சத்தான கேழ்வரகு பாதாம் கஞ்சி!!

கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. இப்போது இந்த கேழ்வரகுடன் பாதாம் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

கேழ்வரகு - 300 கிராம்

பாதாம் பருப்பு - 150 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

மோர் - 4 டம்ளர்

சின்ன வெங்காயம் - 10

சீரகம் - 2 டீஸ்பு+ன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 4

கடுகு - 2 டீஸ்பு+ன்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

🌾 முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்ட வேண்டும். பிறகு முளை கட்டிய கேழ்வரகை வாணலியில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்கு சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

🌾 பின்னர் இந்த கேழ்வரகு கலவையை அடுப்பில் வைத்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். பின் அதனுடன் பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும். நன்றாக கொதித்து கேழ்வரகு வெந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

🌾 கடைசியாக ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சு+டானதும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கேழ்வரகில் சேர்க்கவும். அதனுடன் மோர், கொத்தமல்லித்தழை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறினால், உடலுக்குக் குளிர்ச்சி தரும் கேழ்வரகு பாதாம் கஞ்சி தயார்.


Romba useful


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/133252