பிள்ளையை பெற்ற அம்மாக்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அழகிய தருணம்

cover-image
பிள்ளையை பெற்ற அம்மாக்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அழகிய தருணம்

இந்த பதிவில், “அம்மாக்கள் அவர்களுடைய கர்ப்ப காலமும், பிரசவ காலமும் எப்படி இருந்தது என்பதனையும், அவர்களின் அனுபவத்தையும்” நம்முடன் சுவாரஸ்யமாக பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

 

நீங்கள் முதல் முறை பிள்ளையை பெற்று கொண்டீர்களா? அப்படி என்றால், எப்பேற்பட்ட ஆனந்தம் உங்களுக்கு கிடைத்திருக்கும் என்பதை நான் சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால், அது விழாக்காலம் போன்றது. கர்ப்பமாக இருப்பதில் தொடங்கி பிள்ளைகள் பிறப்பது வரை என ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையின் அழகிய நாட்களே. அப்படிப்பட்ட அழகிய நாட்களை நாமும் மற்ற அம்மாக்களுடன் பகிர்ந்துக்கொண்டு நினைவுகளில் மலரலாமே.

பிள்ளையை பெற்றுக்கொண்ட அம்மாக்களின் அழகிய பதிவு

கருத்து 1:

நான் கர்ப்பமென்ற செய்தி கேட்டதும் ஒரு நிமிடம் ஆடி போனேன். காரணம், நான் பார்க்க சின்ன பெண்ணாகவே தெரிவேன். தாய்மை என்பதனை நினைத்த பதட்டம் எனக்குள் தொற்றி கொண்டது. ஆனாலும், என்னை காண வர போகும் அந்த புதிய உயிருக்காக பயத்தை எல்லாம் மகிழ்ச்சியாக மாற்ற முயன்றேன். நான் திருமணம் செய்து கொண்ட போது சின்ன பெண்ணாக இருக்கிறேனே, என்னால் வாழ்க்கையை வழி நடத்தி என் கணவர் மனதில் இடம்பிடிக்க முடியுமா என்று நினைத்தேன். ஆனால், நான் கர்ப்பமென்று தெரிந்ததும் அவர் என்னை முத்த மழையில் நனைய வைத்தது அவர் என் மீது கொண்ட அன்பை அழகாக வெளிப்படுத்தியது. அதனை நான் ரசித்தேன். இப்போதும் நான் நம்புகிறேன். தாய்மையின் அழகை என்னால் உணர முடியும், என் பிள்ளையை நன்றாக வளர்க்க முடியுமென்று.கருத்து 2:

நான் எனது இருபத்து நான்கு வயதில் தாய்மையை அடைந்தேன். எனக்கு கல்லூரி படிப்பு முடிந்ததுமே திருமணம் நடந்தது. எனக்கு பலவித இலட்சியம் இருந்தது. நான் செய்த புண்ணியமோ, என்னுடைய இலட்சியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு கணவர் கிடைத்தார். நான் தடுமாறும் போதெல்லாம், என்னை தாங்கி பிடிப்பவர் அவர் மட்டும் தான். இப்போது நாங்கள் இருவரும் இணைந்து ஒரு பெண் குழந்தையை தாங்கி பிடித்து எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம்.

 

கருத்து 3:

கருச்சிதைவுக்கு பிறகு நான் கர்ப்பம் ஆனேன். அதனால், எதற்கெடுத்தாலும் பயம் என்ற மனநிலையில் தான் நான் இருந்தேன். இதனை கவனித்துக்கொண்டிருந்த என் கணவர், ‘பயப்படுவதே, குழந்தை ஆரோக்கியத்தை குறைக்கும்.’ என கூறி என்னை அவர் மார்பில் சாய வைத்து ஆறுதல் கூறினார். எனக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. இருப்பினும், வாந்தி, குமட்டல், மயக்கம் என வரும்போதெல்லாம் லேசான பயம் எனக்குள் எட்டி பார்த்தது. பயம் எட்டி பார்த்த போதெல்லாம், என் கணவரும் என்னை எட்டி பார்த்து, ‘நான் இருக்கிறேன்’ என்பது போல மெல்ல சிரித்தார். இப்போது எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். இந்த தருணத்தில் நான் எனது கணவருக்கும், இரு வீட்டாருக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

 

கருத்து 4:

முதல் 6 மாதங்கள் என்னுடைய பிரக்னென்சி மிகவும் சிக்கலாகவே இருந்தது. பொதுவாக மூன்று மாதத்தில் வாந்தி குறைந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு ஆறு மாதங்கள் வரைக்கும் வாந்தி, குமட்டல், மயக்கம் எல்லாமே அதிகமாகவே இருந்தது. இதற்கு காரணம் பனிக்குட நீர் குறைந்தது தான் என என் மருத்துவர் கூறி என்னை ஓய்வில் இருக்க சொன்னார். எனது கணவர் மட்டுமே எனக்கு ஆதரவை சிறப்பாக தந்தார். நாற்பது வாரங்களில் எனக்கு பிரசவ வலி வந்தது. பிள்ளையை பெற்றுக்கொள்ள போகும் அந்த ஒரு மகிழ்வான தருணத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு வலிகளை பொருட்படுத்தாமல் இருந்தேன். இன்று எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். அன்று நான் கண்ட வலியை எல்லாம், நான் அனுபவித்த சங்கடத்தை எல்லாம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு என்னுடன் இருக்கிறான்.

 

கருத்து 5:

சில மணி நேரங்கள் நான் புஷ் செய்து கத்தினேன். அவள் மெல்ல வெளிவந்தாள். என் வலிகளை எல்லாம் வசந்த காலமாக மாற்ற அவள் மெல்ல வெளி வந்தாள். ஆம், எனக்கு மகள் பிறந்தாள். அப்போது நான் அனுபவித்த வலியெல்லாம் நொடி பொழுதில் காணாமல் போனது. தாய்மையை உணர்ந்த அழகிய தருணம் அதுவாகும். அவளுக்காக தான் எனது வாழ்க்கை என்ற ஒரு உணர்வு எனக்குள்ளே. அவளுக்காக எப்படிப்பட்ட துயரத்தையும் இனிமேல் நான் எதிர்கொள்ள காத்திருக்கிறேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். அந்த அழகிய தருணத்தை நினைத்தால், இன்றும் என் கண்கள் ஆனந்த தாண்டவமாடி, கண்ணீரை வரவழைக்கிறது.

 

நீங்களும் உங்களுடைய அழகிய தருணத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#realexperience #positiveposts
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!