புகைபிடிக்கும் கர்ப்பிணிக்கு ஏற்படும் சில முக்கியமான சிக்கல்கள்:

* கருப்பைக்குள் குழந்தை இறந்து போய்விடுவது.

* தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படுவது.

* கருப்பையின் வாய் சிதைந்து போவது.

*எக்டோபிக் கர்ப்பம் அடைய வாய்ப்பு உள்ளது. இந்த வகையான கர்ப்பம் கருப்பைக்கு வெளியே கருவைத்தரிக்கும். இது மிகவும் ஆபத்தனது.

புகைப்பிடித்தல் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் புகையிலை ஏன் தவிர்க்க வேண்டும்:

* இது குழந்தையின் மூளை மற்றும் நுரையீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* கருப்பையில் இருக்கும் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கிறது.

* நிகோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுத்தன்மை காரணமாக ஆக்ஸிஜனின் அளவு குறைதல்.

* சிகரெட்டை புகைத்த பிறகு குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு கருப்பையில் குழந்தை எந்தவித செயல்பாடுகளையும் செய்யாது இருத்தல். (No Movement)

கர்பிணிக்கு அருகில் இருப்பவர்கள் புகைத்தல்

கர்ப்ப காலத்தில் தொடர்ந்து புகைபிடிப்பதன் காரணமாக பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சினைகள்:

* ஒரு குழந்தை பிறந்தபின்பு கூட, குடும்பம் அல்லது குடும்ப உறுப்பினர்கள் புகைபிடிப்பதைத் தொடர்ந்தால், அந்த குழந்தை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.

* தொடர்ந்து புகைப்பதினாலோ புகைப்பதை நுகர்வதினாலோ குழந்தைக்கு திடீர் இறப்பு ஏற்படும்.

* ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

* உடல் பருமன் அதிகரிக்கும்.

* குழந்தை பருவ புற்றுநோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற ஒவ்வாமைகள் ஏற்படும்.

* நுரையீரல் மற்றும் இதயம் பலவீமடையும்.

* பிறப்பு எடையானது குறையும். இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்யை ஏற்படுத்தும்.

Also see... Menstrual Hygiene Day 2019: உறிபஞ்சுகளை பயன்படுத்துவது எப்படி?

உலக மாதவிடாய் சுகாதார தினம் 2019 : மாதவிடாய் காலத்தில் கையாள வேண்டிய சுகாதார வழிகள்!

Also see...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

HealthlifestylePregnancy

மேலும் வாசிக்க

ஜெய் ஸ்ரீராம் என கோஷம்... கடுப்பாகி வாக்குவாதம் செய்த மம்தா பானர்ஜி...!

இந்தியா10 hours ago

ஜெய் ஸ்ரீராம் என கோஷம்... கடுப்பாகி வாக்குவாதம் செய்த மம்தா பானர்ஜி...!

பிரதமர் மோடி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை கூட்டம்!

இந்தியா15 hours ago

பிரதமர் மோடி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை கூட்டம்!

அமைச்சரான அமித் ஷா... பாஜகவின் அடுத்த தலைவர் யார்...?

இந்தியா16 hours ago

அமைச்சரான அமித் ஷா... பாஜகவின் அடுத்த தலைவர் யார்...?

மோடிக்கு எதிராக நேசமணியா? - காயத்ரி ரகுராம் கோபம்

பொழுதுபோக்கு1 day ago

மோடிக்கு எதிராக நேசமணியா? - காயத்ரி ரகுராம் கோபம்

Whatsapp Subscription

Loading...

அடுத்த செய்தி

புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஓட ஓட விரட்டுவது எப்படி? இதோ சில எளிய வழிகள்!

NEWS18 | MAY 31, 2019, 6:13 PM IST

புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஓட ஓட விரட்டுவது எப்படி? இதோ சில எளிய வழிகள்!

சிகரெட்டில் மொத்தம் 7,000 இரசாயணங்கள் இருக்கின்றன. அதில் 69 இரசாயணங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. ஒருவர் வெளியிடும் சிகரெட் புகை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காற்றில் கலந்து உலாவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதை சுவாசிக்கும் மக்கள் நுரையீரல் புற்றுநோய், தொடர்ந்து மூச்சு விடுவதில் சிக்கல், நுரையீரல் செயலிழத்தல் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது இந்தியா சுகாதார அமைச்சகம். இப்படி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய புகைப் பழக்கத்தை விட்டுவிடுவதே நல்லது. இனியும் யோசிக்காமல் உடனே கைவிட இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

தேதியை தேர்வு செய்யுங்கள்:

நீங்கள் புகைப்பழக்கத்தைக் கைவிட முடிவு செய்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்துகொள்ளுங்கள். அந்தத் தேதியை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரியபடுத்துங்கள். அதற்கு ஏற்ப அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

சுவிங்கம் சாப்பிடலாம்:

தற்போது சிகரெட் பழக்கத்தைக் கைவிட பல சுவிங்கங்கள் விற்கப்படுகின்றன. அதை அடிக்கடி வாயில் மென்று கொண்டே இருங்கள். இது உங்கள் சிகரெட் போதையை குறைக்கும். புகைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தாலும் இதை மென்று கொண்டிருந்தால் அந்த எண்ணம் மாறிவிடும்.

புகையிலை இல்லா சமூகம்:

புகைப்பதைக் கைவிடுவதற்கென்றே சில குழுக்கள் இருக்கின்றன. அந்த குழுக்களுடன் நீங்களும் சேர்ந்துகொண்டால், உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவியாக இருக்கும். அங்கு சில குறிப்புகள், புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், அதனால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் என சில ஆக்டிவிடீஸ் இருக்கும். அவற்றை சரியாக பின்பற்றினாலே நிச்சயம் புகைப்பிடிப்பதை விட்டுவிடலாம்.

சிகரெட் நினைவுகள் வேண்டாமே!

உங்கள் வீடு, கார், பைக், அலுவலகம், உங்கள் அறை இப்படி எந்த இடத்திலும் சிகரெட்டை நினைவுபடுத்தும் விஷயங்கள் இருந்தால் அதை முற்றிலுமாக மறந்துவிடுவது நல்லது. உங்கள் நண்பர்களுக்கு புகைப்பழக்கம் இருந்தாலும் அவர்களிடம் அதுகுறித்து பேச வேண்டாம் என்று கூறிவிடுவது நல்லது. புகைப்பிடிப்பவரின் அல்லது பிடித்தவரின் அருகில் செல்வதை தவிர்க்கலாம். அந்த வாசனையும் உங்களை ஈர்க்க வாய்ப்புள்ளது.

சிந்தனைகளை மடைமாற்றுங்கள்:

சிகரெட் பழக்கத்தை அறவே ஒழிக்க ஏதேனும் பயிற்சி வகுப்புகள் செல்லலாம். நீச்சல், உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட், ஃபுட்பால் என உங்கள் சிந்தனைகளை வேறு திசைகளுக்கு மாற்றுவது சிறந்தது.

smocking , புகைப்பிடித்தல்

மருத்துவரை அணுகலாம்:

மேலே சொன்னது எதுவும் எடுபடவில்லை என்றால் இறுதியாக மருத்துவரிடம் செல்லலாம். ஆனால் எக்காரணத்திற்காகவும் உங்கள் முடிவிலிருந்து பின் வாங்காதீர்கள். மருத்துவர் நிச்சயம் உங்களின் குறைகள், எதிர்பார்ப்புகளை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பார்.

சிகரெட் குறித்த நினைவு வந்தால் என்ன செய்வது?

தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதன் ஞாபகம் வரலாம். ஆனால், அது 3 முதல் 5 நிமிடங்களுக்கு மட்டுமே வந்து போகும். அந்த நிமிடங்களைக் கடந்தாலே போதும், புகைபிடிப்பதை விட்டுவிடலாம்.

சிகரெட் பிடிக்கவேண்டும் என்று தோன்றினால், மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள். மூக்கு அல்லது வாயை நன்கு திறந்துகொண்டு மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள். அந்த நேரங்களில் கண்களை மூடி உங்கள் நுறையீரலில் தூய காற்று நிறம்புவதை கற்பனை செய்து பாருங்கள். இதுபோல தொடர்ந்து செய்வது நல்லது.

அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதும் நல்லது.

உங்களை எப்போதும் பிசியாகவே வைத்துக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் பேசுங்கள். இருக்கும் வேலைகளை இழுத்துபோட்டு செய்யுங்கள். உங்களை நீங்களே தொந்தரவு செய்துகொண்டே இருங்கள். ஒருபோதும் உங்கள் முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்தால், புகைபிடிக்கும் பழக்கம் உங்களை கைவிட்டுவிடும்.

இதையும் படிக்க :

புகையிலை பயன்பாடு உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து..!

புகைப்பிடிப்பதால் கண் பார்வை பறிபோகும் ஆபத்து! ஆய்வில் தகவல்

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Health tipsQuit SmokingSmoking

மேலும் வாசிக்க

தலைமுடி உதிர்தலை தடுக்க இவைதான் சரியான வழிகள்!

லைஃப்ஸ்டைல்2 hours ago

தலைமுடி உதிர்தலை தடுக்க இவைதான் சரியான வழிகள்!

இந்த உணவுகளை உண்டால் உங்கள் முகம் ஜொலிஜொலிக்கும்..!

லைஃப்ஸ்டைல்2 days ago

இந்த உணவுகளை உண்டால் உங்கள் முகம் ஜொலிஜொலிக்கும்..!

அதிகளவில் ஹெர்பல் பயன்படுத்துவது பாதிப்பை உண்டாக்குமா... என்ன சொல்கிறது ஆய்வு!

லைஃப்ஸ்டைல்2 days ago

அதிகளவில் ஹெர்பல் பயன்படுத்துவது பாதிப்பை உண்டாக்குமா... என்ன சொல்கிறது ஆய்வு!

முழு செய்தியை வாசிக்க

Loading...

அடுத்த செய்தி

புகையிலை பயன்பாடு உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து..!

NEWS18 | MAY 31, 2019, 2:13 PM IST

புகையிலை பயன்பாடு உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து..!

உலக சுகாதார அமைப்பு புகையிலைப் பிடிப்பவர்களால் ஒரு வருடத்திற்கு 60,000 குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை எட்டும் முன்னரே இறந்து விடுவதாகத் தெரிவிக்கிறது.

இதில் என்ன ஆச்சரியமென்றால் இப்படி புகையிலையைப் பிடிப்பதால் தனக்கு மட்டுமன்றி தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்பது புகையிலைப் பழக்கம் கொண்டவர்களுக்கும் தெரியும். இருப்பினும் தன் சுயஇன்பத்திற்காக இந்த செயலைச் செய்வது இரக்கத்தின் இறப்பு நிலையை உணர்த்துகிறது.

புகையிலை மொத்தம் 7,000 இரசாயணங்கள் உள்ளடக்கியிருக்கிறது. அதில் 69 இரசாயணங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. ஒருவர் வெளியிடும் சிகரெட் புகையானது கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காற்றில் கலந்து உலாவரும் தன்மைக் கொண்டது. அதை சுவாசிக்கும் மக்கள் நுரையீரல் புற்றுநோய், தொடர்ந்து மூச்சு விடுவதில் சிக்கல், நுரையீரல் செயலிழத்தல் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது சுகாதார அமைச்சகம்.

” இளைஞர் ஒருவர் சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னையால் பாதிக்கப்படுகிறார் என்றால் அது அவரின் குழந்தைப் பருவத்தில் சுவாசித்த புகையிலையால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பே காரணம்” என்கிறது உலக சுகாதார அமைச்சகம்.

Loading...

வேறு வழியில் சொல்வதானால் “நீங்கள் புகையிலைப் பிடிப்பதில்லை என்று கர்வமாக இருக்காதீர்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் அதிலிருந்து தப்பித்துவிட்டதாக அர்த்தமில்லை. உங்களுக்கு அருகில் இருப்பவர் புகைப்பிடிப்பதாலும் உங்களுக்கு கடுமையான நோய் வரும்” என்று கூறுகிறது சுகதார அமைச்சகம்.

அதேபோல் குழந்தையை ஈன்ற அல்லது கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு புகைப்பழக்கம் இருந்தாலோ அல்லது மற்றொருவரின் புகைப்பழக்கத்தால் தொடர்ந்து அந்த புகையை சுவாசிக்க நேர்ந்தாலோ நுரையீரல் வளர்ச்சி பாதிப்பதோடு அதன் செயல்பாடுகளும் குறைந்துவிடும் என்று உலக சுகாதார அமைச்சகம் தாய்மார்களை எச்சரிக்கிறது.

தன்னுடைய அப்பா , உறவினர், அருகில் இருப்பவர்கள் யாருக்கேனும் புகையிலைப் பழக்கம் இருந்தால் அந்தப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள் அல்லது சிறுவர்களுக்கு ஆஸ்துமா, நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் அடிக்கடி குறைந்த சுவாச நோய்கள் போன்றவை ஏற்படும் எனத் தெரிவிக்கிறது.

இளைஞர்களாக இருப்பின் அவர்களுக்கு கரோனரி இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்று நோய் போன்ற நோய்கள் வரும்.

புகைப்பிடிப்பதால் கண் பார்வை பறிபோகும் ஆபத்து! ஆய்வில் தகவல.


Miga arumaiyana padhivu


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/108037