#tamilbabychakra

#படித்ததில்பிடித்தது

#benefitsofbottlegourd

#சுரக்காயின் நன்மைகள்.

சுரைக்காய் சாப்பிட்டால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா?

இந்தியச் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காயாக சுரைக்காய் இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டம் தான் இந்த சுரைக்காயின் தாயகம் என கூறப்படுகிறது. ஆதிமனிதன் முதலில் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று.

இந்த காய் தற்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிற ஓரு காயாக இருக்கிறது. சுவையான இந்த சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். சுரைக்காய் நன்மைகள் சத்து உணவு சுரைக்காய் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காய் வகையாகும்.

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் இருக்கின்றன. இவை அனைத்தும் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாகும். உடல்சூடு தணியும் நமது நாட்டில் ஏற்படும் கோடை கால வெப்பம் நமது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, தோல் சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

சுரைக்காய் பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும். சிறுநீரகம் சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி காய் ஆகும். சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.

நாவறட்சி நீங்கும் கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் அதிகம் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே பிரச்சினை உண்டு. இவர்களுக்கு நாக்கு வறட்சி ஏற்படும் சமயம் ஒரு கப் பச்சையான சுரைக்காய் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் நாவறட்சி நீங்கும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.


Very useful information Bookmarked 👍


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/100019