பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்

cover-image
பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்

இந்த பதிவில், “ பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் நாம் கொடுக்கலாம்? உணவு தருவதில் எதனை எல்லாம் நாம் கவனிக்கவும்? இப்போது காலை, மதியம், இரவில் கொடுக்க வேண்டியவை எவை?” போன்றவற்றை பார்க்கவிருக்கிறோம்.

 

நம்முடைய பிள்ளைகள், அவர்களின் முதல் பிறந்த நாளை கொண்டாடும்போதே தளிர்நடை பருவத்தை அடைந்து விடுகின்றனர். இப்போது அவர்களின் எடையானது, பிறந்தபோது இருந்ததை விட மூன்று மடங்கு கூடுதலாக இருக்கும்.

 

நம்முடைய பிள்ளைகளின் 1 முதல் 3 வயதை தளிர்நடை போடும் வயது என அழைப்போம். இப்போது அவர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுடைய செரிமான மண்டலமும் நம்மை போலவே எல்லா உணவையும் சாப்பிட தற்போது தயாராக இருக்கும்.

 

1 முதல் 3 வயது பிள்ளைக்கு என்னவெல்லாம் கொடுக்கலாம் என்பதை நாம் இந்த பதிவில் காணலாம்.

 

என்னவெல்லாம் நாம் கொடுக்கலாம்?

 • நம்முடைய பிள்ளைகளுக்கு இப்போது காய்கறி இட்லி கொடுக்கலாம்.
 • பருப்பில் புரதம் உள்ளது. அதேபோல காய்கறிகளில் நார்ச்சத்தும் இருப்பதால், இவற்றைக்கொண்டு சூப் செய்து நாம் அவர்களுக்கு கொடுக்கலாம்.
 • அடையை விரும்பி சாப்பிடுவார்கள். அடை செய்யும்போது மிருதுவாக செய்து கொடுக்கவும். கனமாக இருந்தால் வெறுத்து விட வாய்ப்புள்ளது. கம்பு, ஓட்ஸில் ஊத்தப்பம் செய்தும் கொடுக்கலாம்.
 • சப்போட்டா மில்க் ஷேக் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கலாம். சப்போட்டா மில்க் ஷேக் செய்யும்போது மேலுள்ள தோலை நீக்க மறவாதீர்கள். இது அவர்களுக்கு ஜீரணிக்க சிரமத்தை ஏற்படுத்தலாம்.
 • பரோட்டா இப்போது அவர்களுக்கு பிடிக்கும், ஆனாலும் அவை மென்மையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக கொடுப்பதற்காக, பன்னீர் வெஜிடபிள் பரோட்டா செய்து நாம் அவர்களுக்கு கொடுக்கலாம். இதனை உருட்டி சின்ன லட்டுவாகவும் நாம் கொடுக்கலாம்.

எதனை எல்லாம் நாம் கவனிக்கவும்?

1. இப்போது ஒரே மாதிரியான உணவை கொடுக்காமல் வித்தியாச வித்தியாசமான உணவை நாம் அவர்களுக்கு தர வேண்டும்.

2. அவர்கள் இப்போது நம்மை போல சாப்பிட தொடங்கினாலும், அளவுக்கதிகமாக கொடுப்பதை கட்டாயம் தவிர்க்கவும்.

3. அவர்களை வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்க கூடாது. அவர்கள் எத்தனை முறை சாப்பிடுகிறார்கள் என்பதை விட, என்ன சாப்பிடுகிறார்கள் என்பதே மிகவும் முக்கியம்.

4. அவர்கள் சாப்பிடும் பிளேட்டை கலர்புல்லாக, பொம்மை கார்ட்டூன் போன்ற வடிவங்களில் வாங்கி வைத்துக்கொள்ளவும்.

5. நம்முடைய பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த உணவை கேட்டு அடம்பிடித்து நம்முடைய தலைமுடியை பிடித்திழுக்கவும் செய்வார்கள். இது போன்ற சமயங்களில் கோபப்படாமல் மெல்ல நாம் சூழ்நிலையை அவர்களுக்கு புரிய வைக்க முயலலாம்.

 

நம்முடைய பிள்ளைகள் பசியில் இருப்பதை இப்போது எப்படி அறிவது?

இப்போது அவர்கள் மற்ற விஷயங்களை கற்றுக்கொள்ள கூடுதல் ஆர்வத்துடன் இருப்பதால், பசி எடுக்கிறது என்ற வார்த்தையை மிக குறைவாகவே உபயோகிப்பார்கள். அவர்களுக்கு பசி எடுத்து சரியான நேரத்தில் உணவு கிடைக்கவில்லை என்றால் அடம்பிடித்து அழவும் செய்வார்கள்.

 

வேறு என்னவெல்லாம் நாம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்?
காலையில் கொடுக்க வேண்டியவை எவை?

 • பாசிப்பருப்பு அடை
 • வெஜ் உப்புமா
 • கோதுமை உணவு
 • சப்பாத்தி, உருளைக்கிழங்கு, பட்டாணி குருமா
 • ரவா இட்லி

 

மதியம் கொடுக்க வேண்டியவை எவை?

 • கிச்சடி
 • கீரை சாதம்
 • முட்டை ரைஸ்
 • வெஜ் புலாவ்
 • கேரட் ரைஸ்

 

இரவு கொடுக்க வேண்டியவை எவை?

 • இட்லி
 • நன்றாக வேக வைத்த தோசை


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#toddlerfoods #instantrecipes
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!