சென்னையில் உள்ள சிறந்த மகப்பேறு மருத்துவர்கள்

cover-image
சென்னையில் உள்ள சிறந்த மகப்பேறு மருத்துவர்கள்

நாம் கர்ப்பம் என தெரிந்தவுடனே, பல வித மகப்பேறு மருத்துவர் பெயர்களை நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பரிந்துரைப்பார்கள். ‘நான் ஒருவரிடம் மருத்துவத்துக்கு சென்றேன். அவரால் தான் சிறப்பாக பிரசவம் பார்க்க முடிந்தது.’ இப்படி பல வித பரிந்துரைகள் நமக்கு வரும். அப்படி வந்த சிறந்த பரிந்துரைகளை தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம். சென்னையில் உள்ள சிறந்த மகப்பேறு மருத்துவர்கள் யார்? யாரிடம் நாம் செக்கப் செல்லலாம்? அவர்கள் குறித்த மற்றவர்களின் அபிப்ராயம் என்னவென்பதை நாம் இப்போது காண்போம் வாருங்கள்.

 

1. Dr. பத்மபிரியா விவேக் - பெரும்பாக்கம்

பலரும் இவரிடம் சென்று பிரசவம் பார்த்து பிள்ளையை பெற்று மகிழ்வோடு அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். ‘எனக்கு இவரை ஐந்து வருடங்களாக தெரியும். இவர் மிகவும் அன்பானவர். இவர் தன்னிடம் செக்கப் செய்ய வரும் பெண்களுக்கு சிறந்த ரோல் மாடலாக இருக்கிறார். இவர் நம்முடைய எடையை தொடர்ந்து கண்காணித்து, எளிதாக பிரசவம் நடக்க உதவுகிறார்.’ என போற்றி புகழ்ந்துள்ளார். ஒருவர் இவரிடம் இரண்டாவது முறையும் பிரசவம் பார்த்தது குறித்து மகிழ்வோடு கூறி இருக்கிறார்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 600 ரூபாய்

 

2. Dr. கிருத்திகா மணிமாறன் - நங்கநல்லூர்

ஒருவர் தனது நாத்தனாரின் பிரசவ அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளார். ‘எனது நாத்தனாருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்தது. இவரிடம் தான் நாங்கள் சென்றோம். இதே மருத்துவமனையில் தான் நல்ல முறையில் அவருக்கு பிரசவம் நடந்தது.’ என அனுபவத்தை அவ்வளவு அழகாக விளக்கி உள்ளார். இவர் நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வை கூறும் விதம் மிகவும் அருமை எனவும் ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார். இவர், மிகவும் நட்புடன் நம்முடன் பழகி, பிரச்சனையை கையாள்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 450 ரூபாய்

 

3. Dr. P. ப்ரீத்தி - அடையார்

இவர் பிரச்சனையை விளக்கி பதில் கூறும்விதம் நமக்கு ஒரு தன்னம்பிக்கையை அளிப்பதாக பலரும் கூறுகின்றனர். ‘நான் ஐந்து வருடங்களாக கர்ப்பமாக முயன்றேன். ஆனால், எந்த பலனுமில்லை. நான் போகாத மருத்துவமனை இல்லை, பார்க்காத டாக்டர் இல்லை. இறுதியாக தான் நான் டாக்டர் ப்ரீத்தி அவர்களிடம் சென்றேன். ஒரு வருடத்தில் நான் கர்ப்பம் தரித்தேன் என ஒருவர் அவருடைய அனுபவத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 700 ரூபாய்

 

4. Dr. தாமரை - மணப்பாக்கம்

இவர் மிகவும் அமைதியானவர். நம்முடைய குறைகளை கேட்டு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் அழகாக விளக்குகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கர்ப்பம் தரிக்க முடியாமல் சிரமம் கொண்ட பல பெண்களும் இவரிடம் பரிந்துரை பெற்று, பிள்ளை பாக்கியம் பெற்று, அதனை முகநூலில் மகிழ்ச்சியுடன் பகிர்வதை நம்மால் பார்க்க முடிகிறது. சிரித்த முகத்தோடு பிரச்சனைகளை கேட்டறிந்து, அதற்கு அழகான தீர்வையும் வழங்கும் இவர் சென்னையில் உள்ள சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் ஒருவர் என்பதை நாம் ஒரு முறை சென்று பார்த்தால் போதும், நிச்சயம் உணர முடியும்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 300 ரூபாய்

 

5. Dr. நிவேதிதா V C - கொளத்தூர்

எனக்கு அந்தரங்க உறுப்பில் தொற்று என்று சென்றேன். இவர் பிரச்சனையை அணுகிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவர் மிகவும் அன்பாக என் குறைகளை கேட்டறிந்து, நான் என்ன செய்ய வேண்டுமென்பதை தெளிவாக விளக்கினார். நான் பார்த்த பல மருத்துவர்களில் இவர் சிறந்தவர் என்று ஒரு பெண் கருத்து தெரிவித்துள்ளார். இவர் அளித்த சிகிச்சை எனக்கு மிகவும் பிடித்திருந்தது எனவும் பலரும் கூறியுள்ளனர்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 300 ரூபாய்

 

6. Dr. மிஷா பெப்சி - மடிப்பாக்கம்

சென்னையில் உள்ள பல பிரபலமான மகப்பேறு மருத்துவர்களில் இவரும் ஒருவராவார். ‘எனக்கு 38 வயது, எட்டு வருடமாக கர்ப்பம் தரிக்க முயன்றேன். ஆனால் எந்த பலனுமில்லை. அப்போது தான் என் தோழி, Dr. மிஷா பெப்சி அவர்களை பரிந்துரை செய்தாள். ஆரம்பத்தில் செல்ல சற்று தயக்கமடைந்தேன். இறுதியாக இவரையும் ஒரு முறை பார்த்துவிட வேண்டியது தான் என முடிவு . செய்தேன். மருத்துவமனைக்குள் நுழைந்ததும் அப்படி ஒரு பதட்டம். காரணம், நான் கண்ட கூட்டம். ஆனால், சூழலை சிறப்பாக அமைத்து தந்த வண்ணம் அங்கிருக்கும் செவிலியர்கள் எங்களுக்கு உதவினார்கள். டாக்டரும், எனக்கு இருக்கும் பிரச்சனையை கேட்டறிந்து எதனால் இப்படி ஆனது என்பதை விளக்கினார். அவர் விளக்கி விதமே, எனக்கு ஒரு தன்னம்பிக்கையை அளித்தது. இன்று எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.’ என அனுபவத்தை மகிழ்வுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 500 ரூபாய்

 

7. Dr. கோகிலவாணி - வேளச்சேரி

‘இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் இவரிடம் சென்றேன். சிறந்த முறையில் எனக்கு வழிகாட்டினார். இவர் மிகவும் பிரெண்ட்லியாக என்னிடம் பேசினார்.’ என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். என்னிடம் சிறந்த மகப்பேறு மருத்துவர் யார் என கேட்டால், நிச்சயமாக Dr. கோகிலவாணி அவர்களை பரிந்துரைப்பேன் என பலரும் கூறுகின்றனர்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 500 ரூபாய்

 

8. Dr. M. இந்து - கொளத்தூர்

;இவர் நமது நேரத்தை பொன் போல் மதிக்கிறார். நான் இன்றைய நாளில் என் உலகத்தை (பிள்ளையை) பார்த்திருக்கிறேன் என்றால், அதற்கு இவர் தான் காரணம்.’ என உணர்வுப்பூர்வமாக ஒருவர் பகிர்ந்துள்ளார். ‘நாம் பாதுகாப்பாக பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நிச்சயம் Dr. இந்து அவர்களிடம் தான் செல்ல வேண்டும்.’ என ஒருவர் பகிர்ந்துள்ளார். ‘நான் ஒவ்வொரு முறை இவரிடம் செக்கப் சென்றபோதும், என் உடல் எந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதனை விரிவாக விளக்கினார். இவரிடம் வந்த பிறகு தான் என்னால் கர்ப்பம் தரிக்க முடிந்தது. இன்று எனக்கொரு பெண் குழந்தை.’ என அனுபவத்தை அவ்வளவு அழகாக நம்முடன் ஒரு பெண் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

கன்சல்டேசன் ஃபீஸ்: 500 ரூபாய்

பிள்ளை பெற்றுக்கொள்வதென்பது இன்றைய காலக்கட்டத்தில் கடினமான விஷயம் ஒன்றுமல்ல என்பதனை இவர்களின் அனுபவத்தின் மூலம் நாம் அறிந்தோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#gynecologist #pregnancymustknows
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!