ஒருமுறை, பெரிய பிள்ளையுடன், பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது. வீட்டிலிருந்து கிளம்பையில், பால் புகட்டி விட்டு, குழந்தைக்கு தேவையான திட உணவையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். பள்ளியில் புதிய சூழ்நிலை கண்டு, குழந்தை மிரண்டதோ, இல்லை,அரைத்தூக்கத்தில் விழித்துக் கொண்டதோ, தெரியவில்லை. ஒரே அழுகை. சமாதானம் செய்ய இயலவில்லை. திட உணவையும் உண்ண மறுத்து அழுதது குழந்தை. பால் புகட்டுவதே ஒரே வழி.ஆனால், பள்ளியில் கைக்குழந்தைக்கு எங்கு வைத்து புகட்டுவது?
ஓர் யோசனை தோன்ற, காருக்கு வந்தேன். காரில் பயன்படுத்தும், sunshade sheet னை , முன் கண்ணாடியை மறைக்குமாறு விரித்து விட்டு, உள்ளே அமர்ந்து பால் புகட்ட, சற்று நேரத்தில், குழந்தையும் உறங்க, பெரிய பிள்ளையின், பள்ளி நிகழ்ச்சியும் நிறைவு பெற, நானும் பிள்ளைகளுடன், மனநிறைவுடன், மகிழ்வுடன் வீடு திரும்பினேன்.
#அன்னைமனம்
#tamilbabychakra
#mybreastfeedingjourney
#mybreastfeedingstory
#breastfeeding
#breastfeedingfacts
#breastfeedinginpublic
Recommended Articles
BabyChakra User
நான் எல்லா இடத்திலும் பால் கொடுப்பேன். எனது மார்பகம், எனது குழந்தை ,எனது உறிமை. அருமையான பதிவு தோழி.