Working Moms Letter

Working Moms Letter

20 May 2022 | 1 min Read

Tinystep

Author | 2574 Articles

அன்பான இல்லத்தரசிகளே..!

மக்களில், சில பேர், நீ வீட்டிலே சும்மா தானே இருக்கிறாய்? என்று உங்களைப் பார்த்து வினவலாம். ஆனால், நீங்கள் வீட்டிலே தினமும் எவ்வளவு பணி புரிகிறீர் என்று எனக்குத் தெரியும்; ஏனெனில், நானும் சில நாட்கள் வீட்டில் இருந்தவள் தான்.

இந்த சமுதாயத்தில், ஒரு பெண்ணாக நீங்கள் வீட்டில் செய்யும் ஊதியமில்லாத, நன்றி பாராட்டாத வேலைகளை மதிக்கவோ பாராட்டவோ யாரும் தயாராக இல்லை. காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை மற்றும் சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களிலும் விடுமுறை இல்லாது, உழைக்கும் ஒரே நபர் ஒவ்வொரு வீட்டின் அன்னை ஆவாள்.

எனது வாழ்வும் உங்களது வாழ்வும் முற்றிலும் வித்தியாசமானதே.! என் பணியோ அலுவலத்தில்.! உங்கள் பணியோ இல்லத்தில்.! நானோ email, project, power point என இவற்றுடன் போராடுகிறேன்.., வீட்டில் இருக்கும் குழந்தையின் நினைவுகளுடன்.. நீங்களோ வீட்டில், குழந்தைக்கு உணவு சமைப்பது, உணவு கொடுப்பது, குழந்தையை குளிப்பாட்டுவது, வீட்டில் இருக்கும் மற்றவரின் தேவையை கவனிப்பது, மற்ற வேலைகளை செய்வது, குழந்தைகளுக்கு இடையே ஏற்படும் சண்டையை தீர்த்து வைப்பது என வேலை செய்வதை வேலையாக எண்ணமால், ஒருவித சந்தோஷத்துடன், நீர் புரியும் வேலையை உங்களுக்கு பதிலாக எவராலும் செய்ய இயலாது.

இவ்வளவு வேலைகளை செய்யும் தங்களுக்கு சில நேரம் ஓய்வு கிடைக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். சில சமயங்களில், உங்களுக்கு உடல் நலம் சரி இல்லை எனினும் உங்கள் வேலைகளை, பகிர்ந்து கொள்ள யாரும் முன்வராமல் இருக்கலாம். என்னால் கூட உடல் நலம் சரி இல்லை என்றால் விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும்; உங்களுக்கு விடுமுறை என்பதே இல்லாமல் உள்ளது. ஆனால், எதையும் பொருட்படுத்தாது, உங்கள் சோதனைகளையும் சாதனையாகும் மனோபலம், உங்களுக்கே உரித்தான ஒன்று.

சமுதாயம் என்னை போன்ற வேலைக்குச் செல்லும் பெண்களை, ‘நீ உன் வீட்டினை கவனிக்கவில்லை’ எனத் தூற்றுவர்; உங்களையோ ‘நீ வீட்டில் தானே இருக்கிறாய், உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று தூற்றலாம். ஆனால், பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் எந்த ஒரு நபராலும் செய்ய இயலாது என்றே கூறலாம்.

என்னைப் பொறுத்த வரையில், வேலைக்குச் சென்று, குடும்பத்தை, குழந்தைகளை, கவனிக்க இயலாமல் இருப்பதை விட, உங்களைப்போல் வீட்டில் இருந்து கவனிப்பதே சாலச் சிறந்தது; நீங்கள் எடுத்த முடிவினை, உங்கள் வாழ்வை எண்ணி பெருமை கொள்ளுங்கள் இல்லத்தரசிகளே! உங்களைப்போல் வாழ இயலாமல் என்னைப்போல், எத்தனையோ பேர் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் மனதில், ‘நாம் வீட்டில் இருக்கிறோம்; நாம் சாதாரணமான இல்லத்தரசி என்ற எண்ணம் இருந்தால்..,’ அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் நாளைய தலைவர்களான, நம் நாட்டின் தூண்களான குழந்தைகளை உங்கள் முழு அன்பு, அரவணைப்புடன் வளர்க்கின்றீர். உங்களுக்கு எந்த பதிவு உயர்வும், பாராட்டும், சம்பளமும் இல்லை; ஆனாலும், உங்கள் பணியை பிழையில்லாமல், பிசிறில்லாமல் தொடர்கின்றீர். நீங்களே மகத்தானவர்!

நமக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும், சில ஒற்றுமைகளும் உள்ளன; குழந்தைகளிடம் அன்பு காட்டுவது, அவர்களின் தேவையை நிறைவேற்றுவது என நம் எண்ணங்கள் ஒன்றாகவே உள்ளன.

நான் இக்கடிதத்தை, “நாம் இருவரும் அன்னையரே! ஆனால், நீங்கள் என்னைப் போன்றவர்களை விடவும் சிறந்தவர்; நீங்கள் வீட்டிலே செய்யும் செயலைப் பாராட்ட யாரும் இல்லாமல் இருக்கலாம்”, உங்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும் மற்றும் என் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே எழுதினேன்..!!

என்றும் அன்புடன்,

வேலைக்குச் செல்லும் அன்னை..!

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.