#BBCreatorsClub
#PREGNANCY
#BREASTFEEDING
#DIET
#TODDLERDEVELOPMENT
#Breastfeeding recepie
#TamilNadu
முருங்கைக்காய் கரி
தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு உகந்தது. முருங்கைக்காயில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கையை உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் 2nos
வெங்காயம் ,பொடியாக நறுக்கியது 1nos
பூண்ட உரித்து 4பல்
தக்காளி பொடியாக நறுக்கியது 2nos
மஞ்சள் தூள் 1 tsp
பெருங்காயம் 1 tsp
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
பொடி செய்ய:
(கொர கொர வென்று பொடி செய்து வைக்கவும்)
மிளகு 1tbs
தனியா 1tsp
ஜீரகம் 1 tsp
தாளிக்க:
எண்ணெய் 1 tbp
கடுகு 1/2 tsp
ஜீரகம் 1/2 tsp
செய்முறை:
○மிளகு, ஜீரகம் மற்றும் தனியாவை லேசாக வறுத்து ,ஆரவைத்து பொடி செய்து வைக்கவும்.
○அடுப்பை மூட்டி ,கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பின்பு கடுகு ,ஜீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.
○இதில் மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு செர்த்து ஒன்று சேர வதக்கவும்.
○நன்கு வதங்கியவுடன் முருங்கை காய் சேர்த்து வேகவைக்கவும்.
○அனைத்தும் நன்கு கொதித்து, வதங்கியவுடன், வறுத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
Recommended Articles
BabyChakra User
Super. My favorite poriyal.