தாய்மை இறைத்தன்மையின் மறு பெயர். தாய் என்ற ஒரு கதாபாத்திரம் உலகில் இல்லை என்றால் அன்பு என்ற ஒரு வார்த்தை அகராதியில் இருந்திருக்கவே முடியாது. பிறக்கும் ஒவ்வொரு ஜீவனையும் தன் உயிரினைக் கொடுத்து ஆளாக்குபவள் ஒரு தாயே. அத்தாய்க்கு இந்த தாய் பால் விழிப்புணர்வு வாரத்தில் மனமார்ந்த வணக்கத்தினை தெரிவிப்போம்.

இன்று தாய் பாலின் அவசியத்தினை உணராத மக்கள் இல்லை. அந்த அளவு அரசாங்கமும், சமுதாயமும் முயற்சி செய்து வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தினை பலப்படுத்தியுள்ளது. இருப்பினும் வருடந்தோறும் இதனைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதே இதன் அவசியத்தினை தெளிவாய் விளக்கி விடும். தாய் பாலை பற்றி கூறும்முன் இளம் தாய்மார்கள் சில சுவாரஸ்யமான செய்திகளையும் அறியலாம்.

உங்களது பச்சிளம் குழந்தை உங்களை மிகவும் நேசிக்கின்றது. எப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழுகின்றது அல்லவா?

* சிறு குழந்தை தூக்கும் பொழுதும், பால் குடிக்கும் பொழுதும் உங்களையே பார்க்கும். இவ்வுலகில் அதற்கு வேறு எதுவும் தெரியாது. தான் ஞாபகத்தில் வைத்துள்ள நீங்கள் மட்டுமே அதற்கு மிக மிக முக்கியமானவர் என்று நன்கு தெரியும்.

* 8-12 மாதங்களில் நீங்கள் அருகில் இல்லையென்றால் உங்களைப் பற்றி நினைக்கும். தனிமையாக நினைக்கும். நீங்கள் வந்தவுடன் சிரிக்கும்.

* வீறிட்டு அழுவதின் காரணம் நீங்கள் இல்லாமல் அவர் மிகவும் கோபப்பட்டு விட்டார். வருத்தப்பட்டு விட்டார் என்று கூறும் அவரது மொழி. அவர் யாரையும் உங்கள் அளவிற்கு நம்பவில்லை என்று பொருள்.

* சிறு வலி, அடிக்கு கூட உங்களிடம் மட்டுமே தாவி வருவதன் அர்த்தம் ‘‘அம்மா ஐ லவ் யூ’’ என்பதாகும்.

* சிறு கல்லை கூட தூக்கி உங்களிடம் கொடுப்பதன் பொருள் அவர் உங்களுக்கு பரிசு கொடுக்கின்றார் என்று பொருள்.

* நீங்கள், நீங்கள் மட்டுமே அவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அதுதான் உங்கள் தாய்மையின் பொருள்.

இனி தாய் பால் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.

ஒரு குழந்தை தேவையான அளவு தாய் பால் குடிக்கின்றதா என்பதனை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அதன் எடை, இரண்டு அதன் வளர்ச்சி. பிறந்த சில நாட்கள் குழந்தை கொஞ்சம் எடையினை இழக்கவேச் செய்யும். 14 நாட்களுக்குள் குறைந்த எடையினை மீண்டும் பெற்று விடும்.

குழந்தை போதுமான அளவு தாய்பால் பெற்றுள்ளது என்பதற்கான மேலும் சில அறிகுறிகள்.

* பால் கொடுப்பது தாய்க்கு சவுகர்யமாகவும், வலியின்றியும் இருக்கும்.

* பிறந்த குழந்தை 6-8 முறை நாள் ஒன்றுக்கு பால் குடிக்கும் அதன் பின் அமைதியாய் இருக்கும்.

* குழந்தை பால் அருந்திய பின் மார்பகம் காலியாகவும், மென்மையாகவும் இருக்கும்.

* குழந்தை பால் குடிப்பதனையும், விழுங்குவதனையும் உங்களால் கேட்க முடியும்.

* வயிறு நிரம்பியதும் குழந்தை தானே முகத்தினை திருப்பிக் கொள்ளும். குழந்தை பால் குடிக்க குடிக்க தாய்க்கு பால் பெருகும்.

* வெந்தயம்

* சோம்பு

* பூண்டு

* பச்சை காய்கறிகள்

* சீரகம்

* எள்

* துளசி

* சுரைக்காய்

* பருப்பு வகைகள்

* கொட்டை வகைகள்

* உலர்ந்த பழங்கள்

* ஓட்ஸ்

போன்றவைகளை முறையாய் உணவில் சேர்ப்பது தாய்ப்பாலினை அதிகரிக்கச் செய்யும்.

தாய்மை, தாய்பால் இவை இறைவன் படைப்பில் ஆச்சர்யங்கள் என்றாலும் முதல் பிரசவம் தாய்க்கும் ஒரு சவாலே. தாய்பால் கொடுப்பது இயற்கை என்றாலும் இந்த இயற்கைக்கு ஒரு அறிவுரை தேவைப்படுகின்றது.

* குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய் கொடுக்கும் முதல் பாலில் மிக நிறைந்த சத்துக்கள் உள்ளன.

* முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே வெறும் குழந்தைகள் வாழ்வின் சிறந்த ஆரம்பத்தினைப் பெறுகின்றார்கள்.

* இவர்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி சீராக இருக்கின்றது.

* மூச்சுப் பாதை நோய்கள், வயிற்றுப் போக்கு நோய்கள் போன்ற பல ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.

* இக்குழந்தைகள் மிக அதிகம் பெருப்பதில்லை. ஆஸ்த்மா, சர்க்கரை நோய் பாதிப்பு இவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை.

* தாய்பால் கொடுக்க முதலில் பொறுமை அவசியம். இது கவலையோடும், கண்ணீரோடும் இருக்கக் கூடாது.

* குழந்தை பிறந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு தாய்பால் கிடைக்க வேண்டும்.

* அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொள்ளை கொள்ளையாய் அடங்கி உள்ளது. முறையாக குழந்தை கையில் பிடித்து பால் குடிக்க பழக்க வேண்டும்.

* பொதுவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும் என்றாலும் குழந்தை தேவையென அழும் பொழுது பால் கொடுப்பது சிறந்தது.

* தாய்க்கு அதிக பால் சுரக்கும் பொழுது மார்பகங்கள் கனத்தும் வலியுடனும் இருக்கலாம். இதனைத் தவிர்க்க குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்கும் பொழுது இப்பிரச்சினை குறையும். அதற்குள் மருத்துவ உதவியும் பெற்று விடுங்கள்.

* பால் கொடுக்கும் முன் அதாவது சில நிமிடங்களுக்கு முன் வெது வெதுப்பான ஒத்தடம் கொடுங்கள்.

* பால் கொடுத்து முடித்த பின்னும் பால் கொடுக்க மணி முன்பும் மார்பகங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலி நிவாரணம் தரும்.

* சர்க்கரை தண்ணீர் கொடுப்பது தேவையற்றது.

* குழந்தைகள் குடித்த பாலை கக்குவது ஒரு வயது வரை இருக்கக் கூடியதுதான். என்றாலும் முறையாக பால் கொடுப்பதன் மூலமும், சற்று முதுகில் தட்டி ஏப்பம் விட வைப்பதன் மூலமும் இதனைத் தவிர்க்கலாம்.

* இருப்பினும் இது அதிகமாக இருந்தாலும், எடை கூடாது இருந்தாலும் மருத்துவ உதவி அவசியம்.

* மார்பக கிருமி பாதிப்பு உள்ளதா என்பதனை கவனிக்கவும். ஜுரம், வலியுடன் கட்டி, சிகப்பு போன்றவை உடனடி மருத்துவ உதவி வேண்டுபவை.

* முறையான உணவும், முறையான ஓய்வும் ஒரு தாய்க்கு அவசியம். தாய்ப்பால் குடிக்கும் பிறந்த குழந்தைகளுக்கு கடுமையான வெயில் காலத்திலும் உடல் நீர் வற்றுவதில்லை. ஆகவே அச்சிறு குழந்தைக்கு தனியாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.

* உங்களுக்கு சாதாரண ஜுரம் இருந்தாலும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்பால் கொடுக்கலாம். தாய்பால் மூலம் குழந்தைக்கு பரவுவது அரிது. ஆனால் நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

* கைகளை சுத்தமாக சோப் கொண்டு கழுவி விடுங்கள்.

* உங்களுக்கு சளி பிடித்திருந்தால் உங்கள் வாய், மூக்கினை டிஷ்யூ மாஸ்க் கொண்டு பால் கொடுக்கும் பொழுது மூடிக் கொள்ளுங்கள்.

* குழந்தையை முத்தமிடாதீர்கள்.

* பால் கொடுப்பதினை மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் என்றும் நிறுத்தாதீர்கள்.

* இதனால் பால் கட்டி ஜுரம் அதிகமாகும்.

* நீண்ட நாள் நிறுத்தினால் பால் சுரப்பதும் குறைந்து விடும்.

* மலச்சிக்கல் புட்டிபால் அருந்தும் குழந்தைகளிடம் அதிகம் இருக்கும்.

* பொதுவில் சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது புட்டிபால், திட உணவு ஆரம்பிக்கும் பொழுது, உடலில் நீர் வற்றுதல், மருத்துவ காரணங்களால் ஏற்படக் கூடும்.

* குழந்தையை படுக்க வைத்து இரு கால்களையும் சைக்கிள் விடுவது போல் சுழற்றுங்கள். பாட்டில் பால் கொடுக்கிறீர்கள் என்றால் சிறிது நீர் கொடுங்கள். ஒரு வயது ஆகி விட்டது என்றால் காய்கறி, பழங்கள் கொடுங்கள்.

மலச்சிக்கல் எளிதில் நீங்கும். குழந்தை வளர சத்து தேவை. அதுவும் வேகமாக வளரும் பொழுது அதிகம் தேவை. சில நேரங்கள் இவர்கள்.

* அதிகம் முறை தாய்ப்பால் கேட்கலாம்.

* நீண்ட நேரம் பால் அருந்தலாம்.

இது பொதுவில் வளர்ச்சியின் அறிகுறிதான். உங்கள் மருத்துவரும் இதனை விளக்குவார். ஆரோக்கியமாய் குழந்தை இருக்கும் வரை இது கவலைக்குரியது அல்ல.

* சளி, காதுவலி போன்ற நேரங்களில் உங்கள் குழந்தை அதிகம் தாய்பால் அருந்தலாம்.

* மற்றொரு கவலையும் தாய்மார்களிடம் உள்ளது. அதாவது மார்பக அளவிற்கும் தாய்பால் சுரப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

* தாய்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு நிமோனியா, சிறுநீர் குழாய் பிரச்சினை, எக்ஸிமா, காதுவலி போன்றவை கூட தாக்குதல் ஏற்படுத்துவதில்லையாம்.

* அதே போன்று தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு பிரிவு 2 இவை கூட அதிக தாக்குதலை ஏற்படுத்துவது இல்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

* பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் புற்றுநோய் எலும்பு தேய்மானம் என பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படுவது மிக குறைந்த அளவிலேயே உள்ளதாம்.

* தாய் பால் பல வகை சத்துகள் கொண்டது.

* தாய் பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்கு உள்ளது.

* குறை பிரசவமாக 8-9 மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், எடை குறைவாய் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலை விட சிறந்தது இல்லை.

* தாய்பால் கொடுப்பதால் தாயின் கருப்பை எளிதாய் சுருங்குகின்றது. இதனால் அதிக ரத்த போக்கு ரத்த சோகை ஏற்படுவது தவிர்க்கப்படு கின்றது.

* தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடை எளிதாய் குறைந்து விடும்.

* தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரக் குறைவு ஏற்படும் வாய்ப்பு குறைவு.



Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/105655