்ப்பால் போதுமான அளவில் இல்லையென்றாலும் மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது.

3. அம்மாவின் இரத்த வகையுடன் பிறந்த பிள்ளைகளின் இரத்தம் பொருந்தாத போதும் மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது. அதாவது, அம்மாக்களின் இரத்தத்தோடு பொருந்தாத போது, சிகப்பு இரத்த அணுக்கள் அழிந்து பிலிரூபின் அளவு அதிகரிக்க கூடும்.

 

பிறந்த பிள்ளைக்கு மஞ்சள் காமாலை வருவதை எப்படி அறிவது?

  • இதன் முதல் அறிகுறியாக நம்முடைய பிள்ளைகளின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருக்கும்
  • இந்த மஞ்சள் நிறமானது இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு இருக்க, உடலில் பரவும் முன்பாக முகத்திலும் காணப்படலாம்
  • பிள்ளைகள் பிறந்த மூன்று முதல் ஏழு நாட்களில் பிலிரூபின் அளவானது அதிகமாக இருக்கவும் கூடும்
  • நம்முடைய பிள்ளைகளின் சருமத்தை லேசாக அழுத்தும்போது, அது மஞ்சள் நிறத்தில் மாறலாம். இதுவும் மஞ்சள் காமாலையின் அறிகுறி தான்

 

எப்போது மருத்துவரை நாம் பார்ப்பது?

பெரும்பாலும் மஞ்சள் காமாலைக்கு இப்போது எந்தவொரு மருத்துவமும் நம்முடைய பிள்ளைகளுக்கு தேவைப்படுவதில்லை. பிறந்த பிள்ளைகளுக்கு இப்பிரச்சனை இருப்பது பொதுவான விஷயம் தான். ஆனாலும், மருத்துவர்களிடம் ஒரு தடவை கலந்தாலோசிப்பது தேவையற்ற குழப்பத்தை தவிர்க்க உதவும். சில சமயம், இது மூளைக்கு பரவ வாய்ப்புள்ளது என்பதால் கவனக்குறைவுடன் நாம் இப்போது இருக்கக்கூடாது. கீழ்காணும் அறிகுறிகள் உங்களுடைய பிள்ளைகளுக்கு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

 

  • மஞ்சள் காமாலை பரவுவது தீவிரமாக இருந்தால்
  • நம்முடைய பிள்ளைகளுக்கு 100 டிகிரி பேரன்ஹீட்டுக்கு மேலாக காய்ச்சல் இருந்தால்
  • நம்முடைய பிள்ளைகளின் உடல் அடர் மஞ்சளாக மாற தொடங்கினால்
  • நம்முடைய பிள்ளைகள் ஒழுங்காக பால் குடிக்க மறுத்து அடம்பிடித்தால்

 

இதனை எப்படி குணப்படுத்துவது?

1. பிள்ளைகளுக்கு வரும் லேசான மஞ்சள் காமாலை, கல்லீரல் வளர்ச்சியடையும்போது சரியாகிவிடும்.

2. நாம் அவர்களுக்கு முறையாக பாலூட்டினாலே, அவர்கள் உடலில் காணப்படும் பிலிரூபின் அளவு குறைய தொடங்கிவிடுகிறது.

3. ஒருவேளை நம்முடைய பிள்ளைகளுக்கு இருக்கும் மஞ்சள் காமாலை அதிகமாக இருந்தால் அப்போது, போட்டோதெரபி அவசியமாகிறது. இது நம்முடைய பிள்ளைகளின் உடலில் உள்ள பிலிரூபின் அளவை சிதைக்க உபயோகிக்கப்படுகிறது.

4. சில சமயங்களில் இந்த பிரச்சனையை சரி செய்ய நம்முடைய பிள்ளைகளுக்கு டோனர் அல்லது இரத்த வங்கியிடமிருந்து குறைந்தளவு இரத்தமானதும் தேவைப்படுகிறது. இதன் மூலமாக சிதைந்த இரத்த அணுக்கள் நீக்கப்பட்டு ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் பிலிரூபின் அளவு குறைந்து சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் தொடங்குகிறது.

பிள்ளைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை குறித்து கவலைப்பட வேண்டாம். இன்றைய நவீன உலகில், எந்தவொரு பிரச்சனையையும் மருத்துவர்கள் விரைவில் குணப்படுத்திவிடுகின்றனர். இது பொதுவாக பிறக்கும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தான் என்றாலும், இது குறித்து எப்போதும் மருத்துவர் ஆலோசனையை பெற்றபடி நாம் இருப்பது நல்லது. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babycareandhygiene #babyhealth

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.