மேஷம்:

சந்தோ‌ஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உங்கள் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்:

முன்னேற்றம் அதிகரிக்க முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடிவருவர். கொடுக்கல்–வாங்கல்களை ஒழுங்குபடுத் திக் கொள்ள முன்வருவீர்கள்.

மிதுனம்:

விரோதிகள் விலகிச் செல்லும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். தொழில் ரீதியாக மேற்கொண்ட பயணம் தொகையை வழங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கடகம்:

மகிழ்ச்சி பெருக மயில்வாகனத்தானை வழிபட வேண்டிய நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். வெளிநாட்டு முயற்சி கைகூடும்.

சிம்மம்:

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்திதரும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். கொடுக்கல்– வாங்கல்களில் ஏற்பட்ட குறைபாடுகள் அகலும்.

கன்னி:

ஆதாயத்தை விட விரயங்கள் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனு சரித்துச் செல்வது நல்லது. சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல் நலனில் கவனம் தேவை.

துலாம்:

எதிரிகளின் பலம் கூடும் நாள். லாபம் வருவதில் தடைகள் ஏற்படலாம். வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.

விருச்சிகம்:

காரிய வெற்றிக்கு கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். பயணங்களால் பலன் உண்டு. வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். கடமையிலிருந்த தொய்வு அகலும். கல்யாண முயற்சி கைகூடும்.

தனுசு:

உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூ லாகிப் பரவசப்படுத்தும். கடன்சுமை குறைய நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர்.

மகரம்:

கார்த்திகேயனை வழிபட்டு கவலையைப் போக்கிக் கொள்ள வேண்டிய நாள். நண்பர் கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப் பர். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரி வடையும். உயரதிகாரிகளால் நன்மை உண்டு.

கும்பம்:

பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். தொழில் வளர்ச்சி பெருக அனுபவமிக்கவர்களின் ஆலோகனை களைக் கேட்பீர்கள். சுபச்செலவு உண்டு.

மீனம்:

தைரியமும், தன்னம்பிக்கைகூடும் நாள். தனவரவு திருப்தி தரும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

#horoscope #dailyhoroscope


Virchagam romba super.

Yenodathu viruchigam dha mam


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/131892