👉 காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில் தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி வீணாக்காமல், துவையல் செய்து சாப்பிடுவதால் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
👉 பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
👉 பு+ண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீர்pல் கழுவினால் துர்நாற்றம் இருக்காது.
👉 பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு சாப்பிடலாம்.
👉 சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல், முளை வராமல் இருக்கும்.
👉 வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத்துணியை போட்டு மூடி வைத்தால் காய்கறிகள் வாடாமல் இருக்கும்.
👉 கறிவேப்பிலை செடிக்கு புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும்.
👉 துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாமல் தடுக்கலாம்.
👉 வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத்துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.
#babychackra
#superfoods
Recommended Articles
BabyChakra User
#rebeccaprakash #ravauthirajamani