தாய்மையின் பயணம் என்பது ஓர் அற்புதமான நிகழ்வு.தந்தைக்கும் தாய்க்கும் மகளாய் இருப்பதைவிட கணவருக்கு தாரமாய் இருப்பதைக்காட்டிலும் ஒரு படி மேலானது தாய்மை.கருவானது உருவாகிடும் தருணம் பல பொறுப்புகளை தானாகவே சுமப்பதற்கு தாய்மையின் குணம் ஒரு பெண்ணிற்குள் ஆரம்பமாகும்.சிசுவிற்காக ஈரைந்து மாதங்கள் பல இன்னல்களை தாண்டி பிரசவிக்கும் பொழுதில் இடுப்பெழும்பில் யாரோ அடிப்பதைப்போன்ற அந்த நொடியிலும்"நல்லபடியா என் குழந்தையை இந்த உலகத்திற்கு கொண்டுவரவேண்டும்" என்ற எண்ணம் தாயைத்தவிற யாரிடமும் இருக்காது.

உலக தாய்ப்பால் வாரம் என்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் கொண்டாடப்படுகிறது.இது எதற்காக என்று பலருக்கு கேள்விகள் தோன்றலாம்.தாய்ப்பாலை சுரப்பதற்கு பெண்ணின் உடலானது கர்ப்பகாலத்திலேயே தயாராகிறது.பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலை தாயானவள் புகட்டுகிறாள்.அந்த நிமிடம் அவளுக்குள் ஏற்படும் மகிழ்ச்சி கட்டுக்குளடங்காதது.தான் ஈன்றெடுத்த செல்வம்(குழந்தை) தன்னிடம் அடைக்கலம் புகுவதாய் அந்த தாய் உணர்வாள்.உணவே மருந்து என்பார்கள் அத்தகைய மருந்து முதலில் தாயிடமிருந்துதான் கிடைக்கிறது.எல்லாவிதமான எதிர்ப்புசக்திகளையும் கொண்டது தாய்ப்பால்தான்.இதனால்தான் தாய்ப்பாலை தவிர்த்து தண்ணீர்கூட குழந்தைக்கு கொடுக்க வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.தாய்மைக்காக கொண்டாடப்படும் இந்த நிகழ்வு மகிழ்ச்சியளிக்கக்கூடியதுதான்.

தாய்ப்பால் என்பது வரம் .இத்தகைய அழகிய தருணத்தை கண்டிராமல் எத்தனை தாய்மார்கள் வருந்துகிறார்கள்.கர்ப்பகாலத்திலேயே சமச்சீரான உணவுகளை உண்டு தாயானவள் தன் உடலை தயார்படுத்தினால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.அன்பையும் பண்பையும் தாய் அந்த குழந்தைக்கு தந்திட தாய்ப்பால் உதவிபுரியும்.தாய்க்கும் சேய்க்கும் உண்டான அழகான பந்தமிது அவள் புகட்டும் பாலில் தான் ஆரம்பமாகிறது.இதில் தாய்க்கும் சேய்க்கும் ஒரு பிணைப்பு உருவாகிறது.தாயிற் சிறந்த கோவிலில்லையே.

பிரசவம் முடிந்த பின்னர் தாயான பெண்ணிற்கு பல மனச்சோர்வு உண்டாகும் அத்தகைய சமயம் அவளுக்கு நல்ல அமைதியான சூழலை அமைத்துக்கொடுப்பதில் குடும்பத்தினர்க்கும் பங்கு உண்டு.அவளுக்கென முன்னுரிமை தருவது அவசியம்.பால்புகட்டும் தாய்க்கு பல்வேறு கோணங்களில் உதவி செய்யலாம்.குழந்தை அழுதிடும் சமயம் அவளை பால்புகட்ட சொல்லிவிட்டு சமையலை சிறிது நேரம்கவனித்து கொள்ளலாம்,குழந்தையை சிறிது நேரம் நாம் பார்த்துக்கொண்டு அவளை ஓய்வெடுக்கச்சொல்லலாம்.அவளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கொடுத்து உண்ணச்செய்வதும் குடும்பத்தினரின் கடமையாகும்.பல பெண்கள் குடும்பத்திற்காக பார்த்து பார்த்து சமைத்தாலும்அவர்கள் சத்தான உணவுகளை உண்ண மறந்துவிடுகிறார்கள்.குடும்பத்தை கவனிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறையில் பாதியை அவர்களுக்கு நாம் காட்டுவது அவசியம் தானே.கணவன்,மாமியார்,மாமனார் என குடும்பத்தில் அனைவரும் அவளுக்கு உறுதுணையாயிருப்பது தாய்மைப்பயணத்தை இன்னும் அழகாக்கிடும்.

பணியிடங்களில் தாய் தன் குழந்தையை அழைத்துச்செல்லுமாறு வசதி செய்து கொடுக்கலாம்.நேரத்திற்கு பால் புகட்டுவதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது இவையெல்லாம் மேலைநாடுகளில் பின்பற்றுகிறார்கள் நாமும் அதை பின்பற்றினால் நல்லதுதானே.பணிபுரியும் தாய்மார்களுக்கு அதீத கவலையும் நெருக்கடியும் உருவாகாமல் பார்த்துக்கொண்டால் அவர்கள் செய்யும் பணியும செவ்வன சிறக்குமே.

தாய்ப்பால் தருவதால் தங்கள் ஆழகு குறைந்துவிடும் எனப்பலப்பெண்கள் கருதுகிறார்கள்.உண்மையை சொல்லப்போனால் தாய்ப்பால் தருவது தாய்க்கும் சேய்க்கும் இருவருக்கும் நன்மைபயக்கும் செயலாகும்.

புட்டிப்பால் கொடுப்பது தவிர்ப்பது நல்லது .பசுமாட்டின் பாலானது அதன் கன்றுக்கு செரிமானமாகும் வகையில்தான் இருக்கும்.இதன் ஒவ்வாமைதான் குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால்தான் சிறந்த உணவு .

தினமும் தாயானவள் எட்டு முதல் பத்து முறையாவது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும் சரியாக சொல்லப்போனால் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை என கணக்கு வைத்து தருவது அவசியம்.ஆறுமாத காலங்கள் தாய்ப்பால் மட்டுமே தருவது நல்லது.திட உணவு கொடுக்கும் ஆறு மாதத்திற்கு பிந்தைய காலங்களிலும் இடையிடையே தாய்ப்பால் புகட்டலாம்.

நிறைய பேர் பால் பற்றவில்லை குறைவாக வருகிறது என்று கூறக்கேட்டிருப்பீர்கள்.ஆனால் தாயின் திடமான நம்பிக்கை தாய்ப்பாலை பெருகச்செய்யும்."என்னால் என் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க இயலும்"என்ற உறுதி இருந்தால் போதும்.எப்படிப்பட்ட தாயாலும் தன் மகவுக்கு பாலூட்ட இயலும்.

தாய்ப்பால் தருவதால் தாய்க்கு ஏற்படக்கூடிய நன்மைகள்:

*மார்பக புற்றுநோயை முற்றிலும் தவிர்க்கலாம்.

*பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் எடை அதிகரிப்பு ஒரு கட்டுக்குள் வந்திடும்.

*ஆரோக்கியமான உடல்நிலையை உணரலாம்.

*உங்கள் குழந்தையுடனான பிரியம் அதிகரிக்கும்.

சேய்க்கு தாய்ப்பாலினால் ஏற்படக்கூடிய நன்மைகள்:

*நோயெதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

*குழந்தையின் மூளைத்திறன் பண்மடங்காய் பெருகிடும்.அதிபுத்திசாலியாக விளங்குவார்கள்.

*ஜீரன சக்தியை அதிகரிக்கும் குழந்தைக்கு வயிற்றில் உபாதையென்று மருத்துவமனைக்கு அடிக்கடி அழைத்துச்செல்வது குறையும்.

*பாசப்பிணைப்போடு தாயிடம் இருப்பார்கள்.

தாய்மையை போற்றுவோம் ,தாய்ப்பால் தந்திடும் தாய்க்கு பக்கபலமாய் நின்றிடுவோம்.தாய்மையின் இனிமையான சூழலை இன்பத்தோடு அவள் தொடங்கிட கைக்கொடுப்பது குடும்பத்தினரின் கடமையும் சுற்றத்தாரின் ஆதரவு முக்கியம்தானே தோழிகளே .#bbccreatorsclubSuggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/122996