• Home  /  
  • Learn  /  
  • சென்னையில் உள்ள 5 அலர்ஜி சிறப்பு மருத்துவர்கள்
சென்னையில் உள்ள 5 அலர்ஜி சிறப்பு மருத்துவர்கள்

சென்னையில் உள்ள 5 அலர்ஜி சிறப்பு மருத்துவர்கள்

20 Dec 2021 | 1 min Read

நமக்கு வரக்கூடிய பல முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று அலர்ஜி பிரச்சனை. இதனை கண்டுகொள்ளாமல் விடும்போது தான், எதிர்காலத்தில் பலவித சிக்கல்களை உடலில் ஏற்படுத்தி, எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடுகிறது. நமக்கு இருக்கும் அலர்ஜி பிரச்சனைக்கு சென்னையில் யார் சிறப்பாக மருத்துவம் அளிப்பது என்பதனை நாம் இப்பதிவில் காணவிருக்கிறோம்.

1. சுகம் மருத்துவமனை – திருவெற்றியூர்

‘நான் இங்கே தான் பணிபுரிகிறேன். எனக்கு இந்த மருத்துவமனையில் பணி புரிவது மிகுந்த பெருமையாக இருக்கிறது.’ என்றுள்ளார் ஒரு ஊழியர். இன்னொரு ஊழியரோ, ‘நாங்கள் அனைவரும் இணைந்து இந்த மருத்துவமனைக்கு வரும் பெற்றோர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கி தருகிறோம். எங்களது நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட்டு, செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சவுகரியத்தை வழங்குகிறது.’ என வாயாற புகழ்ந்து பாராட்டியுள்ளார். இங்கு வந்து பயனடைந்த பல பெற்றோர்கள், ‘அருமை’ எனும் ஒற்றை வார்த்தையில், இந்த மருத்துவமனையை பற்றி பாசிட்டிவ் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

http://www.sugamhospital.com/ 

2. Dr. ரெலா இன்ஸ்டிட்யூட் & மெடிக்கல் சென்டர் – குரோம்பேட்டை

குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனை நம்முடைய பிள்ளைகளின் அலர்ஜிக்காக நான் பரிந்துரைக்கும் சிறந்த மருத்துவமனை என ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது. நன்கு வசதியான காற்றோட்டம் மிகுந்த சூழல், பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் அமர்வதற்கு ஏற்ற இருக்கை வசதி என மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டாலும், அமைதியாகவே இருக்கிறது என்கின்றனர் பலரும். இருபத்து நான்கு மணி நேரமும் செயல்படும் இந்த மருத்துவமனை நிச்சயமாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிறந்த ஒன்று என்றும் கூறலாம். இங்கே அனைத்து விதமான பிரச்சனைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

http://www.relainstitute.com/ 

3. ஃபோர்டிஸ் மருத்துவமனை – வடபழனி, அடையார்

நாட்டிலேயே வளர்ந்து வரும் ஆரோக்கியமான மருத்துவமனைகளின் பட்டியலில் இரண்டாவது வசதி நிறைந்த மருத்துவமனையாக இது பார்க்கப்படுகிறது. வடபழனியில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனை 250 மல்டி – சூப்பர் ஸ்பெஷல் படுக்கை வசதியை கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை இருபத்து நான்கு மணி நேரமும் தன்னுடைய சேவையை வழங்குகிறது. மருத்துவர்கள் பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கான தீர்வையும் தெளிவாக வழங்குவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனை, ‘மருத்துவமனை மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த மருத்துவமனை இந்தியாவில் மட்டும் புகழ் பெற்று விளங்காமல், இலங்கையிலும் கால் தடத்தை பதித்துவிட்டது.

https://www.fortishealthcare.com/india/fortis-hospital-in-vadapalani-tamil-nadu 

https://www.fortishealthcare.com/india/fortis-malar-hospital-in-adyar-tamil-nadu 

4. Dr. மீனாட்சி கிருஷ்ணன்

சென்னை அப்போல்லோவில் அலர்ஜி & ஆஸ்துமாவிற்காக இருபது வருடங்களாக சிறப்பான மருத்துவத்தை இவர் பார்த்து வருகிறார். நம்முடைய பிள்ளைகளுக்கு அலர்ஜியால் ஏதாவது பாதிப்பு இருந்தால், இவரிடம் அழைத்து செல்லலாம் என்கின்றனர் பலரும். இவர் பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான நிரந்தர தீர்வையும் வழங்குவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இவர் வைத்தியம் பார்க்கிறார். இவர் உலக அலர்ஜி அமைப்பின் உறுப்பினராகவும், முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடுகள் (ஐரோப்பிய சங்கம்), எதிர்ப்புத்திறனுக்கான ஐரோப்பிய அகாடமி என பல சங்கங்களின் உறுப்பினராக இவர் உள்ளார்.

5. Dr. ராஜேஷ் சைல்டு ஹெல்த் கிளினிக்

பிறந்த பிள்ளைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை, தொற்று என அனைத்திற்கும் டாக்டர் ராஜேஷ் அவர்கள் சிறந்த முறையில் மருத்துவம் பார்த்து வருகிறார். ‘நான் நிச்சயமாக இந்த மருத்துவரை அலர்ஜி பிரச்சனைக்காக பரிந்துரை செய்வேன்.’ என்கிறார் ஒருவர். ‘இவர் மிகவும், இனிமையானவர். எல்லா கேள்விகளுக்கு புன்னகை பூத்த முகத்துடன் சலித்துக்கொள்ளாமல் பதில் அளிக்கிறார். இவர் தீர்வுகளை நம்மிடம் விளக்கி, அச்சத்தை போக்குகிறார். நாம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றாலும், சிறிது காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், காத்திருப்பு வீண் போவதில்லை.’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுபோன்ற இன்னும் பல அலர்ஜி சிறப்பு மருத்துவர்கள் சென்னையில் இருக்கின்றனர். நாம் பார்த்தது அவற்றுள் வெறும் 5% மருத்துவர்களை மட்டுமே. நீங்கள் எந்த அலர்ஜி மருத்துவரிடம் செல்வீர்கள்? அவர்களுக்கு நீங்கள் அளிக்கவிருக்கும் மதிப்பெண்கள் எவ்வளவு?’

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babycareandhygiene #childhealth #AllergySpecialistinChennai

Home - daily HomeArtboard Community Articles Stories Shop Shop