மேஷம்:

நண்பரின் ஆலோசனை புதிய நம்பிக்கையை தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க மாற்று உபாயம் பயன்படுத்துவீர்கள். கூடுதல் பணச்செலவு ஏற்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

ரிஷபம்:

உங்களின் மனக்குறையை பிறரிடம் சொல்ல வேண்டாம். இதனால் சுயகவுரவம் பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் பணி சுமை அதிகரிக்கும்.அளவான பணவரவு கிடைக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது.

மிதுனம்:

உங்களின் நற்செயல் கண்டு புதியவர் அன்பு பாராட்டுவர். மனம்,செயலில் புத்துணர்வு பிறக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்:

உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். தொழிலில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை எதிர்கால நன்மைக்கு வழி தரும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

சிம்மம்:

உறவினருக்கு முன்னர் செய்த உதவிக்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனையில் திருப்திகரமான நிலை உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். நித்திரையில் இனிய கனவு வரும்.

கன்னி:

திட்டமிட்ட பணியில் மாற்றம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு வேண்டும். விஷ பிராணிகளிடம் விலகுவது நல்லது.

துலாம்:

உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் நற்செயலை மனமுவந்து பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.

விருச்சிகம்:

உங்கள் பேச்சில் அதிக அன்பும், பண்பும் கலந்திருக்கும். முக்கியஸ்தரின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு பெறுவீர்கள். பெண்கள் பண வசதிக்கேற்ப புத்தாடை, நகை வாங்குவர்.

தனுசு:

தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணி சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் அவசியம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மகரம்:

உறவினரில் சிலர் எதிர்பார்ப்புடன் அணுகுவர். உங்களால் இயன்ற அளவில் உதவுவீர்கள். மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

கும்பம்:

வாழ்வில் பெற்ற நன்மைகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

மீனம்:

பொது நல பணியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் இருந்த குளறுபடி சரியாகும். தாராள பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

#horoscope #dailyhoroscopeSuggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/132805