தாய்ப்பால் , அன்னைக்கும் கிள்ளைக்கும் இடையில், ஓர் ஈடிணையற்ற அற்புதமான பாசத்தினையும், பந்தத்தினையும் ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதை அனுபவித்தவர்கள்,அனுபவிப்பவர்கள் ஏராளம்.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் சுரக்கும் முதல் பால் colostrum; ; என்றழைக்கப்படுகிறது. இந்த பால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய முதல் உணவு ஆகும். இதில் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பி உள்ளன.

குழந்தைக்கு பால் கொடுக்க துவங்கும் முதல் சில நாட்களுக்கு புண்கள் (sores) ஏற்படலாம். குழந்தை சரியாக வாய் வைத்து குடிக்கும் வரை, பிளவுகள் ஏற்பட்டு வலி ஏற்படலாம். இதற்கு பயந்தே, பெரும்பாலான பெண்கள் பால் கொடுக்காது, பால் பவுடர்கள் மற்றும் formula க்களை நாடுகின்றனர்.

இந்த வலிக்கு தீர்வாக பலவகையான nipple cream கள் கிடைக்கின்றன. மருத்துவரின் பரிந்துரையை கேட்டு, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிறந்த குழந்தைக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில், பால் புகட்டுதல் வேண்டும். பகல் வேளைகளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையும், இரவு வேளைகளில், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையும் பால் புகட்டுதல் வேண்டும். பிறந்த குழந்தை, பெரும்பாலான நேரம் உறக்கத்தில் இருக்கும். குறிப்பிட்ட நேர இடைவெளியில், உறக்கத்தில் இருந்து எழுப்பி, பால் தர வேண்டும்.

உறங்கும் குழந்தையை எழுப்ப, அவர்களது உடைகளை தளர்த்தி விடலாம். டயாபர் அணிவித்திருந்தால், டயாபரை கழற்றினால், குழந்தை விழித்துக் கொள்ளும். சமயங்களில், உறக்க அசதியில், குழந்தைகள் சரியாக பால் குடிக்காமல், உறங்கி விடுவார்கள். அது போன்ற சமயங்களில், அவர்களின் உறக்கத்தை கலைக்கும் விதமாக, உள்ளங்காலில் வருடி விட்டால், விழித்துக்கொண்டு விடுவார்கள். சரியாக பால் குடிக்காது உறங்கினால், இரண்டு மணிநேரம் கூட உறங்காமல், விழித்துக்கொண்டு அழுவார்கள் பிள்ளைகள்.

பால் குடித்து முடித்ததும், குழந்தையை தோளில் போட்டோ, அல்லது, நேராக அமர வைத்தோ, முதுகினை தடவி, ஏப்பம் போடச் செய்ய வேண்டும்.

சில பிள்ளைகள், இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒருதரம் அவர்களாகவே எழுந்து விடுவார்கள். சில பிள்ளைகள், எழுப்பி, உடை மாற்றினால் விழிப்பார்கள்.சில பிள்ளைகள், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். அவர்களை எழுப்புவது அவ்வளவு சுலபமான காரியமாக இராது.

இப்படி, நீண்ட நேரம் பால் குடிக்காது உறங்கும் பிள்ளைகட்கு, மயக்கம் ஏற்படும் என்று கேள்விப்பட்டதுண்டு. இது உண்மையா? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.

வெளியிடங்களில், இப்போது சமீப காலமாக, தாய்ப்பால் ஊட்டும் அன்னையர்க்கு வசதியாக, பாலூட்டும் அறைகள், டயாபர் மாற்றுவதற்கு வசதிகள், breastfeeding stations இருக்கின்றன.இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கது.

கிள்ளையுடனான அன்னையின் உறவு என்றும் இனிமையானதாக அமையட்டும்.

#அன்னைமனம்

#tamilbabychakra

#mybreastfeedingjourney

#mybreastfeedingstory

#breastfeeding

#breastfeedingfacts

#breastfeedinginpublic


Arumaiyana thagaval.

revauthi rajamani

Ungalludia experience ah yum share seinga ma.

அருமை

#bbccreatorsclub

#BBCreatorsClub


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/120849