13 Dec 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
நம்முடைய உடலில் உள்ள முக்கியமான உறுப்புக்களில் ஒன்று கண். இதன் ஆரோக்கியத்தில் நாம் எப்போதுமே அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், குறிப்பாக கீரை, கேரட் போன்றவை நாம் அதிகமாக சேர்த்துக்கொள்ளும்போது கண் ஆரோக்கியம் மேம்படும் என்பர். ஆனால், இன்றைய நாளில் செயற்கையாக பலருக்கு கண் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன. காரணம், ஆரம்ப கட்டத்தில் அந்த பிரச்சனையை குணப்படுத்தாமல், தும்பை விட்டு வால் பிடிக்கும் கதையாக கடைசியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, மருத்துவர்கள் சொட்டு மருந்து, கண் கண்ணாடி, லென்ஸ் என அறுவை சிகிச்சை கூட பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் சிறந்த மருத்துவமனை கிளினிக்குகள் எவை சென்னையில் இருக்கிறது என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
1. Dr. பார்த்தசாரதி மெமோரியல் ஹாஸ்பிடல்
இங்கு, கண் கோளாறுகள் நவீன முறையில் சிறப்பாக சரி செய்யப்படுகிறது. நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் இருக்கும் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப சிறந்த சிகிச்சையை இங்குள்ள மருத்துவர்கள் வழங்குகிறார்கள். கண்களை பரிசோதித்து அவர்கள் கண் திறனை பொறுத்து சிறந்த தீர்வுகளை இங்குள்ள மருத்துவர்கள் வழங்குகின்றனர்.
2. நிர்மல்ஸ் கண் மருத்துவமனை – தாம்பரம் மேற்கு
‘நான் கண் அலர்ஜிக்காக இந்த மருத்துவமனை சென்றேன். இங்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்யப்படுவது குறித்து எந்தவொரு சந்தேகமுமே வேண்டாம்.’ என்கிறார் ஒருவர். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கேற்ப, நாம் எவ்வளவு பொறுமையாக இருக்கிறோமோ, அதே போல இங்குள்ள மருத்துவர்களும் நம்மை பொறுமையாக சோதித்து சிறந்த தீர்வை வழங்குகின்றனர் என்கின்றார் இன்னொருவர்.
3. நோபிள் மருத்துவமனை – புரசைவாக்கம்
இங்கு, நம்முடைய கண்களை சிறப்பாக பாதுகாப்பதாக பலரும் கூறுகின்றனர். இங்குள்ளவர்கள் நம்முடன் அக்கறையாக நடந்துகொள்வதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். காப்பீட்டு திட்ட வசதியும் இங்குண்டு. இருபத்து நான்கு மணி நேர சேவையானது இங்கு கிடைக்கிறது. ‘சென்னையில் நான் பார்த்த மருத்துவமனைகளில், இதுவும் சிறந்த ஒன்றென.’ ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
4. சென்னை நேஷனல் ஹாஸ்பிடல் – பாரிமுனை
இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறந்த சூழல் அமைத்து தரப்படுவதாக தெரிய வருகிறது. எல்லா வித வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனை சிறப்பான சேவையை வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது. நம்முடைய நலனை காக்கும் சிறந்த மருத்துவமனை இதுவென பலரும் கருத்து கூறுகின்றனர்.
5. சங்கர நேத்ராலயா – நுங்கம்பாக்கம்
நம்முடைய கண்களில் என்ன குறைபாடு உள்ளது என்பதை தெளிவாக விளக்கி நம்முடைய மனதில் உள்ள அச்சத்தை போக்க இங்குள்ள மருத்துவர்கள் உதவுகின்றனர். சிறந்த சேவையை இங்குள்ள அனைத்து செவிலியர்களும் வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
6. அரவிந்த் கண் மருத்துவமனை – பூந்தமல்லி
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களிலும், பாண்டிச்சேரியிலும் அமைந்திருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை பற்றி கேள்விப்படாதோர் இருக்கவே முடியாது. இவர்கள் கண் சிகிச்சைகளை அறக்கட்டளை சேவையாக வருடங்கள் கடந்து வழங்கி வெற்றி கண்டுள்ளனர். அன்பான, அக்கறையான செவிலியர்கள், மருத்துவர்கள் என நிரம்பி வழியும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு எண்ணற்றோர் வந்து செல்வது வழக்கம் தான். சேவையில் எந்தவொரு குறைபாடுமின்றி சிறந்த முறையில், குறைந்த விலையை நிர்ணயம் செய்து செய்து வரும் இந்த கண் மருத்துவமனை சென்னையில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று என்பதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம்.
7. Dr. அகர்வால் கண் மருத்துவமனை – போரூர்
குடும்பத்தோடு வந்து கண் செக்கப் செய்து கொள்வோரும் இங்கு பலர். இந்த மருத்துவமனை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், ‘அற்புதம், அருமை’ என்கின்றனர் பலரும். சிறந்த சேவையை பெற்று நிறைவான மனதுடன் செல்ல சென்னையில் காணும் சிறந்த இடங்களுள் ஒன்று இந்த மருத்துவமனையும் தான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
#EyeHospitalsinChennai #eyecare #momhealth #childhealth #familyhealth
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.