பிள்ளைகளுக்கு இப்போது வரும் கனவு பற்றி கண்டிப்பாக அறிய வேண்டியவை!

cover-image
பிள்ளைகளுக்கு இப்போது வரும் கனவு பற்றி கண்டிப்பாக அறிய வேண்டியவை!

பிள்ளைகள் கனவு கண்டு திடீரென எழுந்துவிடுகிறார்களா? இதற்கு என்ன காரணம்? என்ன செய்தால் நிம்மதியாக தூங்குவார்கள்?

 

இரண்டு முதல் நான்கு வயதில் நம்முடைய பிள்ளைகளுக்கு வரும் கனவு, அவர்களை அதிகம் பயமுறுத்துக்கூடும். ஒருவேளை இது போன்ற கனவுகள் அவர்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யும்போது மீண்டும் தூங்க சற்று கடினமாக உணர்வார்கள். இது போன்ற கனவுகளை குறித்த சுவாரஸ்யமான பதிவை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம்.

 

எப்போது இது போன்ற கனவை நம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கலாம்?

பெரும்பாலும் இது போன்ற கனவுகள் நம்முடைய பிள்ளைகளின் தூக்கத்தின் இரண்டாவது பாதியில் தான் வரக்கூடும். இது போன்ற கனவுகளை அவர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளும்போது, மீண்டும் அடுத்த நாளும், அதே போல கனவு வருமா என்ற அச்சத்துடன் இருக்கவும் வாய்ப்புள்ளது. சில சமயம் என்ன கனவு கண்டோம் என்பதை மறந்துவிட்டு, ஏதோ ஒரு கெட்ட கனவை கண்டோம் என்று மட்டுமே நினைத்து அச்சம் கொள்ளவும் செய்வர்.

 

எதனால் இது போன்ற கனவுகள் அவர்களுக்கு வருகிறது?

எல்லா பிள்ளைகளுக்கும் கனவு வருவது சாதாரணமான விஷயமே. ஆனாலும், இரண்டு முதல் நான்கு வயது பிள்ளைகளுக்கு கெட்ட கனவு வருவது ஒரு வித அச்சத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்தும். இது வழக்கமாக அச்சம் குறித்து அவர்கள் நினைக்கும் வயது நிலையும் கூட.

 

ஒருவேளை அவர்கள் ஏதாவது அச்சப்பட வைக்கும் கதைகளை கேட்டிருந்தால், அதன் பிரதிபலிப்பாக இது போன்ற கனவுகள் வரலாம். அவர்கள் கேட்கும்போது பயப்படாதது போல இருந்தாலும், அவர்கள் ஆள் மனதை அந்த கதை ஆட்கொள்ளும்போது இது போன்று நடக்கலாம். அவர்களை எரிச்சலடைய வைக்கும் படம் அல்லது நிகழ்ச்சியை கண்டாலும் இது போன்ற கனவுகள் வரக்கூடும். தூங்குவதற்கு முன்னால் வரை ஓய்வின்றி விளையாட்டு என இருந்தாலும் இது போன்ற கனவுகள் அவர்களுக்கு வரலாம். அவர்கள் கவலையாக அல்லது பதட்டமாக இருக்கும்போது மனதின் பலவீனத்தால் இது போன்று நிகழவும் வாய்ப்புள்ளது.

 

பெரும்பாலும் இரண்டு முதல் நான்கு வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு இதுபோல கனவு வர பதட்டம் தான் காரணம். இப்போது அவர்கள் கழிப்பறை பயிற்சியில் ஈடுபட்டு வரலாம், பள்ளிக்கு செல்வது குறித்த பய உணர்வு இருக்கலாம். பெற்றோர்கள் அவர்களுடைய வேலையை மட்டும் பார்க்கும்போது, பாதுகாப்பற்ற பயமும் வரலாம். இது மாதிரியான சூழலில், கெட்ட கனவுகள் அவர்களுக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது.

 

கனவு கண்ட பிள்ளைகளை சமாதானப்படுத்தி தூங்க வைப்பது எப்படி?

அவர்கள் அழுது முடித்தவுடன் அவர்கள் அருகில் செல்லவும். அவர்களை கட்டி அணைத்து, முதுகை தடவி கொடுக்கலாம். அவர்கள் மெல்ல அமைதியடைவார்கள். இது நிரந்தரமானது அல்ல என்ற வார்த்தையை அவர்கள் மனதில் பதிய வைக்கவும். நாம் அவர்களுடன் இருக்கும்போது நிச்சயம் பாதுகாப்பாக உணர தொடங்குவர். கனவு கண்டு அழும் பிள்ளையை அடிக்கவோ அல்லது திட்டவோ கூடாது.

 

நமக்கும் இது போன்ற கனவு வரும் என்பதையும், நாம் அதனை மறந்து எப்படி தூங்குகிறோம் என்பதனையும் கூறி அவர்களை தூங்க வைக்க முயலலாம். “கனவு என்பது மாயை, அது நிஜம் அல்ல.” என்பதை நாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய பிள்ளைகள் நிஜம் எது? ஃபேண்டஸி எது? என்பதனை இப்போது தான் புரிந்துக்கொள்ள தொடங்குவர். கனவு வெறும் மாயை என்பது இப்போது தான் அவர்கள் கற்றுக்கொள்ள செய்கின்றனர் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப அவர்களை சமாதானப்படுத்த வேண்டும்.

 

இது போன்ற கனவு வராமல் தவிர்ப்பது எப்படி?

  • நல்ல கனவு தான் உனக்கு இன்று வரும் என்ற நம்பிக்கையை நம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கவும்
  • லேசாக ஸ்கின் லோஷன் அல்லது ஃபேஸ் கிரீம் தடவி விடலாம்
  • நல்ல நறுமண வாசனை வீசும் ஸ்பிரேவை, அவர்கள் தூங்கும் முன்பு லேசாக ரூமில் தெளித்து வைக்கலாம்

 

கனவு என்பது நிழல் தான் என்பதையும், இதுவும் கடந்து போகும் என்பதையும் நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் புரியவைக்க முயல வேண்டும். மீண்டுமொரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#toddlerbehaviour #parentinggyaan #babysleep
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!