மேஷம்:

நந்திவழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். வாரிசுகளுக்கு வேலை கிடைத்து வருமானம் கூடுதலாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பு உண்டு.

ரிஷபம்:

குதூகலம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சந்தோ‌ஷத்தை வழங்கும்.

மிதுனம்:

சிந்தனைகள் வெற்றிபெற சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியநாள். குடும்பத்தில் குது£கலம் தரும் சம்பவ மொன்று நடைபெறும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

கடகம்:

வருமானம் திருப்தி தரும் நாள். வசதிகளை பெருக்கிக்கொள்ளமுன்வருவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு. உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வரன்கள் வாயில் தேடிவரும்.

சிம்மம்:

புதிய முயற்சியில் வெற்றிகிடைக்க பொறுமை தேவைப்படும்நாள். வழக்கமாகச் செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும்.

கன்னி:

நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டு. வரவு திருப்தி தரும். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும்.

துலாம்:

தொழில் போட்டிகள் அகலும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இடம், வீடு வாங்கத் தீட்டியதிட்டம் நிறைவேறலாம். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம்:

பெருமைகள் வந்துசேர பிரதோ‌ஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறு வதற்கான அறிகுறிகள் தோன்றும். முன்னோர் சொத்துகளில் லாபம் கிடைக்கும்.

தனுசு:

ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். அனைத்து வேலைகளும் உடனடியாக முடியாமல் இழுபறி நிலையில் இருக்கும். மதியத்திற்குமேல் மனஅமைதி கூடும். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும்.

மகரம்:

நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ளவேண்டிய நாள். எந்தச் செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்வது நல்லது. பணப்பற்றாக்குறையை சமாளிப்பது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

கும்பம்:

இன்னல்கள் தீர ஈசனை வழிபட வேண்டிய நாள். திருமண முயற்சி கைகூடும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பகலிரவாகப் பாடுபட்டதற்கு ஏற்றபலன் கிடைக்கும். உத்தி யோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

மீனம்:

பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். எதிர்காலநலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.

#horoscope #dailyhoroscopeSuggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/132826